உள்ளடக்கத்துக்குச் செல்

பகீரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பகீரா (Bagheera[1]) என்பது 2024ஆம் ஆண்டு வெளியான கன்னட மீநாயகன் திரைப்படமாகும் [2] பிரசாந்த் நீல் எழுதிய கதையை அடிப்படையாக கொண்டு டாக்டர் சூரி இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இதை விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஸ்ரீமுரளியுடன் ருக்மணி வசந்த், பிரகாஷ் ராஜ், சுதாராணி, இராமச்சந்திர ராஜு, அச்யுத் குமார் , ரங்கயான ரகு ஆகியோர் நடித்துள்ளனர். பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை முறையே அர்ஜுன் செட்டி மற்றும் பிரணவ் ஸ்ரீ பிரசாத் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.[3] [4] [5]

பகீரா திரைப்படம், தீபாவளி வெளீயாடாக 2024 அக்டோபர் 31 அன்று வெளியாகி, விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான வரவேற்பைப் பெற்றது. இப்படம் ₹30 கோடி (ஐஅ$3.5 மில்லியன்) மேல் வருமானம் ஈட்டியது. [6]

கதை

[தொகு]

சிறுவனான வேதாந்த் பிரபாகர் ஒரு மீநாயகனாக விரும்புகிறான். ஆனால், புற்றுநோயால் இறப்பதற்கு முன் அவனின் தாய், சாதாரண மக்களே, குறிப்பாக காவல்துறை அதிகாரிகள்தான் உண்மையான மீநாயகர்கள் என்று அவனிடம் கூறிய பிறகு, வேதாந்த் ஒரு காவல்துறை அதிகாரி ஆக முடிவு செய்கிறான். தன் தந்தை பிரபாகரைப் போலவே ஒரு காவல்துறை அதிகாரி ஆகவேண்டும் என்று வேதாந்த் தீர்மானிக்கிறான்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, வேதாந்த் தனது காவல்துறைப் பயிற்சியை முடித்து மங்களூரில் பணியமர்த்தப்படுகிறான். அங்கு அவன் சினேகா என்ற சுயாதீன மருத்துவரைச் சந்தித்து, அவள் மீது காதல் கொள்கிறான். சினேகாவும் வேதாந்தின் மீது காதல் கொள்கிறாள். அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. ஒரு நாள், வேதாந்த் காவல்துறை நடவடிக்கை ஒன்றை ஏற்பாடு செய்து, நகரத்தில் உள்ள பல ரவுடிகளைக் கைது செய்கிறான். ஆனால், ஊழல்வாதிகளான உயர் அதிகாரிகளால் அவர்கள் விடுவிக்கப்படுகிறனர். மேலும், தன் தந்தையும் கையூட்டுப் பெறுவதை அறிந்து வேதாந்த் அதிர்ச்சியடைகிறான். ஒரு நாள், ஒரு பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதை வேதாந்த் காண்கிறான். அவள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாள் என்பதையும் அறிந்துகொள்கிறான். இந்தச் நிகழ்வின் காரணமாக, வேதாந்த் இரவில் பகீரா என்று தன்னை அழைத்துக்கொண்டு ஒரு மீநாயகன் உடையை அணிந்து, குற்றவாளிகளைக் கொடூரமாகக் கொல்கிறான். சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காக ஒரு ஊழல் அதிகாரியாக நடித்து, தலைமைக் காவலரான நாராயணனின் உதவியுடன் பகீராவாக இருந்து குற்றவாளிகளை ஒழிக்கத் தொடங்குகிறான்.

இதற்கிடையில், கோட்டியன் பலரைக் கடத்தி, துறைமுகப் பகுதியில் ஒரு கண்டெய்னரில் இரகசியமாகக் கொண்டு செல்லத் தயாராகிறான். இரயில் நிலையத்தில் காணாமல் போனதாகப் புகார்கள் வந்ததையடுத்து, வேதாந்த் பகீராவாக துறைமுகப் பகுதிக்குச் செல்கிறான். கோட்டியனும் அவனது கும்பலும் பகீராவைக் காண்கின்றனர். அவர்களுக்குள் துப்பாக்கிச் சண்டை ஏற்படுகிறது. அதில், பகீரா மீது குண்டு பாய்கிறது. இருந்தாலும் பகீரா தப்பித்து விடுகிறான். வேதாந்த் சினேகாவின் உதவியை நாடுகிறான். உடல் குணமடைந்த பிறகு, அவன் கோட்டியனின் வீட்டிற்குச் செல்கிறான். அங்கு கோட்டியனாலேயே அவனது குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதைக் காண்கிறான். உறுப்புக் கடத்தல் கும்பலை நடத்தும் ராணா என்ற குற்றத் தலைவனால் அவர்கள் கொல்லப்படுவதை தான் விரும்பவில்லை என்று கோட்டியன் கூறிவிட்டு, தற்கொலை செய்து கொள்கிறான்.

பகீரா ராணாவைப் பழிவாங்கினாரா என்றவாறு கதை உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Roaring Star Sriimurali's Bagheera is sole Kannada film on list of top 20 most anticipated movies of 2024". OTTPlay (in ஆங்கிலம்). Archived from the original on 2024-12-04. Retrieved 2024-10-30.
  2. ↑ "Bagheera teaser - A superhero-like Sriimurali sets out to seek vigilante justice in the actioner". OTTPlay (in ஆங்கிலம்). Retrieved 2024-07-22.
  3. ↑ "Watch: 'Bagheera' teaser out, Srii Murali-starrer promises high-octane action". India Today (in ஆங்கிலம்). 2023-12-17. Archived from the original on 2024-01-18. Retrieved 2024-07-22.
  4. ↑ "Bagheera Teaser OUT! Sriimurali's Roaring Comeback Is Raw And Mysterious. Fans Scream 'Waiting Anna'". Times Now (in ஆங்கிலம்). 2023-12-17. Retrieved 2024-07-22.
  5. ↑ "ಪ್ರಶಾಂತ್ ನೀಲ್ ಕಥೆ, ಡಾ ಸೂರಿ ನಿರ್ದೇಶನ, ಶ್ರೀಮುರಳಿ ಹೀರೋ...! 'Bagheera Movie ರಿಲೀಸ್‌ಗೆ ಕಾದು ಕುಳಿತ ಫ್ಯಾನ್ಸ್!". Vijaya Karnataka (in கன்னடம்). Archived from the original on 2024-11-12. Retrieved 2024-10-30.
  6. ↑ "Bagheera release date: Sriimurali's actioner to hit theatres on THIS date". OTTPlay (in ஆங்கிலம்). Retrieved 2024-09-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகீரா&oldid=4548307" இலிருந்து மீள்விக்கப்பட்டது