பகாங் சுல்தான் அகமது முவாசாம் சா
| சுல்தான் அகமது முவாசாம் சா Sultan Ahmad Al-Muazzam Shah أحمد المعظم شاه | |||||
|---|---|---|---|---|---|
| பகாங் சுல்தான் | |||||
சுல்தான் அகமது முவாசாம் சா (1897). | |||||
| பகாங் ராஜா பெண்டகாரா | |||||
| ஆட்சிக்காலம் | 10 சூன் 1863 – 8 ஆகத்து 1881 | ||||
| முன்னையவர் | பகாங் துன் முத்தாகிர் | ||||
| பகாங் சுல்தான் | |||||
| ஆட்சிக்காலம் | 16 ஆகத்து 1881 – 13 ஏப்ரல் 1909 | ||||
| நிறுவல் | 25 செப்டம்பர் 1884 | ||||
| பின்னையவர் | சுல்தான் மாமுட் | ||||
| பிறப்பு | 23 மே 1836 மௌலானா தீவு, பெக்கான், பகாங் சுல்தானகம் | ||||
| இறப்பு | 9 மே 1914 (அகவை 77) பெக்கான், பகாங் சுல்தானகம் | ||||
| புதைத்த இடம் | 11 மே 1914 கோலா ப்காங், பகாங் சுல்தானகம் | ||||
| துணைவர் |
| ||||
| குழந்தைகளின் பெயர்கள் | துன் மூடா பெசார்; சுல்தான் மாமுட்; தெங்கு அலி; சுல்தான் அப்துல்லா அல் முத்தாசிம்; தெங்கு சுலைமான்; தெங்கு சூசோ; தெங்கு உமார்; தெங்கு முகமது; தெங்கு லோங்; துன் சலாமா; தெங்கு டாலாம்; தெங்கு நோங் பத்திமா; தெங்கு அஜா கல்சோம்; தெங்கு அஜா மரியம் | ||||
| |||||
| தந்தை | பகாங் துன் அலி | ||||
| தாய் | சிக் லோங் எசா | ||||
| மதம் | சன்னி | ||||
சுல்தான் அகமது முவாசாம் சா அல்லது பகாங் சுல்தான் அகமது முவாசாம் சா (23 மே 1836 – 9 மே 1914) ஆங்கிலம்: Sultan Al-Muʽazzam Shah; மலாய்: Sultan Ahmad Al-Mu'adzam Shah; சாவி:سلطان أحمد المعظم شاه ابن المرحوم بندهار سري مهاراج تون علي ) என்பவர் மலேசியா, பகாங் மாநிலத்தின் முதலாவது சுல்தான்; ஆறாவது ராஜா பெண்டகாரா (Raja Bendahara) ஆவார். மேலும் இவர் பகாங் மாநிலத்தின் நிறுவனர் என்றும் அறியப்படுகிறார்.[1]
இவர் பொதுவாக துன் வான் அகமது என்று அழைக்கப்பட்டார். பகாங் உள்நாட்டுப் போரில் (Pahang Civil War) தன்னுடைய மூத்த சகோதரர் துன் முத்தாகிர் என்பவரைத் தோற்கடித்து; 1863-ஆம் ஆண்டு பகாங் அரியணையைக் கைப்பற்றினார். அதன் பின்னர் அவர் செரி பதுக்கா டத்தோ பெண்டகாரா சிவா ராஜா துன் அகமது (Sri Paduka Dato' Bendahara Siwa Raja Tun Ahmad) என்ற பட்டத்தை ஏற்றுக் கொண்டார்.
கிள்ளான் போர்
[தொகு]சுல்தான் அகமது முவாசாம் சா ஆட்சியின் தொடக்க கால ஆண்டுகளில், பகாங் மாநிலம் பல்வகையான கொந்தளிப்புகளில் சிக்கியது. சிலாங்கூரில் வசித்து வந்த துன் முதாகிரின் மகன்களால் சுல்தான் அகமது முவாசாம் சாவைக் கவிழ்க்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவே பகாங் ஆட்சியை சிலாங்கூர் உள்நாட்டுப் போரில் நேரடியாக ஈடுபட வழிவகுத்தது.[2]
பகாங் - சிலாங்கூர் வட்டாரங்களில் நடைபெற்ற உள்நாட்டுப் போர்கள்; ஆளும் வர்க்கத்திற்கும் பிராந்தியத் தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தின. உள்நாட்டுப் போர்களுக்குப் பின்னர் இரு தரப்பும் பல பிரிவுகளாகப் பிரிந்தன.
1881-ஆம் ஆண்டில், பகாங் மாநிலத்திலும், மேற்கு மலாய் மாநிலங்களிலும் தன்னுடைய அதிகாரம் குறைந்து வருவதை உணர்ந்த சுல்தான் அகமது முவாசாம் சா, தன்னை முன்னிலைப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டார். அந்த வகையில் தமக்குத் தானே துன் வான் அகமது சுல்தான் அகமது அல்-முவாசாம் சா என்ற பட்டத்தைச் சூட்டிக்கொண்டார்.
பிரித்தானியர்களுடன் ஒப்பந்தம்
[தொகு]இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவருடைய பிராந்தியத் தலைவர்கள் அவரை பகாங் மாநிலத்தின் சுல்தானாக அறிவித்தனர். இந்த நிகழ்வு; இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஜொகூர் முடியாட்சியுடன் இணைந்து இருந்த பகாங்; தன்னாட்சி பெற்று ஒரு சுல்தானகமாக மாற்றம் கண்டதைக் குறிக்கிறது.
1887-ஆம் ஆண்டில் சுல்தான் அகமது முவாசாம் சா, பிரித்தானிய நீரிணை குடியேற்ற அரசாங்கத்திடமிருந்து முறையான அங்கீகாரத்தைப் பெற்றார். அதற்கு ஈடாக அவர் பிரித்தானியர்களுடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அந்த ஒப்பந்தம், அவரின் அரசவையில் ஒரு பிரித்தானிய அறிவுரைஞரை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உட்பபடுத்தியது.[3]
பகாங் மாநில சுல்தான்கள்
[தொகு]| ஆட்சி காலம் | சுல்தான் | ஆங்கிலத்தில் |
|---|---|---|
| சுல்தான் அகமது முவாசாம் சா | Ahmad al-Muadzam Shah of Pahang | |
| சுல்தான் இரண்டாம் மாமுட் சா | Mahmud Shah II of Pahang | |
| சுல்தான் முத்தாசிம் பில்லா சா | Abdullah al-Muʽtassim Billah Shah of Pahang | |
| சுல்தான் அபு பக்கர் | Abu Bakar of Pahang | |
| சுல்தான் அகமட் சா | Ahmad Shah of Pahang | |
| சுல்தான் அப்துல்லா | Abdullah of Pahang[4] |
மேற்கோள்
[தொகு]- ↑ "His Royal Highness Sultan Ahmad Al-Mu'adzam Shah was the son of Bendahara Ali and Che Long, also known as Che Lingga. Bendahara Ali was the ruler of Pahang from 1806 to 1857". Portal Rasmi Istana Pahang. 16 September 2023. Retrieved 15 October 2025.
- ↑ "SULTAN AHMAD'S CREDIBILITY IN THE PAHANG REBELLION (1891-1895)" (PDF). Jabatan Kenegaraan Kepemimpinan dan Ketamudunan, Fakulti Pengajian dan Pengurusan Pertahanan Universiti Pertahanan Nasional Malaysi. Retrieved 15 October 2025.
- ↑ "The Straits Settlements was formed by the amalgamation of Penang, Malacca and Singapore in 1826 followed by Labuan, which joined in 1906". eresources.nlb.gov.sg. Retrieved 30 May 2022.
- ↑ "Sultan Abdullah proclaimed Pahang sultan". Malaysiakini. 15 January 2019. https://www.malaysiakini.com/news/460244.