பகவான் பிர்சா உயிரியல் பூங்கா

ஆள்கூறுகள்: 23°27′29″N 85°27′25″E / 23.458°N 85.457°E / 23.458; 85.457
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகவான் பிர்சா உயிரியல் பூங்கா
Map
அமைவிடம்ராஞ்சி, சார்க்கண்டு, இந்தியா
உயிரினங்களின் எண்ணிக்கைபாலூட்டிகள்: 27 சிற்றினங்கள்
பறவைகள்: 39 சிற்றினங்கள்
பாம்புகள்: 17 சிற்றினங்கள்
ஆண்டு பார்வையாளர்கள்8 லட்சம்
உறுப்புத்துவங்கள்மத்திய விலங்கு காட்சியக ஆணையம்
வலைத்தளம்www.ranchionline.in/city-guide/bhagwan-birsa-biological-park-in-ranchi

  பகவான் பிர்சா உயிரியல் பூங்கா (Bhagwan Birsa Biological Park) என்பது ராஞ்சி விலங்கு காட்சி சாலை என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் சார்க்கண்டின் ராஞ்சியில் உள்ள ஓர்மஞ்சியில் சக்லா கிராமத்தில் அமைந்துள்ளது.

ராஞ்சி உயிரியல் பூங்கா 1994-ல் கெட்டல்சுட் அணையின் கரையில் பாட்னா-ராஞ்சி பிரதான நெடுஞ்சாலையில் நிறுவப்பட்டது. பூங்காவில் இரண்டு பிரிவுகள் உள்ளன. அவை 1) விலங்கியல் பிரிவு 83 ஹெக்டேரில் நிறுவப்பட்டுள்ளது. 2) தாவரவியல் பிரிவு 21 ஹெக்டேரில் பரவியுள்ளது.[1]

வசதிகள்[தொகு]

மிருகக்காட்சிசாலையில் ஒரு பிரத்தியேக கால்நடை மருத்துவர் மற்றும் விலங்குகளின் உடல்நலப் பிரச்சினைகளைக் கண்காணிக்க 24 x 7 பயிற்சி பெற்ற பணியாளர்கள் உள்ளனர். விலங்குகளுக்கான நன்கு நிறுவப்பட்ட நோயியல் ஆய்வகம் பூங்காவில் உள்ளது. இதில் விலங்குகளுக்கு முழுமையான சிகிச்சை அளிப்பதற்காகத் தனிப் பிரிவும் மீட்கப்பட்ட விலங்குகளுக்கான அவசர பிரிவும் அடங்கும்.[2]

உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்கு மின்கலன் மூலம் இயக்கப்படும் வாகனங்கள் மற்றும் படகு சவாரி வசதிகளை வழங்குகிறது.[3] குடிநீர், சீரான இடைவெளியில் கொட்டகைகளுடன் கூடிய ஓய்வு பகுதி, முதலுதவி பெட்டி, உடல் ஊனமுற்ற நபருக்கான சக்கர நாற்காலி, கழிப்பறைகள் மற்றும் கழிவறைகள், திசை வரைபடம் மற்றும் அறிவிப்புப் பலகை வழிசெலுத்தல், பார்வையாளர்களுக்கான தகவல் நிலையம், சுயதகவல் கணினி வசதி, சேவை, வழிகாட்டி வரைபடம் மற்றும் உணவக வசதி செய்து தரப்பட்டுள்ளன.

முன்முயற்சிகள்[தொகு]

இந்த மிருகக்காட்சிசாலையில் சிறந்த வசதிகளை வழங்குவதற்காக விலங்குகளைத் தத்தெடுக்கும் திட்டத்தையும் கொண்டுள்ளது. பல்வேறு அமைப்புகள் மற்றும் பிரபலங்கள் ராஞ்சி உயிரியல் பூங்காவில் விலங்குகளைத் தத்தெடுத்தனர். பிரியங்கா சோப்ரா, தத்தெடுத்த புலி துர்கா & சிங்கம் சுந்தரி ஆகும். மேகான் மற்றும் பஞ்சாப் தேசிய வங்கி போன்ற நிறுவனங்கள் கூட சில விலங்குகளைத் தத்தெடுத்துள்ளன.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "RMC". www.ranchimunicipal.com. பார்க்கப்பட்ட நாள் 2020-01-04.
  2. Pioneer, The. "Special arrangements at Bhagwan Birsa Zoo to keep animals warm". The Pioneer (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-04.
  3. Pioneer, The. "Now, battery operated bus, golf carts at Birsa Zoo". The Pioneer (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-04.
  4. "After tigress, Priyanka adopts lioness Sundari". The Times of India (in ஆங்கிலம்). June 2, 2012. பார்க்கப்பட்ட நாள் 2020-01-04.