பகவ்பூர் வெடிப்பு 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2017 பகவ்பூர் வெடிப்பு
Ahmedpur East is located in பாக்கித்தான்
Ahmedpur East
Ahmedpur East
Ahmedpur East (பாக்கித்தான்)
நாள்2017 சூன் 25
நேரம்06:30 PKT (01:00 GMT)
அமைவிடம்பாக்கித்தான், பஞ்சாப், கிழக்கு அகமத்பூர்
இறப்புகள்157+
காயமுற்றோர்140+ (50 கடுமையாக)

2017, சூன் 25 அன்று பாகித்தானின் பகவல்பூர் மாவட்டத்தில் கிழக்கு அகம்த்பூர் அருகே கல்நெய் ஏற்றிச் சென்ற ஒரு தொட்டி சரக்குந்து வெடித்து, இதனால் குறைந்தபட்சம் 153 பேர் கொல்லப்பட்டு 117-க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர். அதன் ஓட்டுநர் N-5 தேசிய நெடுஞ்சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியை திருப்ப முயற்சித்தபோது அந்த சரக்குந்து கவிழ்ந்தது. விபத்து பற்றிய செய்தியானது அருகிலுள்ள கிராமங்களுக்கு பரவியதும், நூற்றுக்கணக்கான மக்கள் தொட்டியில் இருந்து ஒழுகும் கல்நெய்யைப் பிடித்துச் செல்ல அவ்விடத்துக்கு விரைந்தனர். பின்னர் சரக்குந்து வெடித்தது; ஆரம்ப அறிக்கைகளில் அங்கிருந்த ஒருவர் புகைபிடித்தபோது பெட்ரோலில் விழுந்த வெண்சுருட்டால் இவ்விபத்து நேர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.[1][2][3][4]

நேர்ச்சி[தொகு]

உள்ளூர் நேரம் 6 மணியளவில் (01:00 GMT) சுமார் 40,000 லிட்டர் (10,567 கேலன்) எரிபொருள் சரக்கு கொண்ட ஒரு தொட்டி சரக்குந்து, பாக்கித்தானின் கராச்சியில் இருந்து லாகூருக்கு பயணித்தபோது அவ்வண்டி பாகவல்பூர் மாவட்டத்தின் கிழக்குக்கு அகமத்பூர் அருகே N-5 தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வளைவு திருப்பத்தை வேகமாக கடக்க முயற்சிக்கும் போது, நேர்ச்சிக்கு உள்ளாகி கவிழ்ந்து.[5]

விபத்து பற்றிய செய்தி உடனடியாக அருகிலுள்ள கிராமமான ரம்சன்பூர் ஜோயாவிற்கு பரவியது, கிராமவாசிகளுக்கு ஒரு உள்ளூர் பள்ளிவாசலின் மேல் இருந்த ஒரு ஒலிபெருக்கியை வழியாக செய்தி குறி்த்து எச்சரித்தனர்.[6] பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட, சாலையின் அருகே மாம்பழத் தோப்புகளில் பணிபுரியும் ஏராளமான மக்கள் (ஒரு ஆதார மதிப்பீட்டின்படி 500), அதில் கசியும் கல்நெய்யை சேகரிப்பதற்காக இடத்தில் கூடினர். அந்த இடத்தில் கூட்டத்தை அகற்றுவதற்காக காவல் துறையினர் மேற்கொண்ட முயற்சிகளை கூட்டத்தினர் அலட்சியம் செய்தனர். சுமார் 10 நிமிடங்கள் கழித்து, சேதமடைந்த கொள்கலனில் இருந்து கசிந்த எரிபொருள் தீப்பிடித்தபிறகு சரக்குந்து வெடித்து, இதனால் குறைந்தது 153 பேரை் கொல்லப்பட்டு 117 பேர் காயமடைந்தனர்.[7][8] சில செய்தி ஊடக அறிக்கையின்படி, சரக்குந்து விபத்திற்குப் பிறகு சுமார் 45 நிமிடங்கள் கழித்து வெடித்தது.[9]

வெடிப்புக்கு காரணம் குறித்து ஆரம்ப அறிக்கைகள் முரண்பட்டவையாக இருந்தன: சிலர் எரிபொருள் கசிந்த சரக்குந்து அருகே ஒரு வெண்சுருட்டைப் பற்றவைத்தபோது இது நிகழ்ந்தது என்றும், வேறு சிலர் கூறுகையில் பல இடங்களில் இருந்து நிகழ்விடத்திற்கு பலர் விசையுந்து மூலம் விரைந்தனர் அப்போது அந்த வாகணங்களில் ஏற்பட்ட தீப்பொறியே இதற்கு காரணம் என்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pakistan oil tanker inferno kills at least 140". BBC News. 25 June 2017. http://fuseposts.com. பார்த்த நாள்: 25 June 2017. 
  2. Saifi, Sophie. "Pakistan oil tanker truck explosion kills at least 135". CNN. http://www.cnn.com/2017/06/25/asia/deadly-oil-tank-explosion-pakistan/index.html. பார்த்த நாள்: 25 June 2017. 
  3. PTI (25 June 2017). "149 killed, 117 injured as oil tanker explodes in Pakistan". http://economictimes.indiatimes.com/news/international/world-news/123-killed-as-oil-tanker-exploded-in-pakistans-bahwalpur/articleshow/59306772.cms?from=mdr. பார்த்த நாள்: 25 June 2017. 
  4. "PM in Bahawalpur as death toll from highway inferno reaches 157". The Nation. 26 June 2017. http://nation.com.pk/national/26-Jun-2017/families-affected-by-oil-tanker-fire-express-gratitude-to-pm-for-being-with-them. 
  5. Zafar, Kashif (25 June 2017). "Over 125 killed, 200 injured in Bahawalpur oil tanker fire". Express Tribune. https://tribune.com.pk/story/1444418/least-120-people-killed-100-injured-bahawalpur-oil-tanker-fire/. பார்த்த நாள்: 25 June 2017. 
  6. Safi, Michael (25 June 2017). "Overturned oil tanker explodes in Pakistan, killing 148". The Guardian. https://www.theguardian.com/world/2017/jun/25/overturned-oil-tanker-explodes-in-pakistan-killing-more-than-100. பார்த்த நாள்: 25 June 2017. 
  7. "Death toll from Bahawalpur oil tanker fire climbs to 153". Dawn (newspaper). 25 June 2017. https://www.dawn.com/news/1341713. பார்த்த நாள்: 25 June 2017. 
  8. "Oil truck explosion kills 132 people in Pakistan". Reuters. 25 June 2017. https://www.reuters.com/article/us-pakistan-tanker-idUSKBN19G07F. பார்த்த நாள்: 25 June 2017. 
  9. "Oil Tanker Fire in Pakistan Leaves More Than 140 Dead". New York Times. 25 June 2017. https://www.nytimes.com/2017/06/25/world/asia/pakistan-oil-tanker-fire.html. பார்த்த நாள்: 25 June 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகவ்பூர்_வெடிப்பு_2017&oldid=3561374" இருந்து மீள்விக்கப்பட்டது