பகாங் இராச்சியம்
பகாங் இராச்சியம் Pahang Kingdom كرجاءن ڤهڠ Kerajaan Pahang | |||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| 1770–1881 | |||||||||
|
கொடி | |||||||||
| நிலை | தன்னாட்சி இராச்சியம்; ஜொகூர் பேரரசு (1770–1853) | ||||||||
| தலைநகரம் | பெக்கான் | ||||||||
| பேசப்படும் மொழிகள் | மலாய், பகாங் மலாய் | ||||||||
| சமயம் | சன்னி | ||||||||
| அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
| ராஜா பெண்டகாரா | |||||||||
• 1770–1802 | பகாங் அப்துல் மஜீத் (முதல் சுல்தான்) | ||||||||
• 1863–1881 | பகாங் சுல்தான் அகமது முவாசாம் சா (கடைசி சுல்தான்) | ||||||||
| வரலாறு | |||||||||
| 1770 | |||||||||
• விடுதலை | 1853 | ||||||||
| 1857–1863 | |||||||||
| 1872–1873 | |||||||||
| 8 செப்டம்பர் 1881 | |||||||||
| நாணயம் | ஈய வார்ப்பு கட்டி, பூர்வீக தங்கம்; வெள்ளி நாணயங்கள் | ||||||||
| |||||||||
| தற்போதைய பகுதிகள் | மலேசியா | ||||||||
பகாங் இராச்சியம் (மலாய்: Kerajaan Pahang; ஆங்கிலம்: Pahang Kingdom) என்பது 1770 முதல் 1881 வரை மலாயாவில் அமைந்திருந்த ஒரு மலாய் இராச்சியம்; மற்றும் தற்போதைய மலேசிய மாநிலமான பகாங் மாநிலத்தின் முன்னோடி மாநிலமாகும். ஜொகூர் பேரரசு படிப்படியாக வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து, பகாங்கில் பெண்டகாரா அரசமரபு தன் அதிகாரத்தை வலுப்படுத்தியது. அதன் பின்னணியில் இந்த பகாங் சுல்தானகம் உருவானது.
அரியணை வாரிசுரிமை
[தொகு]18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பகாங்கில் ஒரு தன்னாட்சி இராச்சியம் நிறுவப்பட்ட பின்னர் பகாங் துன் அப்துல் மஜீத் (Tun Abdul Majid of Pahang) என்பவர் பகாங்கின் முதல் ராஜா பெண்டகாராவாக அறிவிக்கப்பட்டார்.[1] பகாங்கைச் சுற்றியுள்ள பகுதிகள் இந்த இராச்சியத்துடன் இணைக்கப்பட்ட பின்னர்; ஒரு பரம்பரை வழிமுறையைக் கொண்ட நிர்வாகப் பகுதி உருவாக்கப்பட்டது; மற்றும் ராஜா பெண்டகாராவால் நேரடியாக நிர்வகிக்கப்பட்டது.
ஜொகூர் சுல்தானகத்தின் நிருவாகப் பலகீனம்; சர்ச்சைக்குரிய அரியணை வாரிசுரிமை; ஆகிய இரண்டுமே ஜொகூர் பேரரசு நலிவுற்றதற்கு காரணங்களாக அமைந்தன. அவற்றின் காரணமாக பகாங்கில் பெண்டகாரா ஆட்சி; ஜொகூர்; சிங்கப்பூரில் தெமாங்கோங் ஆட்சி; மற்றும் ரியாவு தீவில் யாம் துவான் மூடா (Yamtuan Muda) ஆட்சி; ஆகிய ஆட்சி நிர்வாகங்கள் கூடுதலான வலிமை பெற்று; தன்னாட்சியாகச் செயல்படுவதற்கு வழிவகுத்தன.[2]
பகாங்கில் தன்னாட்சி
[தொகு]1853-ஆம் ஆண்டில், நான்காவது ராஜா பகாங் துன் அலி (Tun Ali of Pahang), ஜொகூர் சுல்தானுடனான தன் விசுவாசத்தைத் துறந்து, பகாங்கின் தன்னாட்சி ஆட்சியாளரானார்.[3][4] அவர் தன் ஆட்சிக் காலத்தில் அமைதியையும் உறுதித் தன்மையையும் பராமரிக்க முடிந்தது.
இருப்பினும் 1857-இல் அவருடைய இறப்பு; வாரிசுரிமை சர்ச்சைக்கு வழிவகுத்தது. பகாங் பெண்டகாரா துன் அலியின் இளைய மகன் பகாங் அகமது முவாசாம் (Ahmad Muʽazzam) தனது ஒன்றுவிட்ட சகோதரர் பகாங் துன் முத்தாகிரின் வாரிசுரிமையை எதிர்த்துப் போராடினார்; இதுவே ஒரு சர்ச்சையாக மாறி, பின்னர் பகாங் உள்நாட்டுப் போராக (Pahang Civil War) மாறியது.
பகாங்கின் அண்டை இராச்சியமான திராங்கானு சுல்தானகத்தின் ஆதரவு; மற்றும் சயாமியர்களின் ஆதரவு ஆகிய இருதரப்பு ஆதரவுகளினால் பகாங் சுல்தான் அகமது முவாசாம் சா வெற்றி பெற்றார். பின்னர் இவர் பகாங்கில் இருந்த முக்கியமான நகரங்களின் மீது தன்னுடைய கட்டுப்பாட்டை நிலைநாட்டினார்; அத்துடன் 1863-இல் தன் சகோதரரையும் பகாங்கை விட்டு வெளியேற்றினார். இறுதியில் அவர் பகாங்கின் கடைசி ராஜா பெண்டகாராவாகப் பணியாற்றினார்; மேலும் 1881-ஆம் ஆண்டில் பகாங் நகரத் தலைவர்களால் பகாங் சுல்தானாக அறிவிக்கப்பட்டார்.[5]
பகாங் பெண்டகாரா பட்டியல்
[தொகு]| பெயர் | மலாய் பெயர் |
ஆட்சி பதவி | ஆட்சி காலம் |
|---|---|---|---|
| பகாங் துன் அப்துல் மஜீது | Tun Abdul Majid of Pahang | Sri Paduka Dato' Bendahara Paduka Raja | 1770–1802 |
| பகாங் துன் முகமது | Tun Muhammad of Pahang | Sri Paduka Dato' Bendahara Sri Maharaja | 1802–1803 |
| பகாங் துன் கோரிசு | Tun Koris of Pahang | Sri Paduka Dato’ Bendahara Paduka Raja | 1803–1806 |
| பகாங் துன் அலி | Tun Ali of Pahang | Sri Paduka Dato’ Bendahara Sewa Raja | 1806–1847 |
| பகாங் துன் முத்தாகிர் | Tun Mutahir of Pahang | Sri Paduka Dato’ Bendahara Sri Maharaja | 1847–1863 |
| பகாங் சுல்தான் முவாசாம் சா | Sultan Ahmad al-Muadzam Shah | Sri Paduka Dato’ Bendahara Sewa Raja | 1863–1881 |
பகாங் மாநில சுல்தான்கள்
[தொகு]| ஆட்சி காலம் | சுல்தான் | ஆங்கிலத்தில் |
|---|---|---|
| சுல்தான் அகமது முவாசாம் சா | Ahmad al-Muadzam Shah of Pahang | |
| சுல்தான் இரண்டாம் மாமுட் சா | Mahmud Shah II of Pahang | |
| சுல்தான் முத்தாசிம் பில்லா சா | Abdullah al-Muʽtassim Billah Shah of Pahang | |
| சுல்தான் அபு பக்கர் | Abu Bakar of Pahang | |
| சுல்தான் அகமட் சா | Ahmad Shah of Pahang | |
| சுல்தான் அப்துல்லா | Abdullah of Pahang[6] |
மேலும் காண்க
[தொகு]- பகாங் சுல்தான்
- பகாங் பெண்டகாரா அரசமரபு
- பகாங் சுல்தான் அப்துல்லா
- பகாங் மந்திரி பெசார்
- பகாங் மாநில சட்டமன்றம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Linehan 1973, ப. 52
- ↑ Ahmad Sarji Abdul Hamid 2011, ப. 82
- ↑ Linehan 1973, ப. 66
- ↑ Ahmad Sarji Abdul Hamid 2011, ப. 83
- ↑ Ahmad Sarji Abdul Hamid 2011, ப. 83
- ↑ "Sultan Abdullah proclaimed Pahang sultan". Malaysiakini. 15 January 2019. https://www.malaysiakini.com/news/460244.
நூல்கள்
[தொகு]- Linehan, William (1973), History of Pahang, Malaysian Branch Of The Royal Asiatic Society, Kuala Lumpur, ISBN 978-0710-101-37-2
- Ahmad Sarji Abdul Hamid (2011), The Encyclopedia of Malaysia, vol. 16 - The Rulers of Malaysia, Editions Didier Millet, ISBN 978-981-3018-54-9