உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு பேச்சு:இசுலாமிய விக்கிப்பீடியர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவையில்லை என்றே நான் நினைக்கிறேன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:21, 27 சூன் 2013 (UTC)[பதிலளி]
தேவை. மதத்தின் அடிப்படையில் வெற்படுத்திக் காட்டுவதில் தவறில்லை. விக்கிப்பீடியாவில் மதம் பற்றிய கட்டுரைகள் உள்ளன தானே. அந்தந்த மதங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அழகான வலைவாசல்களையும் உருவாக்கியிருக்கிறீர்கள்.--Kanags \உரையாடுக 09:25, 27 சூன் 2013 (UTC)[பதிலளி]
என் கருத்தும் தேவை என்பது தான்,. பார்த்தவுடனேயே இவர் இசுலாமியர், இவர் இந்து என்று வேறுபாடு தெரியுமளவிலேயே பெயர்கள் இடப்படுகின்றன. இவ்வாறான பகுப்பு சமயம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும், மேம்படுத்தவும் வழிதுணையாக இருக்கும் என்று எண்ணுகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:35, 27 சூன் 2013 (UTC)[பதிலளி]
சமயம் குறித்த கட்டுரைகளுக்குத் தனி வலைவாசல் அமைக்கப்பட்டிருப்பது விக்கிப்பீடியாவின் தரத்தை அதிகரிக்க உதவும். ஆனால், விக்கிப்பீடியர்களை சமய வழியில் பிரித்துக் காண்பிப்பது என்பது சரியானதாகத் தெரியவில்லை.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 08:18, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]
தமிழ்ச்சமூகத்தில் சாதிப் பிரிவினை அளவுக்கு மத அடையாளம் சர்ச்சைக்குரிய ஒன்று அன்று. செகதீசுவரன் சொன்னது போல் பெரும்பாலும் பெயரை வைத்தே மதம் தெரிந்து விடுவது உண்டு. ஒரு முறை தமிழ் விக்கிப்பீடியாவின் இசுலாமியப் பயனர் ஒருவருடன் உரையாடும்போது, சமூகத்தில் தங்களுக்கு நிகழும் பாகுபாடு காரணமாக, இணையத்திலும் கூட ஒரு குழுமம், வலைத்தளம் என்று சேர்ந்தால் அங்கு தங்களுக்கு உகந்த சூழல், பாரபட்சமற்ற தன்மை, பாதுகாப்பு உள்ளதா எனப் பார்ப்போம் என்றார். இது எனக்கு மிக முக்கியமாக கருத்தாகப் பட்டது. அதனால் தான் தள அறிமுகத்தில் இடும் பங்களிப்பாளர் அறிமுகத்தில் கூட பல்வேறு பின்னணியுள்ளவர்களைக் காட்ட எண்ணினேன். ஏற்கனவே இங்கு இசுலாமியப் பயனர்கள் சேர்ந்து பங்களிக்கிறார்கள் என்ற நல்லெண்ணம் வரவும், மதம் சார்ந்த கட்டுரைகளை இனங்கண்டு பங்களிக்கவும் இது போன்ற வார்ப்புரு இடல் இருந்தால் பிரச்சினை இல்லை. கட்டுரைப் பங்களிப்புகளுக்கு கூட விக்கித் திட்டம் இசுலாம் போல் தொடங்கினால் போதுமானது. ஆனால், இவ்வாறான அடையாளப்படுத்தல் பயனர் தாமாக தனது பயனர் பக்கத்தில் இடும் வார்ப்புருவாக இருக்க வேண்டும். இங்கு உள்ளது போல் பிற பயனர்கள் இட்டால் மதத்தின் பெயரால் முத்திரை குத்துவது போல் தவறாக புரிந்து கொள்ளவும் வாய்ப்புண்டு. --இரவி (பேச்சு) 18:25, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]
இசுலாமிய வார்ப்புரு மட்டும் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. தாங்கள் கூறியது போல இசுலாமிய சமயத்திற்கான விக்கித்திட்டம் தொடங்கப்படாதது கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆர்வமுள்ள பயனர் தொடங்கிய பின்பு இந்த வார்பபுருவினை இசுலாமிய விக்கித்திட்டத்திற்கானதாக மாற்றி, இப்பகுப்பினை மாற்றியமைக்கலாம். தேனியார் வருத்தம் கொள்ளவும் காரணம் இருக்கலாம். மதவாரியாக பயனர்களை பிரிப்பதால் பிற்காலத்தில் ஏதேனும் பிரட்சனை விக்கிப்பீடியாவில் உண்டாகும் என்று கருதுகிறார் என நினைக்கிறேன். இந்த வார்ப்புருவினை உருவாக்கிய அராபத் நண்பரிடம் இந்த விவாதத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்தேன். அவர் தரப்பில் எதற்காக இந்த வார்ப்புரு அமைக்கப்பட்டது என்பது குறித்தான கருத்து இருக்கலாம். அதை தற்போது அறியமுடியவில்லை. (நான் செய்தியை தெரிவித்தபின் அவர் விக்கிப்பீடியாவிற்கு வரவில்லை என நினைக்கிறேன்.) அவருடைய கருத்தினையும் அறிந்த பின் இந்த பகுப்பினை மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:24, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]
இந்தப் பகுப்பு தேவையில்லை. ஒவ்வொரு பயனரும் தங்கள் பயனர் பக்கத்தில் தங்களின் தனிப்பட்ட ஆர்வம் பின்புலம் ஆகியவற்றைத் தர எந்தத் தடையும் இல்லை. விக்கிப்பீடியர்களிடையே இப்படியான பாகுபாடு கூடாது. இப்படியே போனால் குட்டையான விக்கிப்பீடியர்கள், கறுப்பான விக்கிப்பீடியர்கள் ஒருகை இல்லாத விக்கிப்பீடியர்கள், கணக்குவராத விக்கிப்பீடியர்கள், வானியலில் ஆர்வமுள்ள விக்கிப்பீடியர்கள், பறையர்களான விக்கிப்பீடியர்கள் என்று கணக்குவழக்கு இன்றி பெருகும். இப்பகுப்பு வேண்டாம். இது பற்றிக் கொள்கை கருத்துரையாடல் நிகழ்ந்தால், என் எதிர்ப்பை இப்பொழுதே தெரிவித்துக்கொள்கின்றேன். இப்பகுப்பை நீக்க வேண்டுகின்றேன். --செல்வா (பேச்சு) 21:37, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியாவில் நபர்கள் பற்றிய கட்டுரைகளில் அவர்களின் மதத்தைப் பற்றியும் தவறாமல் குறிப்பிடுகிறோம். அது போலவே பயனர்கள் தம்மை தம் மதம் சார்ந்து அடையாளப்படுத்த விரும்பினால் அது தவறில்லை என்றே கருதுகிறேன். ஆனால் அவர்களின் பயனர் பக்கங்களில் வேறு பயனர்கள் தகவல்களை அவர்களின் ஒப்புதல் இல்லாமல் சேர்ப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பயனர் ஒருவரின் பக்கத்தில் இருந்த ஒரு சிவப்பு இணைப்பைக் கொண்டே இப்பகுப்பை நான் உருவாக்கியிருந்தேன்.--Kanags \உரையாடுக 23:28, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]
//விக்கிப்பீடியாவில் நபர்கள் பற்றிய கட்டுரைகளில் அவர்களின் மதத்தைப் பற்றியும் தவறாமல் குறிப்பிடுகிறோம். அது போலவே..// விக்கிப்பீடியாவில் வரும் நபர்களைப் பற்றிய கட்டுரைகளில் அவர்களின் மதம் குறிப்பிடுவது வேறு, ஏறத்தாழ அது போல விக்கிப்பீடியர்கள் தங்கள் பயனர் பக்கத்தில் தங்கள் மத ஈடுபாட்டைக் குறித்துக்கொள்லலாம் (நபர்கள் பக்கம் போல்), ஆனால் பங்களிக்கும் விக்கிப்பீடியர்களை அப்படித் தனிப்பகுப்பில் இடுவது மிகவும் தவறு. இப்படியான பகுப்புக்கு எந்தத் தேவையும் இல்லை, இது கெடுதியே செய்யும். பங்களிப்பவர்கள் நடுநிலை பேணவேண்டும், ஆனால் அவர்களே தாங்கள் இந்தவகையான விக்கிப்பீடியர்கள் என்று பகுப்பில் இருந்தால் அது முரண். சாய்வு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதோடு அப்படியான தோற்றம் இல்லாமல் இருக்கவும் வேண்டும். இப்பகுப்பை நீக்க வேண்டுகின்றேன். தேவையே இல்லாமல் ஏன் இப்படியான குழப்பங்கள் இங்கு வேண்டும்?! --செல்வா (பேச்சு) 01:42, 29 சூன் 2013 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியர்கள் தங்கள் பயனர் பக்கத்தில் தங்கள் மத ஈடுபாட்டைக் குறித்துக்கொள்லலாம் (நபர்கள் பக்கம் போல்), ஆனால் பங்களிக்கும் விக்கிப்பீடியர்களை அப்படித் தனிப்பகுப்பில் இடுவது மிகவும் தவறு. இப்படியான பகுப்புக்கு எந்தத் தேவையும் இல்லை, இது கெடுதியே செய்யும். பங்களிப்பவர்கள் நடுநிலை பேணவேண்டும், இப்பகுப்பை நீக்க வேண்டுகின்றேன். --ஹிபாயத்துல்லா (பேச்சு) 09:17, 29 சூன் 2013 (UTC)[பதிலளி]
இரண்டுக்கும் என்ன வேறுபாடு என எனக்குப் புரியவில்லை.--Kanags \உரையாடுக 09:34, 29 சூன் 2013 (UTC)[பதிலளி]
இப்பகுப்பினால் என்ன தீமை உண்டாகுமென விவரித்தால் அறிந்து கொள்ளலாம். மேலோட்டமாகவே தீமை ஏற்படும், குழப்பம் ஏற்படும் என்று விவரிப்பதனால் தீர்வு கிடைப்பதில் சிக்கல்கள் உண்டாகும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:30, 29 சூன் 2013 (UTC)[பதிலளி]

தொடர்புடைய பக்கம்: பயனர்கள் தங்கள் சாதிவிவரங்களைத் தருவதைப் பற்றிய உரையாடல்--இரவி (பேச்சு) 15:07, 29 சூன் 2013 (UTC)[பதிலளி]

இத்தகைய பகுப்புகள் தேவை இல்லை. சமய அடிப்படை, சாதி அடிப்படை முதலானவை நீண்ட பட்டியல் கொண்டவை என்பது மட்டுமன்றி, மிகுந்த கூர் உணர்ச்சியுடையவை. அத்தகைய அடிப்படைகளில் விக்கியர் பிரிவுகளாகப் பகுக்கப்படுவது சிக்கல்களைத் தரும். இப்பகுப்பு வேண்டாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:56, 29 சூன் 2013 (UTC)[பதிலளி]

இத்தகைய சமய பகுப்புகள், பிரிவுகள் தேவை இல்லை. பல நூற்றாண்டுகளாக மதங்களால், சாதிகளால் பிளவுபட்டுக் கிடக்கும் நம் தமிழ் சமூகத்தினை, கட்டற்ற களஞ்சியமான விக்கிபீடியாவிலும் பிரிப்பது தவறான செய்கையாகும். 👍 விருப்பம்--Nan (பேச்சு) 20:47, 29 சூன் 2013 (UTC)[பதிலளி]
  • விக்கியில் சேர்ந்த புதிதில், ஆங்கில விக்கியை பார்த்து இந்த வார்ப்புருவை நான் இங்கு உருவாக்கினேன். ஆனால் எப்போதோ இதை நான் எனது பயனர் பக்கத்தில் இருந்தே நீக்கிவிட்டேன்.
  • இப்படியான வார்ப்புரு இருப்பதில் கண்டிப்பாக தவறு இல்லை. நான் இந்தியன், நான் திராவிடன், நான் தமிழன் என்பன போன்று பல வார்ப்புருக்கள் இங்கு உள்ளன. அதற்கும் இந்த வார்ப்புருக்கும் பெறிய வித்தியாசம் கிடையாது.
  • விக்கி இப்படியான வார்ப்புருக்களை தடை செய்யவில்லை. எனவே தடை செய்யாத ஒன்றை நாம் நீக்க முனைவது தவறு.
  • இதையும் தான்டி இப்படியான வார்ப்புருக்கள் பயனர்களிடையே பிரிவை உன்டாக்கும் என நினைத்தால், தொடர்பான கொள்கை பக்கங்களை உருவாக்கிய பிறகு இதை நீக்கலாம். அதற்கு முன்பு நீக்குவது தவறு.
  • வெளியூர் பயனத்தில் இருந்ததால் உடனடியாக பதில்லளிக்க இயலவில்லை. மன்னிக்கவும்.--அராபத் (பேச்சு) 05:14, 1 சூலை 2013 (UTC).-👍 விருப்பம்--Kanags \உரையாடுக 08:32, 1 சூலை 2013 (UTC)👍 விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:01, 1 சூலை 2013 (UTC)[பதிலளி]