பகவல்பூர் உயிரியல் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பகவல்பூர் உயிரியல் பூங்கா (Bahawalpur Zoo) என்பது 1942 இல் நிறுவப்பட்டது. இது பாக்கித்தானின் பஞ்சாப் உள்ள பகவல்பூரில் 25 ஏக்கர் (10 ஹெக்டேர்) பரப்பளவில் அமைந்த உயிரியல் பூங்காவாகும். இதை பாக்கித்தான் அரசு நிர்வகிக்கிறது. உயிரியல் பூங்காவில் எப்போதாவது ஆசியச் சிங்கங்கள் மற்றும் வங்காளப் புலிகள் போன்ற காட்டு பூனைகளை கொண்டு வந்து நாட்டின் பிற உயிரியல் பூங்காக்களிலிருந்து இனப்பெருக்கம் செய்ய வழிவகை வழங்கியுள்ளது. பறவைகள், ஊர்வன மற்றும் பாலூட்டிகளுடன் கூடிய மீன்வள மற்றும் விலங்கியல் அருங்காட்சியகமும் இதில் உள்ளது.

வரலாறு[தொகு]

இதை 1942 ஆம் ஆண்டில் பகவல்பூரின் முன்னாள் அமீர் சர் நவாப் சாதிக் முகம்மது கான் அப்பாசி என்பவர் அமைத்தார். அதற்கு பின்னர் "செர் பாக்" ("சிங்கத் தோட்டம்" என்று பொருள்) என்று பெயரிடப்பட்டது. [1] 1955 ஆம் ஆண்டில், இதன் நிர்வாகி முனைவர் குலாம் ஐதர் சும்ரா வேளாண்மைத் துறைக்கு மாற்றப்பட்டார். 1977 முதல் 1982 வரை, இது பஞ்சாப்பின் கால்நடைத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது. இலாகூர் உயிரியல் பூங்கா, கராச்சி உயிரியல் பூங்கா மற்றும் இஸ்லாமாபாத் உயிரியல் பூங்கா போன்றவற்றுக்குப் பின்னர் பகவல்பூர் உயிரியல் பூங்கா பாக்கித்தானில் நான்காவது பெரிய உயிரியல் பூங்காவாகும். [2]

கண்காட்சிகள்[தொகு]

கண்காட்சிகள் பழைய பாணி கூண்டுகளுக்கும் புதிய அகழ்வாராய்ச்சிக்கும் இடையில் உள்ளன. ஒரு பழைய கண்காட்சியில் ஒரு ஜோடி வீட்டு பூனைகளும், குள்ளநரிகளும், ஒரு இந்தியப் புனுகுப்பூனை ஆகியவை உள்ளன . முதலைகளும் ஒரு பெரிய வெளிப்புற அடைப்பில் வைக்கப்பட்டுள்ளன. சிங்கங்களும், புலிகளும், கழுதைப்புலிகளும் மிகவும் நவீன கூண்டுகளில் வைக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள ஒரு பெரிய குளத்தில் கூழைக்கடாக்களும், கொக்குகளும் , வாத்துகளும் உள்ளன. மயில் கூட கண்காட்சியில் உள்ளன. புல்வாய், பன்றி மான், நீலான், ஐரோப்பிய சிவப்பு மான், இந்திய சிறுமான், மற்றும் ஐரோப்பிய ஆடுகள் போன்ற அனைத்தும் பெரிய புல்வெளிகளில் வைக்கப்பட்டுள்ளன.

இதில் பஞ்சாபில் கடைசியாக சிங்கம் சுடப்பட்டதாகக் கூறப்படுவது உட்பட, அடைக்கப்பட்ட விலங்குகளுடன் கூடிய அருங்காட்சியகமும் உள்ளது.

விமர்சனம்[தொகு]

மிருகக்காட்சிசாலையானது விலங்குகளை புறக்கணித்ததற்காக பல்வேறு முறை விமர்சனங்களைப் பெற்றுள்ளது, இதன் விளைவாக பெரும்பாலும் மோசமான வாழ்க்கை நிலைமைகள் ஏற்படுகின்றன. [3] [4]

இங்கு காணப்படும் பறவைகள்[தொகு]

பாலூட்டிகள்

ஊர்வன

பாதுகாப்பு[தொகு]

இதில் ஆசியச் சிங்கம், ஆசியக் கருப்பு கரடி, வங்காளப் புலி, புல்வாய் மற்றும் பன்றி மான் போன்ற பல்வேறு அச்சுறுத்தப்பட்ட இனங்கள் இனப்பெருக்கம் செய்யப்பட்டுள்ளன. நிதிய சிறுமான் , புள்ளிமான், நீலான் போன்றவையும் இதில் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்கின்றன.

குறிப்புகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2018-04-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-08-05 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. http://tribune.com.pk/story/560837/animal-rights-no-water-for-animals-at-bahawalpur-zoo/
  3. http://dawn.com/news/1044372/bahawalpur-zoos-tale-of-neglect