பகுப்பு பேச்சு:இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்
தலைப்பைச் சேர்பரிந்துரை
[தொகு]சமச்சீராக இருக்கட்டும் எனும் கருத்தில், பெயர் மாற்றத்திற்கான பரிந்துரை: 21-ஆம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:16, 25 மார்ச்சு 2025 (UTC)
- நல்லது இவ்வாறே மாற்றலாம். ஆனால் இந்தக் கோட்டைக் கவனியுங்கள். கைபேசியில் -சிறியதாகவும், கணினி, மடிக்கணினியில் (–) பெரியதாகவும் கிடைக்கிறது.-- சா. அருணாசலம் (உரையாடல்) 04:55, 25 மார்ச்சு 2025 (UTC)
- 21-ஆம் நூற்றாண்டு அமெரிக்க நடிகர்கள் என்று இருந்தாலே போதுமானது. பொதுவாக நடிகர் என்பது ஆண் நடிகர்களையே குறிப்பதால் ஆண் நடிகர் என்று குறிப்பிடத் தேவையில்லை என்று கருதுகிறேன் கு. அருளரசன் (பேச்சு) 04:59, 25 மார்ச்சு 2025 (UTC)
- இந்தச் சிக்கலை நீண்ட நாட்களாக எதிர்கொள்கிறேன். ஆங்கில விக்கிப்பீடியாவில், ஆண் நடிகர்களை male actors என்கிறார்கள். பெண் நடிகர்களை actresses என்கிறார்கள். நடிப்பவர்களை (ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும்) actors என்கிறார்கள். தமிழ் மொழி வழக்கத்தில் - நடிப்பவர் பெண்ணாக இருந்தால் நடிகை என்றும், நடிப்பவர் ஆணாக இருந்தால் நடிகர் என்கிறோம். இவர்கள் இருவரையும் பொதுவாக குறிப்பிட தனிச்சொல் இல்லை. இதனை எவ்விதம் கையாள்வது? பகுப்பாக்கத்தில் மட்டுமே இந்தச் சிக்கல் வருகிறது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:57, 25 மார்ச்சு 2025 (UTC)
- @Arularasan. G ஆங்கில விக்கிப்பீடியாவில் Category:21st-century American actors எனும் பகுப்பினைக் காணுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:05, 25 மார்ச்சு 2025 (UTC)
காண்க: பகுப்பு:21-ஆம் நூற்றாண்டு, Category:21st century - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:34, 25 மார்ச்சு 2025 (UTC)
- ஆங்கில விக்கிப்பீடியாவில் actors என்ற பகுப்பில் பெரும்பாலும் LGBTQ நபர்களையே சேர்த்திருக்கிறார்கள் போல் தெரிகிறது. ஆண் நடிகர்களை Male Actors பகுப்பில் சேர்த்திருக்கிறார்கள். எனது கருத்து தமிழில் "ஆண் நடிகர்கள்" என்ற பகுப்புகள் தேவையற்றது. நடிகர்கள், நடிகைகள் என்ற பகுப்புகளே போதும். LGBTQ நபர்கள் இருந்தால் அவர்களுக்குத் தனி உப பகுப்பை உருவாக்கலாம். வேறு மொழிகளில் எவ்வாறு பகுத்திருக்கிறார்கள் எனப் பார்க்க்லாம். உருசிய மொழியில் நடிகர்கள், நடிகைகள் என்றே பகுப்புகள் உள்ளன. ஆனாலும், பெரும்பாலானோரின் முடிவை ஏற்றுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 06:32, 25 மார்ச்சு 2025 (UTC)
- @Kanags Category:Actors in Tamil cinema எனும் பகுப்பினையும் காணுங்கள். நடிகர்கள், நடிகைகள் எனும் பகுப்புகளை மட்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் நாம் பயன்படுத்தலாம். ஆனால், ஆங்கில விக்கிப்பீடியாவில் இடுவது போன்று தாய்ப் பகுப்பினை நாம் இட இயலாது. இதனை மட்டுமே சிக்கலாக நான் கருதுகிறேன். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:21, 25 மார்ச்சு 2025 (UTC)
- @Selvasivagurunathan m: ஆங்கில விக்கியில் எந்தத் தாய்ப் பகுப்பைக் குறிப்பிடுகிறீர்கள்?--Kanags \உரையாடுக 09:55, 25 மார்ச்சு 2025 (UTC)
- @Kanags, Male actors in Tamil cinema என்பதற்கு இணையாக 'தமிழ்த் திரைப்பட நடிகர்கள்' எனும் பகுப்பினைக் கருதலாம். Actresses in Tamil cinema என்பதற்கு இணையாக 'தமிழ்த் திரைப்பட நடிகைகள்' எனும் பகுப்பினைக் கருதலாம். தாய்ப் பகுப்பாக Actors in Tamil cinema என ஆங்கில விக்கிப்பீடியா கொண்டுள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவில் இதற்கு இணையான பகுப்பினை இட இயலாது என்பதாக கருத்து தெரிவித்திருந்தேன். மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:20, 25 மார்ச்சு 2025 (UTC)
- @Selvasivagurunathan m: ஆங்கில விக்கியில் எந்தத் தாய்ப் பகுப்பைக் குறிப்பிடுகிறீர்கள்?--Kanags \உரையாடுக 09:55, 25 மார்ச்சு 2025 (UTC)
- எனது பரிந்துரை:
- @Kanags Category:Actors in Tamil cinema எனும் பகுப்பினையும் காணுங்கள். நடிகர்கள், நடிகைகள் எனும் பகுப்புகளை மட்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் நாம் பயன்படுத்தலாம். ஆனால், ஆங்கில விக்கிப்பீடியாவில் இடுவது போன்று தாய்ப் பகுப்பினை நாம் இட இயலாது. இதனை மட்டுமே சிக்கலாக நான் கருதுகிறேன். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:21, 25 மார்ச்சு 2025 (UTC)
- பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள் - Actors in Tamil cinema (இதற்குள் பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்பும் இருக்கும்)
- பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள் - Actresses in Tamil cinema (இதற்குள் பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள் பகுப்பும் இருக்கும்)
- இரண்டையும் இணைக்கும் தாய்ப்பகுப்புகள்: பகுப்பு:தமிழ்த் திரைப்படத் துறையினர், பகுப்பு:தமிழ் நடிகர்கள், பகுப்பு:தமிழ் நடிகைகள்
இதுபோன்றே அனைத்துவித நடிகர்கள் பகுப்புகளும் இருக்கலாம்.--Kanags \உரையாடுக 10:37, 25 மார்ச்சு 2025 (UTC)
கள் விகுதி
[தொகு]அஃறிணைச் சொற்களுக்கு மட்டுமே கள் விகுதி சேர்த்து எழுத வேண்டும். உயர்திணைச் சொற்களுக்குக் கள் விகுதி சேர்த்து எழுதக் கூடாது. அர், ஆர், இர், ஈர், ஓர், மார் போன்ற பன்மை விகுதிகளை இணைத்து எழுத வேண்டும். ஆண் நடிகர்கள், பெண் நடிகர்கள் என்று எழுதக் கூடாது. நடிகர், இயக்குநர், பாடகர், உறவினர், ஆசிரியர், உறுப்பினர், காவலர் போன்ற சொற்கள் பால் பகாப்பெயர்களில் வருகின்றன. இந்த இணைப்பில் கூடுதல் தகவல்கள் உள்ளன.-- சா. அருணாசலம் (உரையாடல்) 12:39, 12 மே 2025 (UTC)