உள்ளடக்கத்துக்குச் செல்

பகாங் சுல்தான் அகமட் சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுல்தான் அகமட் சா
Ahmad Shah Al-Musta’in Billah
أحمد شاه المستعين بالله
அல்-முசுதாகின் பில்லா
மலேசிய அரசர்
ஆட்சிக்காலம்26 ஏப்ரல் 1979 – 25 ஏப்ரல் 1984
முடிசூட்டுதல்10 சூலை 1980
முன்னையவர்சுல்தான் யகாயா பெத்ரா
பின்னையவர்சுல்தான் இசுகந்தர்
பகாங் சுல்தான்
ஆட்சிக்காலம்7 மே 1974 – 11 சனவரி 2019
முடிசூட்டுதல்8 மே 1975
முன்னையவர்சுல்தான் சுல்தான் அபு பக்கர்
பின்னையவர்சுல்தான் அப்துல்லா
பிறப்பு(1930-10-24)24 அக்டோபர் 1930
பெக்கான், பகாங் இராச்சியம்
இறப்பு22 மே 2019(2019-05-22) (அகவை 88)
கோலாலம்பூர், மலேசியா[1]
புதைத்த இடம்
துணைவர்
  • தெங்கு அம்புவான் அப்சான்
    (தி. 1954; இற. 1988)
  • சுல்தானா கல்சோம் (தி. 1991)
குழந்தைகளின்
பெயர்கள்
பட்டியல்
  • தெங்கு மரியம்
  • தெங்கு முகைனி
  • தெங்கு அயிசா மார்செலா
  • சுல்தான் அப்துல்லா
  • தெங்கு அப்துல் ரகுமான்
  • தெங்கு நோங் பத்திமா
  • தெங்கு சகாரியா
  • தெங்கு பகாத் முவாசாம் சா
பெயர்கள்
Tengku Ahmad Shah ibni Tengku Abu Bakar
மரபுபெண்டகாரா அரசமரபு
தந்தைசுல்தான் அபு பக்கர்
தாய்தெங்கு அம்புவான் பெசார் ராஜா பத்திமா
மதம்சன்னி

சுல்தான் அகமட் சா அல்லது பகாங் சுல்தான் அகமட் சா (24 அக்டோபர் 1930 – 22 மே 2019) ஆங்கிலம்: Ahmad Shah of Pahang; மலாய்: Ahmad Shah Al-Musta’in Billah ibni Almarhum Sultan Abu Bakar Ri’ayatuddin Al-Mu’azzam Shah; சாவி: سلطان أبو بكر رعاية الدين المعظم شاه ابن المرحوم سلطان عبد الله المعتصم بالله شاه ) என்பவர் மலேசியா, பகாங் மாநிலத்தின் சுல்தான் ஆவார். 1974 முதல் 2019-இல் பதவி விலகும் வரை பகாங் சுல்தானாக இருந்தார். மேலும் அவர் 1979 முதல் 1984 வரை ஏழாவது மலேசிய அரசர் (Yang di-Pertuan Agong) ஆவார்.

சனவரி 11, 2019 அன்று; பகாங் அரசவை (Pahang Royal Council) ஓர் அவசரக் கூட்டத்தை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் சுல்தான் அகமட் சா சுல்தான் பதவியில் இருந்து விலக முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு முன்னர், பகாங் மாநில அரசியலமைப்பில் ஒரு சிறப்புத் திருத்தம் செய்யப்பட்டது. அதன் பின்னர் பகாங் அரசவைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது.

சுல்தானின் உடல்நலக் குறைவு காரணமாகவும்; ஆட்சி செய்ய இயலாமையின் காரணமாகவும் சுல்தான் அகமட் சா பதவியில் இருந்து விலக வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.[2] சனவரி 12, 2019 அன்று; சுல்தான் அகமட் சா அவர்களின் பதவி விலகல் அறிவிக்கப்பட்டது. அவரின் மகன், தெங்கு அப்துல்லா, பகாங்கின் சுல்தான் ஆனார். பின்னர், அதே மாதத்தின் பிற்பகுதியில் அவர் அடுத்த மலேசிய அரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

வாழ்க்கை

[தொகு]

சுல்தான் அகமட் சா, 24 அக்டோபர் 1930-இல், பகாங், பெக்கான், இசுதானா மங்கா துங்கல் (Istana Mangga Tunggal) அரண்மனையில் பிறந்தார். அவர் சுல்தான் அபு பக்கரின் (ஆ. 1932–1974) ஒரே மகன் ஆவார். தாயாரின் பெயர் தெங்கு அம்புவான் பெசார் ராஜா பத்திமா இசுகந்தர் சா கடசுல்லா (1910–1988) (Tengku Ampuan Besar Raja Fatimah binti Almarhum Sultan Iskandar Shah Kaddasullah). தெங்கு அம்புவான் பெசார் ராஜா பத்திமா பேராக் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஆவார்.

சுல்தான் அகமட் சா தம் உயர்நிலைக் கல்வியை கோலா கங்சார் மலாய் கல்லூரியில் பெற்றார். பின்னர் அவர் வொர்செசுடர் கல்லூரி, ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் எக்டிடர் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலிருந்து பொது நிர்வாகத் துறையில் பட்டம் பெற்றார். 1974-இல் தன் தந்தைக்குப் பிறகு பகாங் சுல்தானாகப் பதவி ஏற்றார்.

சர்ச்சைகள்

[தொகு]
மறைந்த சுல்தான் அகமட் சா அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், சின் சுவீ குகைக் கோயிலில் பகாங் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

1979-ஆம் ஆண்டு, சுல்தான் அகமட் சா, 7-ஆவது மலேசிய அரசராக தேர்ந்தெடுக்கப்பட்ட காலக்கட்டம் ஒரு சர்ச்சைக்கு உரிய காலக் கட்டமாகக் கருதப்படுகிறது. அந்தக் கட்டத்தில் மலேசியப் பிரதமராக பதவி ஏற்கவிருந்த பிரதமர் மகாதீர் முகமதுவிற்கும் இவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தன.

இருப்பினும், அவை பொய்யானவை என்று பின்னர் நிரூபிக்கப்பட்டன. எனினும், இதற்கு முன்னர் 22 ஆண்டுகளுக்கு முன்பு, சுல்தான் அகமட் சா அவர்களின் தந்தை சுல்தான் அபு பக்கர்; மலேசிய அரசராக தேர்ந்தெடுக்கப்படுவதில் ஐந்து முறை தோல்வி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுல்தான் அகமட் சா சர்ச்சைக்குரிய, தலைக்கனம் மிக்க ஆளுமை கொண்டவர் என்றும்; தனனுடைய பகாங் முதலமைச்சர்களை சிறு சிறு கருத்து வேறுபாடுகளுக்காக பதவிதுறப்பு செய்ய கட்டாயப்படுத்தி உள்ளார் என்றும் அறியப்படுகிறது.

விளையாட்டு

[தொகு]

இவருக்குப் பிடித்த பொழுதுபோக்குகள் காற்பந்தாட்டம், குழிப்பந்தாட்டம், செண்டாட்டம் மற்றும் குதிரையேற்றம் ஆகியவை ஆகும். சுல்தான் அகமது சா ஒரு தீவிர விளையாட்டு வீரர். இவர் 1984 முதல் 2014 வரை மலேசிய காற்பந்து சங்கத்தின் (Football Association of Malaysia) (FAM) தலைவராகப் பொறுப்பு வகித்தார்.[4] [5]

இறப்பு

[தொகு]

சிறிது காலம் உடல்நிலை பாதிக்கப்பட்ட சுல்தான் அகமது சா, 2019 சனவரி 11-ஆம் தேதி சுல்தான் பதவியில் இருந்து விலகினார். அதன் பின்னர் சில மாதங்கள் கழித்து, மே 22, 2019 அன்று, காலை 8:50 மணிக்கு மலேசிய இருதய மையத்தில் தம்முடைய 88-ஆவது வயதில் காலமானார். [6]

பகாங், பெக்கான் நகரில் உள்ள பகாங் அரச கல்லறையில் (Pahang Royal Mausoleum); அவரின் மறைந்த மனைவி தெங்கு அம்புவான் அப்சானின் கல்லறைக்கு அருகில், சுல்தான் அகமது சா அடக்கம் செய்யப்பட்டார்.[7] பகாங் மாநிலத்தில் 40 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டது, மேலும், மாநிலம் முழுவதும் பகாங் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. அதே நேரத்தில் 3 நாட்களுக்கு அனைத்துப் பொழுதுபோக்கு நிகழ்வுகளும் நிறுத்தம் செய்யப்பட்டன.[8]

பகாங் மாநில சுல்தான்கள்

[தொகு]
நவீன பகாங் மாநில சுல்தான்கள்
ஆட்சி காலம் சுல்தான் ஆங்கிலத்தில்
1881–1914
சுல்தான் அகமது முவாசாம் சா Ahmad al-Muadzam Shah of Pahang
1914–1917
சுல்தான் இரண்டாம் மாமுட் சா Mahmud Shah II of Pahang
1917–1932
சுல்தான் முத்தாசிம் பில்லா சா Abdullah al-Muʽtassim Billah Shah of Pahang
1932–1974
சுல்தான் அபு பக்கர் Abu Bakar of Pahang
1932–1974
சுல்தான் அகமட் சா Ahmad Shah of Pahang
2019–தற்போது வரையில்
சுல்தான் அப்துல்லா Abdullah of Pahang[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Agong's father, former Pahang Sultan, dies at age 88". The Star Online. 22 May 2019. Retrieved 22 May 2019.
  2. "Tengku Muda: Pahang constitution amended to pave way for new Sultan". 12 January 2019.
  3. "Tengku Abdullah to be proclaimed Pahang sultan on Jan 15". Malaysiakini. 12 January 2019. Retrieved 14 January 2019.
  4. Samuel, Eric (25 May 2014). "Football: High noon at FAM Congress as TM Pahang takes over - The Star Online". www.thestar.com.my. Retrieved 14 January 2019.
  5. Asian football mourns passing of legendary figure.
  6. "Agong's father, former Pahang Sultan, dies at age 88". The Star Online. 22 May 2019. Retrieved 22 May 2019.
  7. "Sultan Ahmad Shah laid to rest at Pekan Royal Mausoleum". The Star Online. 23 May 2019. Retrieved 23 May 2019.
  8. Alagesh, T. N. (22 May 2019). "Pahang declares Thursday (May 23) a holiday to mark Sultan Ahmad Shah's death". New Straits Times. Retrieved 18 June 2019.
  9. "Sultan Abdullah proclaimed Pahang sultan". Malaysiakini. 15 January 2019. https://www.malaysiakini.com/news/460244. 
அரச பட்டங்கள்
முன்னர் மலேசிய அரசர்
(யாங் டி பெர்துவான் அகோங்)

1979–1984
பின்னர்
முன்னர் பகாங் சுல்தான்
1974–2019
பின்னர்

நூல்கள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகாங்_சுல்தான்_அகமட்_சா&oldid=4367619" இலிருந்து மீள்விக்கப்பட்டது