பகுப்பு பேச்சு:காலக்கெடு உள்ள நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • மூன்று வரி உள்ள கட்டுரைகள் எந்தக் கொள்கையின் அடிப்படையில் நீக்கல் வார்ப்புரு சேர்க்கப்பட்டன என்று தெரியப்படுத்தவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 20:51, 15 ஏப்ரல் 2014 (UTC)
  • வளர்ந்துவரும் நம் இணையத்தமிழ் சமூகத்தில், இதுபோல பொதுத்திட்டங்களில் எழுதுபவர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். எனவே, கட்டுரை உருவாக்குனர்களுக்கு, மேம்படுத்த வேண்டுகோள்களை தொடர்ந்து முன்வைக்கலாம். நீக்குதல் சிறந்த கொள்கையல்ல. அது நம் சமூக வளர்ச்சிக்கு தடைகளையே ஏற்படுத்தும். அடிக்கடி இங்கு ஆவியில் இருந்து எடுத்துக்காட்டுகள் காட்டப்படுகின்றன. அங்கும் இதுபோல பல்லாயிரகணக்கான குறுங்கட்டுரைகள் பேணப்படுவதை எண்ணவும்.--≈ உழவன் ( கூறுக ) 02:14, 20 ஏப்ரல் 2014 (UTC)
  • வார்ப்புருவை இடும்போது கட்டுரை தொடங்கியவருக்கு தனிச் செய்தி அனுப்பினால் அக்கட்டுரையை அவர் மேம்படுத்த வாய்ப்பிருக்கிறது. மேலும் நான் எழுதிய ஜிசாட்-8 கட்டுரை நீக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. அறிவியல் கட்டுரைகளையும் நீக்க வேண்டுமா என்ன? தொடக்க காலத்தில் எழுதிய சில கட்டுரைகள் சரியான விக்கி விதிகளுடன் பொருந்தாமல் இருக்கலாம். அவற்றை மேம்படுத்தக் கட்டுரையைத் தொடங்கியவருக்கு வாய்ப்பளிக்கலாம். மேலும் நான் எழுதிய எல்லாக் கட்டுரையும் எனது கவனிப்புப் பட்டியலில் இல்லை. எனவே வார்ப்புரு இட்ட தகவலும் தெரிவதில்லை. :( --ஆர்.பாலா (பேச்சு) 02:52, 6 சூன் 2014 (UTC)[பதிலளி]
ஆர்.பாலா, ஜி சேட்-8 கட்டுரையை மீட்டுள்ளேன். இப்போது நீங்கள் அதனை மேம்படுத்தலாம். போதிய உள்ளடக்கம் இல்லை என்று நீக்குவது அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தும். எனினும், நீக்குவதற்கு முன் அதனை மேம்படுத்த முனைவது வரவேற்கத்தக்கது. சில வேளை, கட்டுரைகளை உருவாக்கியவரின் பக்கத்தில் தகவல் தருவது குறை கூறுவதாக புரிந்து கொள்ளப்படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டி இருக்கிறது. --இரவி (பேச்சு) 03:39, 6 சூன் 2014 (UTC)[பதிலளி]
இன்று காலை மீண்டும் புதியதாக ஜிசாட்-8 கட்டுரையை எழுதிவிட்டேன். எனவே இதை நீக்கிவிடலாம் :) நன்றி. --ஆர்.பாலா (பேச்சு) 03:48, 6 சூன் 2014 (UTC)[பதிலளி]
ஓ.. சரி. மீண்டும் கட்டுரையை நீக்கிவிட்டேன் :( --இரவி (பேச்சு) 03:54, 6 சூன் 2014 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்[தொகு]

பின்வரும் மூன்று கட்டுரைகளையும் மீட்டுத் தர இயலுமா? மேலும் பெரும்பாலான கட்டுரைகளை நான் கவனிப்புப் பக்கத்தில் வைக்கவில்லை. அவைகள் குறைந்த உள்ளடக்கம் காரணமாய் நீக்கப்படவும் விரும்பவில்லை. என்னால் அவற்றை மேம்படுத்த இயலும். முடியுமெனில் எனக்குத் தனிச் செய்தியில் அவற்றைத் தெரிவித்துச் சற்று அவகாசம் கொடுத்தால் கண்டிப்பாக மேம்படுத்துவேன். நன்றி. மீட்டுத் தரவேண்டிய கட்டுரைகள்,

நன்றி இரவி --ஆர்.பாலா (பேச்சு) 03:57, 6 சூன் 2014 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று! முதன்மை முக்கியத்துவம் தந்து, இக்கட்டுரைகளை முடித்துவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:26, 6 சூன் 2014 (UTC)[பதிலளி]
நன்றி செல்வகுருநாதன் மூன்று கட்டுரைகளையும் மேம்படுத்தியுள்ளேன். --ஆர்.பாலா (பேச்சு) 02:52, 7 சூன் 2014 (UTC)[பதிலளி]
மிக்க மகிழ்ச்சி, ஆர்.பாலா. தங்கள் செயற்பாட்டால் உந்தப்பட்டு விக்கிப்பீடியா:கட்டுரை மீட்பு வேண்டுகோள்கள் பக்கம் தொடங்கி இருக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 04:33, 7 சூன் 2014 (UTC)[பதிலளி]
மிகவும் நல்ல விசயம் இரவி. அப்படியே நீக்கப்பட்ட கட்டுரைகளின் முழுப் பட்டியல் சுட்டியை இப்பக்கத்தில் இணைத்தால் வசதியாகவும் உதவியாகவும் இருக்கும். நன்றி. --ஆர்.பாலா (பேச்சு) 04:59, 7 சூன் 2014 (UTC)[பதிலளி]