பகுப்பு பேச்சு:இந்துக் காலக் கணிப்பு முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒற்று குறித்த சின்ன உரையாடல் :) எடுத்துக்காட்டு: பகுப்பில் இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் என்று வைத்தால் இந்தியத் தமிழ் வழக்கில் எடுத்த திரைப்படங்கள் என்று பொருள். இந்திய தமிழ்த் திரைப்படங்கள் என்று எழுதினால், இந்தியாவில் எடுத்த தமிழ்த் திரைப்படங்கள் என்று பொருள் வரலாம். இதற்கு முதலாவது பொருளும் வரலாம்.

இங்கே, இந்துக் காலம் என்றால் இந்துக்களுக்கு தனியான காலம் என்று ஒன்று உள்ளதாகி விடும். ஒற்று என்பது பொருளை நன்கு அறிய உதவும் என்று நினைக்கிறேன். இது என் கருத்தே. தெளிவாகக் கூற முடியவில்லை. ’’’ஒற்றுக்காக பகுப்புகளை மாற்ற வேண்டாம்.’’’ சான்றோர் தெளிவுறக் கூற வேண்டும். அதுவரையிலும், நாவி போன்ற கருவிகள் நமக்கு உதவக் கூடும். கூடுமானவரையில், பகுப்புகளை உருவாக்கும் பொழுது கவனம் தேவை.

(ஜெகாவுக்கு: தொடர்ந்து பேச்சுப் பக்கங்களில் கருத்திடுவது கண்டு ஜெகா கடுப்பானால், உரையாடலில் இருந்து ஜகா வாங்கிக் கொள்கிறேன். :) ) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:48, 1 மே 2013 (UTC)[பதில் அளி]

பேச்சுப் பக்கத்தில் தாங்கள் உரையாடுவதை என்னுடைய வழிகாட்டலாகவே நினைக்கிறேன். அதனால் தயவு செய்து வழிகாட்டல்களை நிறுத்திவிடாதீர்கள். இந்துக் காலக் கணிப்பு முறை என்ற பக்கத்தினைப் பார்த்தேன். அதனால் அப்பெயரிலேயே பகுப்பினை தொடங்கிவிட்டேன். ஒற்றுக்காக பெயர்மாற்றம் செய்வதை இனி நிறுத்தம் செய்து கொள்கிறேன். நண்பரே. மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:12, 1 மே 2013 (UTC)[பதில் அளி]

நண்பரே! என்னுடைய கட்டுரைகளில் வாக்கிய அமைப்பு பல இடங்களில் பிழையாக இருக்கும். இருப்பினும், மற்றொருவர் திருத்தி உதவுவார் என்றே தவறாய் இருந்தாலும் தொடர்வேன். பூங்கோதை அம்மையார் திருத்தி உதவுவார். என்னுடைய தவறுகளை கண்டவுடன் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
கட்டுரைகளில் திருத்தம் செய்வது எளிது. ஆனால், பல கட்டுரைகளைச் சேர்த்தப் பின்னர், பகுப்பை மாற்றுவது கடினம். எரிச்சலானதும் கூட. ஆகவே தான் கூறினேன். பகுப்பை உருவாக்கும் முன்னர் இரு முறை யோசித்துப் பாருங்கள். காலக் கணிப்பு என்பது மிகச் சரி, ஆனால், இந்துக் காலம் என்பது தவறென்று நினைக்கிறேன். கூடுமானவரையில், தொடங்கும் பொழுதே சரியாக அமைக்க முயல்வோம். தவறாகி விட்டால், பரவாயில்லை. விட்டுவிட்டு முதன்மையான வேலைகளைப் பார்ப்போம். பின்னர் தானியங்கி உதவியுடன், ஒரு பகுப்பில் உள்ள அனைத்துக் கட்டுரைகளையும் இன்னொன்றிற்கு மாற்றுமாறு செய்யலாம். ஏற்கனவே, இவ்வசதி இருக்கும் என்று நினைக்கிறேன். தவறென்று உறுதியானால் மாற்றலாம், ஐயப்பாடு இருப்பின் பின்னர் தானியங்கியை நாடுவோம். நன்றிகள்!! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:25, 1 மே 2013 (UTC)[பதில் அளி]