பகுப்பு பேச்சு:ஈழத்து தலித் இலக்கியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈழத்தில் தலித் இலக்கியம் என்ற ஒன்று தனித்துவமானதாக இருக்கிறதா?


நிச்சியமாக இருக்கின்றது. ஆனால், தலித் என்ற சொல்லாடல் தற்சமயம்தான் பொது அறிமுகமாகி இருக்கின்றது.

--Natkeeran 15:48, 23 மார்ச் 2006 (UTC)


பின்வரும் வரிகள் மூன்றாவது மனிதன் இதழ் 7 இல் கா. சிவத்தம்பி எழுதிய கட்டுரையிலிருந்து...

"இலங்கையில் நாங்கள் ரகுநாதனையோ, எஸ். பொன்னுத்துரையையோ ஒரு தலித்தாகப் பார்ப்பதில்லை. டானியல், ஜீவா, தெணியான் போன்றவர்கள் எங்களுடைய தமிழ் புலமை மரபில் முக்கியமானவர்கள். இங்கு அவர்கள் தலித் போராட்டத்தினூடாக அந்த அங்கீகாரத்தைப் பெறவில்லை. இதுதான் தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்குமான வித்தியாசம்.

வெறும் வாய்ப்பாட்டு ரீதியாக தமிழ்நாட்டில் ஒரு தலித் இயக்கம், தலிதியக்கம் வளர்ந்தால் இங்கும் ஒரு தலித் இலக்கியம் வளர வேண்டும் என்பது வெறும் கோஷமே........." --கோபி 17:00, 23 மார்ச் 2006 (UTC)


அது அவரது கருத்து, விமர்சனம். பேராசிரியர் கா. சிவத்தம்பியின் கருத்துடன் தனிப்பட்ட ரீதியில் நான் உடன்படவும் செய்யலாம். இலங்கையில் தலித் இலக்கியம் வளர வேண்டும் என்று நான் கோசம் எழுப்பவில்லை. ஆனால், ஒரு வகைப்படுத்தலில், ஒரு தமிழக தலித் இலக்கிய ஆர்வலர் ஈழத்தில் அப்படி இலக்கியம் இருக்கின்றதா என்ற கேள்வியுடன் தேடினால், அதற்கு இணையான பகுப்பே இது. --Natkeeran 16:11, 23 மார்ச் 2006 (UTC)


ஐயா இது இலங்கையை பற்றியது, ஆகவே இதை தாழ்த்தப்பட்டவர் என்மாற்றவும்.
இங்கு யாரையும் யாரும் தாழ்த்தப்பட்டவர் என கொள்வதில்லை. தாழ்த்தப்பட்டவர் என நீங்கள் கருத்ப்பட்டவர் எழுதும் எனைத்தும் தாழ்த்தப்பட்டவர் இலக்கியமா?? எனக்கு தெரிந்து யாரும் இப்படி எழுதுவது இல்லை.
மேலும் தமிழ் இதற்கென்று ஒரு சொல் உள்ள போது வேற்று மொழி சொல்லை பயன்படுத்துவதில் எனக்கு இஸ்டம் இல்லை. - Suren

சுரேன், என்னை ஐயா ஆக்கி விட்டீர்கள்! வேறு யாருடனோ குழப்புகின்றீர்களோ என்று எண்ண தோன்றுகின்றது.

வேண்டுமானால் ஈழத்து தாழ்த்தப்பட்டவர் இலக்கியம் என்று ஒரு பகுப்பு ஏற்படுத்தி கொள்ளலாம். வகைப்படுத்தலின் நோக்கம், பிற பயனர்களுக்கு அவர்கள் தேடுவதை இலகுவாக காண வழி செய்வதேயாகும். பெரும்பான்மையான தமிழர்கள் தமிழகத்திலேயே வாழ்கின்றார்கள், எனவே அவர்களின் சொற் பிரயோக வழக்கங்களையும் நாம் கவனத்தில் எடுத்து கொள்தல் வேண்டும். மேலும், தாழ்த்தப்பட்டவர்கள் இல்லையென்று நாம் மறைப்பதால், அவர்கள் இல்லை என்று ஆகிவிடாது. சாதி இலங்கையில் இல்லையென்பது அல்லது அதன் தாக்கம் அதிகம் இல்லையென்பது தவறு. --Natkeeran 16:32, 23 மார்ச் 2006 (UTC)


மீண்டும் சிவத்தம்பியின் கட்டுரையிலிருந்து... இறுதிவரிகள்..

"சாதிகள் இன்றும் உண்டு. ஆனால் இந்தியாவில் தலித்துகள் இருக்கும் நிலை போல இங்கு இல்லை" - கா. சிவத்தம்பி

ஒரு தமிழக தலித் இலக்கிய ஆர்வலர் ஈழத்தில் அப்படி இலக்கியம் இருக்கின்றதா என்ற கேள்வியுடன் தேடினால்... அவ்ருக்கு இந்தப் பகுப்பு தவறான வழி காட்டி அல்லவா? --கோபி 16:58, 23 மார்ச் 2006 (UTC)

நல்ல கருத்து. நீங்கள் சொல்வது எனக்கும் தோன்றியது. ஆனால் கா. சிவத்தம்பி கூறும் கருத்தை கட்டுரையில் எடுத்துரைப்பதுவே பொருந்தும் என்று நினைக்கின்றேன். மேலும், எம் இக்கலந்துடையாலும் வழிகாட்டும் என நம்பலாமா!--Natkeeran 17:05, 23 மார்ச் 2006 (UTC)

தலித் இலக்கியத்தில் தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கு முன்பே டானியல் ஈழத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைத் தொடங்கியுள்ளார். ஆனால் இந்தியாவில் உள்ள சாதிப் பிரச்சினை போன்றதல்ல ஈழத்தில் நிலவுவது. ஈழத்தில் தலித்துக்கள் என்ற சொல்லை விட பஞ்சமர் என்ற சொல்லே பரவலாகப் புழக்கத்தில் இருந்தது. ஆனால் இப்போது தமிழ்நாட்டை பின்பற்றி தலித் என்ற சொல் பரவலாகப் பயன்படுகிறது. ஆனால் அது தமிழ்நாட்டவருக்கு ஈழம் தொடர்பில் தவறாக வழிகாட்டுவதாகவே படுகிறது. ஏனெனில் தலித் என்ற சொல் ஒரு தமிழகத்தவருக்கு தமக்குத் தெரிந்த தலித் நிலையையே நினைவுக்குக் கொண்டுவருவதாக உள்ளது. -- கோபி 17:06, 23 மார்ச் 2006 (UTC)

கோபி, உங்கள் கருத்து சரிதான். உங்கள் பரிந்துரை என்ன?--Natkeeran 17:26, 23 மார்ச் 2006 (UTC)

Natkeeran the situation between Sri lanka & tamil-nadu completely different. the caste system in sl is not the same system like in TN. the SL Tamil system is like the Sinhalese system. its not based on birth but rather one's occupation. people of low caste are not treated like doormat's in sl as far i know.

Even in Sri Lanka caste system is based on birth. But the situation is not like TN. --கோபி 17:10, 23 மார்ச் 2006 (UTC)

birth yes, but its like the sinhalese system. it is more better to say that the sinhalese system is like the tamil system. -Suren

சுரேன், உங்கள் கருத்துடன் நான் உடன்படவில்லை. ஈழத்தில் இருந்து கனடா வந்த பலரும், பல பல தொழில்களை செய்து கொண்டும் நான் இச் சாதி என்று தம்மை அடையாளப்படுத்திகொள்ள்கின்றார்கள். தொழில்தான் சாதியை தீர்மானிக்கின்றதென்றால், பல புதிய தொழில்கள் தோன்றியுள்ளனவே, அதற்கேற்ப பல புதிய சாதிகள் உருவாக்கப்பட்டா இருக்கின்றன? இலங்கையில் சாதி இன்று வலுவிழந்து உள்ளது உண்மை. ஆனால் அதன் தாக்கம் இல்லையென்பது தவறு. திருமணம் மூலம் சாதி பாதுகாக்ப்படுகின்றது. எனவே, சாதி பிறப்பின் மூலமே தொடர்கின்றது. மேலும், இன்றும் கூட "தாழ்த்தப்பட்டவர்கள்" இன்னும் பல வழிகளில், பல புதிய வழிகளில் உபயோகப்படுத்தப்படுகின்றார்கள். --Natkeeran 17:23, 23 மார்ச் 2006 (UTC)

நீங்கள் போராட்டம் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள். போராட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் உபயோகப்படுத்தப்படுகிறார்கள் என்ற அர்த்தத்தில் வாசிக்க கூடியதாக உங்கள் கருத்து உள்ளது. இது தொடர்பில் எனது ஆட்சேபணையைத் தெரிவிக்க விரும்புகிறேன். போராட்டத்தில் ஆண், பெண் என்றும் பிரதேசவாரியாகவும் உயிர்த்தியாகம் செய்வோரின் பட்டியல்கள் உள்ளன. சாதிப்பட்டியல்கள் எதுவும் இல்லை. சாதி பார்த்துப் பொறுப்புக்கள் வ்ழங்கப்பட்டிருந்தால் போராட்டம் இத்தனை காலம் தொடர்ந்திருக்க முடியாது.

போராட்டத்துக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபடும் சில ஈழத்தவர் தமிழ்நாட்டில் "போராட்டத்தில் ஈடுபடுவோர் தலித் இட ஒதுக்கீடு பற்றி என்ன சொல்கிறார்கள்" என்பது போன்ற கேள்விகளை எழுப்பிக் குழப்பி வருகிறார்கள். இந்நிலையில் தலித் இலக்கியம் என்ற பகுப்புத் தொடர்பில் ஏனைய விக்கிப்பீடியர்களின் கருத்துக்களையும் அறிய விரும்புகிறேன். --கோபி 17:31, 23 மார்ச் 2006 (UTC)

castes are like trade unions. both are there for the betterment of that perticular group. trade union are the castes of the future. sl does not have 1000 of castes like in tn, no one forces the lower castes to join the ltte, the ltte employs equally ruthless ways in making all people join them. - Suren

கோபி, வெளிப்படையா சொல்வதானால், வசதி படைத்தவர்கள் பலரும் வெளிநாடுகளுக்கோ, கொழும்புக்கோ சென்றுவிட்டார்கள். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களே பெரும்பாலும் வெளியேற முடியாமல் போரில் சிக்கிவிடுகின்றார்கள். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் பெரும்பான்மையானவர்கள் வரலாறு காரணமாக தாழ்த்தப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள். இதற்கு புள்ளி விபரங்கள் இல்லை. ஆனால் இதுவே தற்போதைய நிலை என்று நினைக்கின்றேன். (ஆரம்பத்தில் போராட்டம் சமத்துவத்தை ஏற்படுத்த வழிகோலியதென்பதை யாரும் மறுக்க முடியாது, ஆனால் இன்றும் அப்படியா?)

Suren, சாதியை தொழில் சங்கங்களுடன் இணைத்து பார்ப்பது பொருந்தாது. ஏன் என்றால், சாதி பிறப்பின் அடிப்படையில் ஆனது, தகமையினால் ஆனது இல்லை. --Natkeeran 17:41, 23 மார்ச் 2006 (UTC)


castes are based on skill, a perticular caste has the special knowledge in a trade. no other caste has that special skill. if it was not for castes these special skill would have been lost thru the ages. those who have less money do not necceserly belong to a low caste. many low caste tamils are rich while high caste are poor.
just because a low caste person writes a work does that work automatically become a low caste work?? - Suren

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் பெரும்பான்மையானவர்கள் வரலாறு காரணமாக தாழ்த்தப்பட்டவர்களாகவே இருந்தார்கள். போராட்டம் ஆரம்பமானதன் பின் உயிர்தப்புவதற்காகவும் போராளிக் குழுக்களுக்கிடையிலான சண்டைகள் காரணமாகவும் பெருமளவானோர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றார்கள். இவர்கள் பொருளாதார அடிப்படையிலும் பலம் வாய்ந்தவர்களானார்கள். இவர்களில் தாழ்த்தப்பட்டவர்களும் அடக்கம். பொருளாதார மாற்றம் ஈழத்தில் நிலவி வந்த சாதிநிலைமைகளை ஆட்டம் காண வைத்தது.

சாதியை தொழிற் சங்கங்களுடன் இணைத்துப் பார்க்க முடியாது. சாதி இப்பொழுது ஈழத்தில் நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது. திருமண பந்தங்களில் சாதி பார்ப்பது இப்பொழுதும் தீவிரமானதாக இருக்கிறது. --கோபி 17:53, 23 மார்ச் 2006 (UTC)

கோபி, போராட்டம்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பொருளாதாரத்தில் முன்னோற வழிகோலியது என்பது முற்றிலும் சரியல்ல, அதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களின் தொடர் நடவடிக்கைகளை அக்கூற்று மழுங்கடித்துவிடும். --Natkeeran 18:10, 23 மார்ச் 2006 (UTC)

"பீ அள்ளுதல்", பிணம் தூக்கல், மரம் ஏறுதல், மாடறுத்தல், "வேசி தொழில்" போன்ற திறன்கள் சமூகத்துக்கு தேவையானதாக இருக்கலாம், ஆனால் அதை ஒரே சாதியில் பிறந்தவர்கள்தான் காலம் காலமக செய்யவேண்டும் என்று வரையறைக்கும் சமூக அமைப்பை பேணுவதோ, அதை சரியென வாதிக்க முனைவதோ தவறு. --Natkeeran 17:55, 23 மார்ச் 2006 (UTC)

சாதி அமைப்புச் சரியானதென்றோ அல்லது ஈழத்தில் சாதியமைப்பு ஒப்பீட்டளவில் ஏற்றுக் கொள்ளக் கூடியதென்றோ நான் கூற வரவில்லை. ஈழத்தில் மலையக இலக்கியம் என்ற ஒரு வகை இருந்து வருகிறது. அண்மைக்காலங்களில் முஸ்லிம்கள் தங்கள் இலக்கியத்தைத் தனித்துவமானதாகக் காட்டிவருவதால் முஸ்லிம் இலக்கியம் என்ற பகுப்பும் பொருத்தமானதே. (இந்தப் பகுப்பு தமிழ்நாட்டுக்கு பொருந்திவருமோ தெரியவில்லை.) ஆனால் தலித் இலக்கியம் என்ற பகுப்பு ஈழம் தொடர்பான தவறான புரிதல்களை ஏற்படுத்திவிடும். ஆயினும் டானியல், டொமினிக் ஜீவா போன்றோரை வகைப்படுத்தும் போது ஒரு பகுப்பு அவசியமானதுதான். ஆதலால் பஞ்சமர் இலக்கியம் என்ற சொல்லைக் கையாளலாம் என்பது என் அபிப்பிராயம். -- கோபி 18:04, 23 மார்ச் 2006 (UTC)

அப்படியே செய்யலாம். --Natkeeran 18:10, 23 மார்ச் 2006 (UTC)