ந. சுசீந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ந. சுசீந்திரன் ஒரு தமிழ் எழுத்தாளர். இலங்கையில் நெடுந்தீவில் பிறந்தவர். மனைவி இன்பா மகன் டினோ. ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்.

1980களிலிருந்து ஜெர்மனியில் வசிக்கும் இவர் அரசு அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர். புலம்பெயர்ந்த தமிழர் மத்தியில் ஜேர்மன் மொழிபெயர்ப்புத் துறையில் நன்கு அறியப்பட்டவர். கலை இலக்கியம் குறித்த கட்டுரைகளைப் புகலிடத்திலிருந்து வெளிவரும் சிற்றிதழ்களில் எழுதிவருகிறார்.

"இவர், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் பலவற்றை ஜெர்மன் மற்றும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஜெர்மனுக்கும் மொழிபெயர்த்திருக்கிறார்."[1]

பங்களிப்பு[தொகு]

அரசியல், இலக்கியம், மனிதகுல வரலாறு ஆகிய துறைகளில் தொடர்ந்து இயங்கி வருபவர். பெர்டொல்ட் பிறெஹ்ட், குந்தர் கிராஸ், ஹைன்றிஸ் பொல், எறிக் பிறீட் போன்றவர்களது படைப்புக்களைத் தமிழுக்கு மொழியாக்கம் செய்துள்ளார்.

தமிழ்ப் படைப்பாளிகளை ஜெர்மன் மொழிக்கு அறிமுகப்படுத்தி எழுத்துத்துறையில் ஈடுபட்டு வருகின்றார்.

பல்வேறு சர்வதேச மாநாடுகளில் கலந்துகொண்டு இலங்கையின் அரசியல் யாப்பு, சமஸ்டி அடிப்படையிலான நிரந்தரத் தீர்வு, மனித உரிமைமீறல்கள் குறித்து ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.

வெளியிணைப்பு[தொகு]

சுசீந்திரன் நேர்காணல்

  1. கட்டுரை படைப்போர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ந._சுசீந்திரன்&oldid=1888643" இருந்து மீள்விக்கப்பட்டது