பகாங் சுல்தான் அபு பக்கர்
| சுல்தான் அபு பக்கர் Sultan Abu Bakar Ri’ayatuddin Al-Mu’azzam أبو بكر رعاية الدين المعظم شاه | |||||
|---|---|---|---|---|---|
| அல் முவாசாம் | |||||
| பகாங் சுல்தான் | |||||
| ஆட்சிக்காலம் | 22 சூன் 1932 – 5 மே 1974 | ||||
| நிறுவல் | 28 மே 1933 | ||||
| முன்னையவர் | சுல்தான் முத்தாசிம் பில்லா சா | ||||
| பின்னையவர் | சுல்தான் அகமட் சா | ||||
| பிறப்பு | 29 மே 1904 பெக்கான், பகாங் இராச்சியம் | ||||
| இறப்பு | 5 மே 1974 (அகவை 69) பெக்கான், பகாங் | ||||
| புதைத்த இடம் | 7 மே 1974 | ||||
| துணைவர் | பட்டியல்
| ||||
| குழந்தைகளின் பெயர்கள் | பட்டியல்
| ||||
| |||||
| தந்தை | சுல்தான் அப்துல்லா அல் முத்தாசிம் | ||||
| தாய் | செ சோம் பிந்தி துன் | ||||
| மதம் | சன்னி | ||||
சுல்தான் அபு பக்கர் அல்லது பகாங் சுல்தான் அபு பக்கர் GCMG; (29 மே 1904 – 5 மே 1974) ஆங்கிலம்: Abu Bakar of Pahang; மலாய்: Sultan Abu Bakar Ri’ayatuddin al-Mu’azzam Shah; சாவி: سلطان أبو بكر رعاية الدين المعظم شاه ابن المرحوم سلطان عبد الله المعتصم بالله شاه ) என்பவர் மலேசியா, நவீன பகாங் மாநிலத்தின், நான்காவது சுல்தான் ஆவார். பகாங் இராச்சிய அரசவைப் பதிவுகளின்படி இவர் பகாங் இராச்சியத்தின் 35-ஆவது சுல்தானாக அறியப்படுகிறார்.
இவர் தன் குடிமக்களால் எளிதில் அணுகக்கூடிய ஆட்சியாளராகவும்; அனைவரிடமும் நட்பு பாராட்டக் கூடிய அரசராகவும் ஆட்சி செய்தார் என அறியப்படுகிறது.
வாழ்க்கை
[தொகு]சுல்தான் அபு பக்கர் 29 மே 1904-இல் பகாங், பெக்கான் இசுதானா இங்காப் அரண்மனையில் பிறந்தார். இவரின் தந்தை சுல்தான் அப்துல்லா அல் முத்தாசிம் பில்லா சா; அவரின் இரண்டாவது மனைவியான சோம் பிந்தி துன் (Som binti Tun) என்பவருக்கு இரண்டாவது மகனாக சுல்தான் அபு பக்கர் பிறந்தார்.[1]
பெக்கான் மலாய் பள்ளியில் தன் தொடக்கக் கல்வியைப் பெற்றார். அதன் பிறகு, கோலா கங்சார் மலாய் கல்லூரியில் ஆங்கிலப் பிரிவில் தன் கல்வியைத் தொடர்ந்தார்.
1932-ஆம் ஆண்டு தன் தந்தைக்குப் பின்னர் சுல்தான் பதவியை சுல்தான் அபு பக்கர் ஏற்றார். இவர் தன் குடிமக்களால் எளிதில் அணுகக்கூடிய ஆட்சியாளராக அறியப்பட்டார். பொது மக்களைச் சந்திக்க பகாங் மாநிலத்தின் கிராமப் பகுதிகளுக்குப் பயணம் செய்தார். நாடு விடுதலை பெறுவதற்கான வழிமுறைகளுக்கு ஆதரவு வழங்கினார்.
இரண்டாம் உலகப் போர்
[தொகு]மலாயா, வடக்கு போர்னியோ மற்றும் சரவாக் மீதான சப்பானிய ஆக்கிரமிப்பு காலத்தில், அவர் மலேசிய வத்தானியா பாதுகாப்புப் படை (Territorial Army of Malaysia); இரண்டாம் உலகப் போரின் பிரித்தானிய தென்கிழக்கு ஆசிய கட்டளைப் பிரிவின் படை 136 (Force 136); மற்றும் மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம் போன்ற சப்பானிய எதிர்ப்பு இயக்கங்களுக்கு மறைமுகமாக தன்னுடைய ஆதரவை வழங்கினார்.[2]
சுல்தான் அபு பக்கர், அரச மரபு இல்லாத சாமானிய பெண்களைத் திருமணம் செய்து கொள்வதில் நாட்டம் கொண்டிருந்தார். பிரபல நடிகைகள் மற்றும் பாடகிகள் சிலர் அந்தப் பட்டியலில் இருந்தனர். இதன் காரணமாக மற்ற மலாய் ஆட்சியாளர்களிடையே அவர் குறைவாக மதிப்பிடப்பட்டார்; மற்றும் மலாய் ஆட்சியாளர்கள் அவரை மலேசிய அரசராக தேர்ந்தெடுக்க ஐந்து முறைகள் மறுத்துவிட்டனர்.
குடும்பம்
[தொகு]சுல்தான் அபு பக்கர், பேராக் மாநிலத்தின் சுல்தான் இசுகந்தரின் மகள் தெங்கு அம்புவான் பகாங் ராஜா பாத்திமா (Tengku Ampuan Pahang Raja Fatimah) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பேராக், கோலா கங்சார் அரச நகரில் அவர்களின் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணம் இரண்டு அரச குடும்பங்களுக்கும் இடையே நடந்த திருமணமாக அறியப்படுகிறது.[3]
இறப்பு
[தொகு]அவர் 5 மே 1974 அன்று; பெக்கான் இசுதானா பெனிஞ்சாவ் அரண்மனையில் (Istana Peninjau) தம்முடைய 69-ஆவது வயதில் காலமானார். அவருக்குப் பிறகு அவருடைய மகன் சுல்தான் அகமட் சா ஆட்சிக்கு வந்தார்.[4][5]
பகாங் மாநில சுல்தான்கள்
[தொகு]| ஆட்சி காலம் | சுல்தான் | ஆங்கிலத்தில் |
|---|---|---|
| சுல்தான் அகமது முவாசாம் சா | Ahmad al-Muadzam Shah of Pahang | |
| சுல்தான் இரண்டாம் மாமுட் சா | Mahmud Shah II of Pahang | |
| சுல்தான் முத்தாசிம் பில்லா சா | Abdullah al-Muʽtassim Billah Shah of Pahang | |
| சுல்தான் அபு பக்கர் | Abu Bakar of Pahang | |
| சுல்தான் அகமட் சா | Ahmad Shah of Pahang | |
| சுல்தான் அப்துல்லா | Abdullah of Pahang[6] |
விருதுகள்
[தொகு]பகாங் விருதுகள்
[தொகு]
- Family Order of the Crown of Indra of Pahang (25 மே 1967)
- Order of the Crown of Pahang (27 திசம்பர் 1968)
மலாயா விருதுகள்
[தொகு]
மலாயா
- Order of the Crown of the Realm (DMN) (31 ஆகத்து 1958)[7]
பிற மாநிலங்களின் விருதுகள்
[தொகு]
ஜொகூர்
- Royal Family Order of Johor (DK I) (1965)[8]
கெடா
- Royal Family Order of Kedah (DK) (1969)[9]
பேராக்
(DK) (1970)[10]
வெளிநாடுகளின் விருதுகள்
[தொகு]
ஐக்கிய இராச்சியம்
- Order of St Michael and St George (GCMG) – Sir (1 சூன் 1953)[11]
புரூணை
- Family Order of Seri Utama (DK) - Dato Seri Utama (1958)[12]
மேற்கோள்
[தொகு]- ↑ The Malayan Law Journal (in ஆங்கிலம்). Malaya Publishing House Limited. 1974.
- ↑ "Tun Razak Jadi Tali Barut Jepun?". The Patriots. 2017-07-26. Retrieved 2020-12-24.
- ↑ "KERABAT DIRAJA PAHANG BERGAMBAR". Portal Diraja Pahang (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-12-24.
- ↑ Who's who in Malaysia and Guide to Singapore (in ஆங்கிலம்). J. V. Morais. 1975.
- ↑ Jalal, Ahmad Farid Abd (2008). Joget Pahang, Gamelan Melayu: The Classical Ensemble of the Pahang Royal Court (in ஆங்கிலம்). Pahang State Museum and the National Department for Culture and Arts, Ministry of Unity, Culture, Arts and Heritage Malaysia. ISBN 978-983-2456-12-4.
- ↑ "Sultan Abdullah proclaimed Pahang sultan". Malaysiakini. 15 January 2019. https://www.malaysiakini.com/news/460244.
- ↑ "Senarai Penuh Penerima Darjah Kebesaran, Bintang dan Pingat Persekutuan Tahun 1958" (PDF).
- ↑ "Sultan of Johore's Birthday Awards". The Straits Budget: p. 17. 3 November 1965. https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/straitsbudget19651103-1.2.116.
- ↑ "Sultan terima anugerah". Berita Harian: p. 5. 29 October 1969. https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/beritaharian19691029-1.2.54.
- ↑ "Darjah kerabat di-Raja Perak". Berita Harian: p. 11. 29 May 1970. https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/beritaharian19700529-1.2.72.
- ↑ "No. 39863". இலண்டன் கசெட் (Supplement). 26 May 1953. p. 2945.
- ↑ "Brunei ruler honours 7 Malayans". Straits Budget: p. 9. 1 October 1958. https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/straitsbudget19581001-1.2.40.
நூல்கள்
[தொகு]- Ahmad Sarji Abdul Hamid (2011), The Encyclopedia of Malaysia, vol. 16 – The Rulers of Malaysia, Editions Didier Millet, ISBN 978-981-3018-54-9
- Khoo, Gilbert (1980), "From Pre-Malaccan period to present day", New Straits Times