பகுப்பு பேச்சு:இந்திய இதழ்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதனை இந்திய இதழ்கள் என்று பெயரிடலாமா? சஞ்சிகை என்பது பொருத்தமில்லாத சொல். சஞ்சாரம் என்பது இடம் பொருட்டான சொல். சஞ்சரித்தல் என்றால் (ஒரு இடத்தில்) உலாவுதல் (ஒரு காலத்தில் இல்லை). இசையில் மேல் ஸ்தாயில் அதிக நேரம் சஞ்சாரம் செய்தார் என்றால் உயர் அதிர்வெண் கொண்ட ஓர் ஒலிப்பட்டையில் (தொகுதியில்) பாடினார், வாசித்தார் என்று பொருள். இக்கருத்தை வேறு என்கேயும் சொன்ன நினைவு உண்டு. சஞ்சாரம் தமிழ்ச்சொல்லும் இல்லை (இதனால் மட்டுமே வேண்டாம் என்று நான் சொல்லவில்லை).--C.R.Selvakumar 20:49, 25 ஜூலை 2006 (UTC)செல்வா

இதழ்கள் நல்ல தமிழ்ச்சொல். பொதுப்பயன்பாட்டிலும் உள்ளது. மாற்றி அமைக்கலாம்--ரவி 07:51, 26 ஜூலை 2006 (UTC)
ஆம். இதில் எனது முழு ஒப்புதல் உண்டு. -- Sundar \பேச்சு 08:07, 26 ஜூலை 2006 (UTC)
எனக்கும் இதில் ஒப்புதல் உண்டு. எனினும் இதழ்களை ஈழத்தில் சஞ்சிகைகள் என்றுதான் குறிப்புடுகின்றார்கள் எனவே ஈழசஞ்சிகைகளை அப்படியே விட்டுவிடலாம். --Natkeeran 19:16, 28 ஜூலை 2006 (UTC)
மன்னிக்கவும் நற்கீரன். பயன்பாட்டில் உள்ள நல்ல தமிழ்ச்சொல் என்றால் விக்கிபீடியா முழுமைக்கும் நடப்பில் கொண்டு வர வேண்டும் என்பது தானே நம் கொள்கை??? இலங்கையில் நல்ல தமிழ்ச் சொற்கள் இருந்தால், அவற்றை தமிழ்நாட்டு வழக்கை விலக்கி வைத்துவிட்டு பயன்படுத்துவோம்...அது போல இதழ்கள் என்ற சொல்லையும் பயன்படுத்தலாம்.--ரவி 22:26, 28 ஜூலை 2006 (UTC)
ரவி, இதழ்கள் = சஞ்சிகைகள், எனக்கு இரண்டுமே ஒன்றுதான். கோபிதான் சஞ்சிகை என்று பயன்படுத்தினார் என்று நினைக்கின்றேன். --Natkeeran 22:43, 28 ஜூலை 2006 (UTC)

சஞ்சிகை என்பது ஈழத்தில் மிகவும் பரவலாகப் புழக்கத்தில் உள்ள சொல். அது சஞ்சரிப்புடன் தொடர்புடையதோ இல்லையோ நானறியேன். ஆயினும் ஈழத்தில் இதழ் என்ற சொல்லும் அறியப்பட்டதொன்றே. சிறு சஞ்சிகை என்று குறிப்பிடுவது போலவே சிற்றிதழ் என்றும் குறிப்பிடுகிறோம். ஆனால் ஈழத்தில் சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகள் என்ற இரு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதழ் என்பதில் இரண்டும் அடங்குகின்றன. இதழ் என்பது சுருக்கமாக இருப்பதல் அதனையே பயன்படுத்துவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. சஞ்சிகை, பத்திரிகை ஆகிய சொற்கள் தமிழ்தானா என அறிய ஆவல். --கோபி 15:41, 29 ஜூலை 2006 (UTC)

சஞ்சிகை, பத்திரிகை என்ற இரண்டும் தமிழ்ச்சொற்கள் அல்ல. வடமொழி (சமஸ்கிருதம்).--C.R.Selvakumar 15:51, 29 ஜூலை 2006 (UTC)செல்வா
அவ்வாறுதான் நினைத்தேன். ஆகையால் இதழ் என்றே பயன்படுத்துவோம். நன்றி செல்வா. --கோபி 15:55, 29 ஜூலை 2006 (UTC)

இதழ் என்னும் சொல் சஞ்சிகை, பத்திரிகை இரண்டுக்குமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் இதழ் என்பதற்கு வேறு பயன்பாடுகளும் உண்டு. எனவே அதனையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.--Kanags 22:30, 29 ஜூலை 2006 (UTC)