பகடை (இனக் குழுமம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகடை
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு
மொழி(கள்)
தமிழ், தெலுங்கு
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
அருந்ததியர்

பகடை (Pagadai) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஒர் இனக்குழுவினர் ஆவர். இச்சமூகத்தினர் அருந்ததியர் சமூகத்தின் ஒரு பிரிவினராக கருதப்படுகின்றனர். தமிழகத்தில் பகடைகள் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளைப் பேசும் மக்களாக வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் பட்டியல் பிரிவில் உள்ளனர்.இவர்கள் விஜயநகர ஆட்சியின் காலத்தில் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தனர்.இச்சமூகத்தினரின் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்டோராவர்.[1] இவர்கள் கம்பளத்தார் எனும் ஒன்பது வகை சாதியருள் ஒரு பிரிவினராக அறியப்படுகின்றனர்.[2]

தொழில்

இச்சமூகத்தினர் பொதுவாக தோல் சம்பந்தமான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள்தொகை

2001ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இவர்கள் 13 ஆயிரத்து 795 பேர் வசிக்கின்றனர்.

மேற்கோள்கள்

  1. K. S. Singh, R. Thirumalai, S. Manoharan, தொகுப்பாசிரியர் (1997). People of India: Tamil Nadu Part 2. Affiliated East-West Press [for] Anthropological Survey of India. பக். 260. https://books.google.co.in/books?id=P3LiAAAAMAAJ. "The Pagadai of Tamil Nadu are said to have migrated from Andhra Pradesh long ago . Their total population is 17,863 in the 1981 Census . Most of them have forgotton their mother tongue , Telugu and speak Tamil among themselves and with others ." 
  2. ச.முருகானந்தம், தொகுப்பாசிரியர் (1989). மக்கள் வழக்காற்றியல். தேன்மழை பதிப்பகம் , சென்னை. பக். 130. https://books.google.co.in/books?id=2XmCAAAAMAAJ. "காட்டு நாய்க்கர் , கம்பள நாய்க்கர் , புல் கட்டும் நாய்க்கர் , ஒட்டர் , நரிக்குறவர் , கோடாங்கி , பகடை , ராமக்குளுவன் என்பவர் இக்கம்பளத்தாரின் உட்பிரிவு களைச் சேர்ந்தவர் என்பர்." 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகடை_(இனக்_குழுமம்)&oldid=3709620" இலிருந்து மீள்விக்கப்பட்டது