பகத் சிங் அருங்காட்சியகம், கட்கர் காலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகத் சிங் அருங்காட்சியகம், கட்கர் காலன்
भगत सिंह पैतृक गृह स्मारक संघ्रालय, खटकर कलां, भारत
பகத் சிங் 1929
இடம்கட்கர் காலன், சாகித் பகத் சிங் நகர் மாவட்டம். பஞ்சாப் (இந்தியா)
வடிவமைப்பாளர்இந்திய பஞ்சாப் அரசு
வகைவீடு
கட்டுமானப் பொருள்செங்கலும் காரையும்
திறக்கப்பட்ட நாள்1981 (பகத்சிங்கின் 50 ஆவது நினைவாண்டு)
அர்ப்பணிப்புபகத் சிங்
இணையதளம்Bhagat Singh Ancestral Home Memorial Museum at Khatkar Kalan


பகத் சிங் அருங்காட்சியகம் (Bhagat Singh Museum) எனப்படும் இந்த அருங்காட்சியகம், இந்திய பஞ்சாப் மாகாண சாகித் பகத் சிங் நகர் மாவட்டத்தின் (முன்பு நவான்ஷாகர் மாவட்டம் (Nawanshahr district) பக்வாரா சாலையில் உள்ள 'கட்கர் காலன்' (Khatkar Kalan) என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் இக்கிராமத்திலுள்ள இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளருமான சாகித் பகத் சிங் என்பவரின் மூதாதையர்கள் வாழ்ந்த வீட்டில் அவரது நினைவு அருங்காட்சியமாக அமைந்துள்ளது.[1]

துவக்கம்[தொகு]

இந்த அருங்காட்சியகம், 1981-ம் ஆண்டு மார்ச் 23-ம் நாள் துவங்கப்பட்டதாகும். மேற்குறிப்பிட்ட இந்த நாள், சாகித் பகத் சிங் அவர்களின் ஐம்பதாவது நினைவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது.[2]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "Shahed-e-Azam Bhagat Singh Museum, Khatkar Kalian". www.ruralpunjab.com (ஆங்கிலம்). 10 September 2015. Archived from the original on 2016-06-16. பார்க்கப்பட்ட நாள் 2016-07-23.
  2. "Sardar Bhagat Singh Museum - Khatkar Kalan, Punjab". archivetravel.financialexpress.com (ஆங்கிலம்). SATURDAY, 11 AUGUST 2012 17:26. Archived from the original on 2016-03-20. பார்க்கப்பட்ட நாள் 2016-07-25. {{cite web}}: Check date values in: |date= (help)