உள்ளடக்கத்துக்குச் செல்

பகவத்ஜ்ஜூகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பகவத்ஜ்ஜுகம் என்பது கி.பி 7ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஒரு சமசுகிருத கேலிக்கூத்து நாடகம் ஆகும். இதனைப் போதாயனர் எழுதியாதாகக் கூறப்படுகிறது.[1] இருப்பினும், கல்வெட்டு உள்ளிட்ட பிற சான்றுகள் இந்த நாடகத்தை பல்லவ மன்னர் முதலாம் மகேந்திரவர்மன் எழுதியதாகக் குறிப்பிடுகின்றன. இவரே மத்தவிலாச பிரஹாசனா என்றும் அழைக்கப்படும் மற்றூமொரு முக்கிய கேலிக்கூத்து நாடகத்தையும் எழுதியுள்ளார்.[2][3][4] இது சமசுகிருத இலக்கியத்தில் நையாண்டி நாடகத்தின் பத்து வகையான நாடகங்களுல் ஒன்று.[5]

உள்ளடக்கம்

[தொகு]
  • நகைச்சுவையான உரையாடல்கள்
  • ஆன்மாக்களின் மறுபிறப்பு
  • இந்து தர்மத்தில் சந்நியாசம் பற்றிய விவாதம்

ஆகியவற்றைக் கொண்ட இந்த நகைச்சுவை நாடகம், மதக் கோட்பாடுகளை நையாண்டி செய்வதை நோக்கமாகக் கொண்டது

கதாபாத்திரங்கள்

[தொகு]

பரிவ்ராஜகர் - துறவி அல்லது குரு சாண்டில்யர் - சீடர் வசந்த்சேனர் - விலைமகள் ராமிலேகர் - விலைமகளின் காதலன் விதுஷகர் - நகைச்சுவையாளர் ஒரு போலி மருத்துவர் யமதூதர் - மரணத்தின் அதிபதியான யமராஜாவின் தூதர்

கதைச் சுருக்கம்

[தொகு]

தோட்டத்தில் இருக்கும் ஒரு பெண்ணை நோக்கி கவனம் செலுத்தும் ஒரு குருவுக்கும் ஒரு சீடனுக்கும் இடையிலான சன்யாச இந்து தர்மம் குறித்த விவாதத்துடன் தொடங்குகிறது. விவாதம் தொடரும்போது, ​​அந்தப் பெண் ஒரு பாம்பினால் கடித்து இறந்து விடுகிறாள். இது சீடனை ஆழமாகப் பாதிக்கிறது. தனது யோக சக்தியை வெளிப்படுத்தி குரு சீடனின் ஆன்மாவை பெண்ணின் உடலுக்குள் மாற்றுகிறார். பின்னர் அவர் எழுந்து தத்துவ விவாதத்தைத் தொடர்கிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bodhāyanakavi (1925). Bhagavadajjukiyam: a Prahasana of Bodhayana Kavi with commentary (in சமஸ்கிருதம்). Pāliyagranthaśālā.
  2. Lockwood, Michael. Metatheater and Sanskrit Drama: Part II.
  3. Saxena, Saurabh (11 November 2010). "Puratattva" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-05-01.
  4. "Cave Temples Mamandur". Million Gods (in ஆங்கிலம்). Retrieved 2023-05-01.
  5. www.wisdomlib.org (2017-05-07). "Ten Kinds of Play (daśarūpa) [Chapter XX]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). Retrieved 2023-05-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகவத்ஜ்ஜூகம்&oldid=4336670" இலிருந்து மீள்விக்கப்பட்டது