பகுப்பு பேச்சு:கேரள மாநிலத்திலுள்ள கிராமங்கள்
@Arularasan. G: வணக்கம். Villages என்பதனை சிற்றூர்கள் என எழுதியது குறித்து மகிழ்ச்சி. கேரளச் சிற்றூர்கள் என்பதாக ஒற்று வரும்படி எழுதவேண்டும் என நினைக்கிறேன். அத்தோடு, கேரளச் சிற்றூர்கள் என்றழைப்பது இலக்கிய நடையில் இருப்பதாகத் தோன்றுகிறது. சீராக இருப்பதற்காக கேரள மாநிலத்திலுள்ள சிற்றூர்கள் (அல்லது) கேரளத்திலுள்ள சிற்றூர்கள் என்பதாக பரிந்துரை செய்கிறேன். (பகுப்பு:கேரள மாநிலத்திலுள்ள கிராமங்கள் எனும் பகுப்பு ஏற்கனவே இருந்தாலும், பயனர்களின் கருத்துக்களின் அடிப்படையில் தேவைப்படும் மாற்றங்களை செய்துகொள்வோம்)
@Nan and Kanags: உங்களின் பார்வைக்கு. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:43, 1 மே 2024 (UTC)
@Kanags: இலங்கையில் villages, தமிழில் எவ்வாறு அழைக்கப்படுகின்றன என்பதனை அறிந்துகொள்ள விரும்புகிறேன். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:47, 1 மே 2024 (UTC)
விக்கித் தரவில் பகுப்பு:கேரள மாநிலத்திலுள்ள கிராமங்கள் என்ற பகுப்பு இணக்கப்படாத காரணத்தினால், ஏற்கனவே ஒரு பகுப்பு உள்ளதை அறியாமல் இந்தப் பகுப்பை உருவாக்கினேன். உங்களுக்கு எந்த மாற்றம் சரி எனப்படுகிறதோ அதை செயல்படுத்த எந்த மறுப்பும் இல்லை நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 10:58, 1 மே 2024 (UTC)
- இதனைப் பாருங்கள்: பேச்சு:ஊர்.--Kanags \உரையாடுக 11:27, 1 மே 2024 (UTC)
- @Kanags பயனுள்ள கலந்துரையாடல்; மிக்க நன்றி. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:50, 1 மே 2024 (UTC)