உள்ளடக்கத்துக்குச் செல்

பகுதியமுக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வளிமங்களின் ஒரு கலவையில், ஒவ்வொரு வளிமமும் கொண்டிருக்கும் பகுதியமுக்கம் அல்லது பகுதியழுத்தம் (Partial pressure) என்பது அவ்வளிமமானது கலவையின் கனவளவிலும் வெப்பநிலையிலும் தனியே இருக்குமானால், ஏற்படுத்தும் கருதுகோள் அமுக்கம் ஆகும்.[1] ஒரு கருத்தியல் வளிமக் கலவையின் மொத்த அமுக்கமானது, அக்கலவையிலுள்ள வளிமங்களின் பகுதியமுக்கங்களின் கூட்டுத்தொகைக்குச் சமனாகும்.[2]

ஒரு கருத்தியல் வளிமக் கலவையினுள் X என்னும் வளிமம் உள்ளது என்க.

[3]
 • VX என்பது Xஇன் பகுதிக் கனவளவு ஆகும்.
 • Vtot என்பது வளிமக் கலவையின் மொத்தக் கனவளவு ஆகும்.
 • pX என்பது Xஇன் பகுதியமுக்கம் ஆகும்.
 • Ptot என்பது வளிமக் கலவையின் மொத்த அமுக்கம் ஆகும்.
 • nX என்பது Xஇன் மூலளவு ஆகும்.
 • ntot என்பது வளிமக் கலவையின் மொத்த மூலளவு ஆகும்.

தாற்றனின் பகுதியமுக்க விதி

[தொகு]

தாற்றனின் பகுதியமுக்க விதிப்படி, ஒன்றோடொன்று வேதித் தாக்கத்தில் ஈடுபடாத வளிமங்களைக் கொண்ட ஒரு வளிமக் கலவையின் மொத்த அமுக்கமானது, கலவையிலுள்ள வளிமங்களின் பகுதியமுக்கங்களின் கூட்டுத்தொகைக்குச் சமனாகும்.[2]

X, Y, Z ஆகிய மூன்று கருத்தியல் வளிமங்களைக் கொண்ட வளிமக் கலவையைக் கருதுக.

[2]

இங்கு Ptot என்பது வளிமக் கலவையின் மொத்த அமுக்கம் ஆகும். pX, pY , pZ என்பன முறையே, X, Y, Z ஆகிய வளிமங்களின் பகுதியமுக்கங்கள் ஆகும்.

கருத்தியல் வளிமக் கலவைகள்

[தொகு]

கருத்தியல் வளிமக் கலவைகளில், பகுதியமுக்கங்களின் விகிதமானது, ஒத்த மூலளவுகளின் விகிதத்திற்குச் சமனாகும். இதிலிருந்து,

ஆகவே,

[3]

இங்கு,

 • = வளிமக் கலவையிலுள்ள ஏதாவதொரு வளிமத்தின் மூல் பின்னம்
 • = வளிமக் கலவையிலுள்ள ஏதாவதொரு வளிமத்தின் பகுதியமுக்கம்
 • = வளிமக் கலவையிலுள்ள ஏதாவதொரு வளிமத்தின் மூலளவு
 • = வளிமக் கலவையின் மொத்த மூலளவு
 • = வளிமக் கலவையின் மொத்த அமுக்கம்

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
 1. Charles Henrickson (2005). Chemistry. Cliffs Notes. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7645-7419-1.
 2. 2.0 2.1 2.2 க. பொ. த (உயர்தரம்) இரசாயனவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13. தேசிய கல்வி நிறுவகம். 2012. pp. 50–51.
 3. 3.0 3.1 க. பொ. த (உயர்தரம்) இரசாயனவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13. தேசிய கல்வி நிறுவகம். 2012. p. 200.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுதியமுக்கம்&oldid=3848871" இலிருந்து மீள்விக்கப்பட்டது