பகுப்பு பேச்சு:ஆப்பிரிக்க ஆறுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆபிரிக்க ஆறுகள் என்பதை ஆப்பிரிக்க ஆறுகள் என்று மாற்ற முடியாதா? குறும்பன் 19:32, 15 டிசம்பர் 2007 (UTC)

தமிழக வழக்கில் "ஆப்பிரிக்கா" என்பதே பரவலாகப் பாவனையில் உள்ளது போற்தெரிகிறது. (கூகிள் தேடலில் 104,000 பதிவுகள் வருகின்றன). எனவே அப்படியே மாற்றிவிடலாம்.
கவனிக்க:
பத்திரிகை - பத்திரிக்கை (உ.வே.சா. பத்திரிகை என்றே எழுதினார்).
பாகிஸ்தான் - பாக்கிஸ்தான் (சில தமிழக இதழ்களில் பாகிஸ்தான் என்றும் எழுதுகிறார்கள்)
முருகனை முருKaன் என்றே தமிழகத்தமிழர்கள் உச்சரிக்கிறார்கள். ஆனால் முருக்கன் என்று எழுதுவதில்லை.
--Kanags 22:23, 15 டிசம்பர் 2007 (UTC)

"ஆப்பிரிக்கா" என்பதே தமிழக வழக்கில் உள்ளது, அதனாலயே இதை எழுத்துப்பிழை என்று கருதினேன். தமிழக உச்சரிப்பும் ஆப்பிரிக்கா என்றே இருக்கும், (மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் தமிழக தமிழர் உச்சரிப்பை கணக்கில் கொள்ள வேண்டாம்.) பத்திரிகை, பாகிஸ்தான் என்றே பல தமிழக நாளிதழ்கள் எழுதுகின்றன.

தமிழக தமிழர்கள் முருகனை முருக்கன் என்று உச்சரிப்பதில்லை என்று மட்டும் என்னால் உறுதியாக கூறமுடியும். --- குறும்பன் 00:04, 19 டிசம்பர் 2007 (UTC)