பகுச்சரா மாதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகுச்சரா மாதா

பகுச்சரா மாதா; சக்தி தாயின் அம்சமாக கன்னி வடிவத்தில் தோன்றிய ஓர் இந்துப் பெண் தெய்வமாவார். இவர் கற்பு மற்றும் கருவுறுதலுக்கான தெய்வம் ஆவார். அவர் ஹிஜ்ரா சமூகத்தின் பாதுகாவலராகக் கருதப்படுகிறார். [1] அவரது முதன்மை கோயில் இந்தியாவின் குஜராத்தின் மெக்சானா மாவட்டத்தில் உள்ள பெச்சராஜி நகரில் அமைந்துள்ளது.

சித்தரிப்பு மற்றும் சின்னங்கள்[தொகு]

பகுச்சரா மாதா நான்கு கரங்களுடன் கீழ் இடது கையில் ஒரு வாளும் மேல் இடக்கையில் வேத உரைகளும், மேல் வலக்கையில் திரிசூலமும் சுமக்கும் பெண்ணாகத் தோற்றம் தருகிறார். கீழ் வலக்கை அபய ஹஸ்த முத்திரையுடன் காணப்படுகிறது. அவள் ஒரு சேவலில் அமர்ந்திருக்கிறாள், இச்சேவல் அறியாமையைக் குறிக்கிறது.

அவர் ஸ்ரீ சக்ராவில் உள்ள தெய்வங்களில் ஒருவர் என்று சில கோட்பாடுகள் கூறுகின்றன. அவளுடைய வாகனத்தின் உண்மையான சின்னம் குர்குட், அதாவது இரண்டு வாய்களைக் கொண்ட பாம்பு. யோகத்தில் பகுச்சரா மாதா அமர்ந்துள்ள நிலையானது ஸ்ரீசக்கரத்தின் கீழிருந்து சகஸ்ராஹாரம் வரையில் செல்கிறது. அதாவது குண்டலினியை விழித்தெழச் செய்து இறுதியில் வீடுபேறு எனும் மோட்சத்தை அளிக்கும் தெய்வமாக பகுச்சரா மாதா விளங்குகிறாள் என்பதை இது குறிக்கிறது. [2]

கோயில்[தொகு]

மெக்சானா மாவட்டத்தில் பகுச்சாரா மாதா கோயில் வளாகம்

இந்தியாவின் குஜராத்தின் மெக்சானா மாவட்டத்தில் உள்ள பெச்சராஜி அல்லது பகுச்சாராஜி நகரில் பகுச்சாராஜி கோயில் அமைந்துள்ளது. இது   அகமதாபாத்தில் இருந்து 82 கி.மீ மற்றும் மெக்சனாவிற்கு மேற்கே 35 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. இதன் உண்மையான ஆலயம் கி. இ. 1152 இல் சங்கல் ராஜ் என்ற மன்னரால் கட்டப்பட்டது. மேலும் சன்னதியின் முதல் எஞ்சியிருக்கும் ஒரு கல்வெட்டுக்குறிப்பு கி. பி 1280 ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்று குறிக்கப்பட்டுள்லது.. கல்வெட்டின் படி பதினெட்டாம் நூற்றாண்டு வரை கோயில் கட்டிடக்கலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. [3]

கோயில் வளாகத்திற்குள் தேவியின் மூன்று சிவாலயங்கள் உள்ளன. ஆத்யஸ்தான்' (அசல் தளம்) என்று அழைக்கப்படும் சன்னதி வளாகத்தின் மிகப் பழமையான பகுதியாகும். ஒரு பரந்த, சிறிய இலைகள் கொண்ட வராக்காதி மரத்தை உள்ளடக்கிய ஒரு சிறிய கோயில் தெய்வம் முதலில் தோன்றிய இடம் என்று நம்பப்படுகிறது. இதை ஒட்டிய மற்றொரு சிறிய கோயில் உள்ளது. இது மத்தியஸ்தான் (இரண்டாவது அல்லது இடைநிலை இடம்) என அழைக்கப்படுகிறது இது தெய்வத்தை குறிக்கக்கூடிய ஒரு செருகப்பட்ட தகடும் அதன் நுழைவாயிலில் பூட்டப்பட்ட வெள்ளி கதவு ஒன்றும் உள்ளது.

கோயிலின் இந்த பகுதி பதினெட்டாம் நூற்றாண்டில் ஃபட்னாவிஸ் (அல்லது அந்த தலைப்பைக் கொண்ட ஒரு அதிகாரி) என்ற மராட்டியரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. 1779 இல் பரோடாவின் மராட்டிய ஆட்சியாளரின் தம்பியான மனாஜிராவ் கெய்க்வாட், தெய்வம் அவரது ஒரு கட்டியைக் குணப்படுத்திய பின்னர் அசல் சன்னதிக்கு அருகில் மூன்றாவது கட்டமைப்பைக் கட்டினார். மூன்றாவது இன்றைய பிரதான கோயில் மற்றும் தெய்வத்தை குறிக்கும் குவார்ட்ஸ் படிகத்தின் பல யந்திரம் உள்ளது. புனித கபில்தேவ் மற்றும் கலரி மன்னர் தேஜ்பால் ஆகியோரும் கோயிலின் கட்டுமானத்திற்கும்மறு சீரமைப்பிற்கும் பங்களிப்பு செய்துள்ளனர். கோயில் வளாகம் கல் சிற்பங்கள் மற்றும் சுவர் ஓவியங்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. குஜராத் மற்றும் ராஜஸ்தானுக்கு வெளியே நன்கு அறியப்பட்டிருந்தாலும், இந்த கோயில் ஒரு சிறிய சக்தி பீடமாகக் கருதப்படுகிறது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.5 மில்லியன் யாத்ரீகர்கள் இந்த கோயிலுக்கு வருகை தருகின்றனர். [4]

மேலும் காண்க[தொகு]

  • இந்து புராணங்களில் எல்ஜிபிடி கருப்பொருள்கள்

குறிப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுச்சரா_மாதா&oldid=3678485" இருந்து மீள்விக்கப்பட்டது