மகரம் மயங்கா னகரத் தொடர்மொழி
Appearance
(னகரம் மயங்கா மகரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மகரம் என்னும் சொல் 'ம்' என்னும் மெய்யழுத்தைக் குறிக்கும். மொழியின் [1] இறுதியில் வரும் மகரம் னகர எழுத்தாக மயங்கி வரும்.
எடுத்துக்காட்டு - அறம் செய்யான் அறன் அழீஇ, அறன் வலியுறுத்தல், புறனடை - என்பன மயங்கி வந்தன.
இப்படி மயங்காமல் வரும் னகரத் தொடர்மொழிகள் ஒன்பது எனத் தொல்காப்பியம் வரையறுத்துக் கூறுகிறது. [2]
இவற்றிற்கு எடுத்துக்காட்டாக உரையாசிரியர் தரும் சொற்கள் இவை.
அழன் [3], எகின் [4] [5], குயின் [6], செகின் [7] பயின் [8], புழன் [9], விழன் [10], கடான் [11] [12], வயான் [13] - இவை இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகள்.
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ சொல்லின்
- ↑ மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த
னகரத்தொடர்மொழி ஒன்பஃது என்ப
புகர் அறக் கிளந்த அஃறிணை மேன (தொல்காப்பியம் 82) - ↑ ஈமத் தீ
- ↑ அன்னம் என்னும் பறவை
- ↑ புளியமரம்
- ↑ மழைமேகம்
- ↑ செகில் எனக் எனக் கூறப்படும் திமில், காளைமாட்டுக் கொட்டேறி
- ↑ அரக்கு
- ↑ பிணம்
- ↑ விழல் என்னும் பேய்க்கரும்பு. இது நாணல், நாணாத்தட்டை எனவும் கூறப்படும்
- ↑ காட்டெருமை
- ↑ யானை மதத்தைக் குறிக்கும் கடாம் என்னும் சொல் கடான் என மயங்கும்
- ↑ கருவுற்றிருக்கும் பெண்களுக்கு மண் தின்னத் தோன்றும் ஆசை