ந,ந,ஈ,தி உளவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ந,ந,ஈ,தி உளவியல் (LGBT psychology) என்பது நங்கை, நம்பி, ஈரர், திருனர்களின் வாழ்க்கையைச் சுற்றியுள்ள உளவியல் துறையாகும், குறிப்பாக இந்த நபர்களின் பல்வேறு வகையான உளவியல் முன்னோக்குகள் மற்றும் அனுபவங்களைக் குறிக்கிறது.மேலும் இது குழந்தை வளர்ப்பு மற்றும் குடும்ப நடைமுறைகள் , ந,ந,ஈ,தி தனிநபர்களுக்கான ஆதரவுகள், அத்துடன் ந,ந,ஈ,தி சமூகம் சம்பந்தப்பட்ட முன்முடிவு மற்றும் பாகுபாடு போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியது. [1] [2] [3]

வரையறை[தொகு]

ந,ந,ஈ,தி உளவியல் என்பது சமூகத்தில் உள்ள அனைத்து மக்களையும் உள்ளடக்கியது அல்ல அகனள், உகவர், இருபால், திருநங்கை மற்றும் புதுமர் ஆகியோரின் உளவியலைக் குறிக்கிறது..கடந்த காலத்தில் இந்த துறை அகனள் மற்றும் புதுமர் உளவியல் என்று அழைக்கப்பட்டது. [4] இப்போது அது இருபாலின மற்றும் திருநங்கைகளின் அடையாளங்களையும் நடத்தைகளையும் உள்ளடக்கியது. கூடுதலாக, "க்யூ" என்பது புதுமர்களையும் குறிக்கிறது, இதில் பாரம்பரியமாக கருத்தில் கொள்ளப்பட்டு வரும் பாலியல் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட பாலியல் அடையாளங்கள் மற்றும் நடத்தைகளும் அடங்கும். [5]

"புதுமர்" என்ற வார்த்தை வரலாற்று ரீதியாக சமூகத்தில் உள்ள மக்களை நோக்கி களங்கப்படுத்தும் நோக்கிலேயே பயன்படுத்தப்பட்டது.இன்று புதுமராக தங்களை அடையாளம் காண்பவர்கள் இதனை சுய அடையாளமாக மீட்டெடுத்துள்ளனர். இருப்பினும், இந்த வார்த்தையின் பாரம்பரிய பயன்பாடு காரணமாக, ந,ந,ஈ,தி சமூகத்தில் உள்ள பலர் இந்த அடையாளச் சிட்டையினை நிராகரித்து வருகின்றனர்.[6]

இவர்களின் பெயர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் வேறுபட்டவையாக உள்ளன. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில், ந,ந,ஈ,தி என்ற சுருக்கம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ' அகனள் ', ' உகவர் ', ' இருபால் ', ' திருநங்கை ' மற்றும் ' புதுமர் ' ஆகிய சொற்கள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படவில்லை . மேலும், அவர்களுக்கான வரையறைகள் வேறுபடுகின்றன.

மேற்கானும் சில சொற்கள் தவிர மாந்த பாலுணர்வியல் மற்றும் பாலின அடையாளத்தை வரையறுக்கப் பயன்படுத்தப்படும் பிற சொற்களும் சொற்றொடர்களும் உள்ளன. இந்த வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கள் பொதுவாக மேற்கத்திய கலாச்சாரங்களிலிருந்து வருகின்றன . இதற்கு நேர்மாறாக, மேற்கத்திய நாடுகள் அல்லாத பகுதிகள் தங்களது கலாச்சாரங்களில், பாலியல் மற்றும் பாலின அடையாளங்கள் மற்றும் நடைமுறைகளின் வரம்பு ஆகியவற்றை வைத்து பல்வேறு மொழிகளைப் பயன்படுத்தி பெயர்களை வழங்கி வருகின்றனர். மேலும் மேற்கத்திய நாடுகளின் கருதியலுடனும் இந்த நாடுகள் வேறுபடுகின்றன.

ந,ந,ஈ,தி தனிநபர்களின் பாலியல் - பாலியல் அடையாளங்கள் மற்றும் நடத்தைகள் - அதன் தனித்துவ அடையாளங்கள் மற்றும் அனுபவங்களை உறுதிப்படுத்தும் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆராய்ச்சி ந,ந,ஈ,தி சமூக மக்களுக்கு நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது. இது பாரபட்சமற்ற நம்பிக்கைகள், அணுகுமுறைகள் மற்றும் பாரபட்சமற்ற கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை ந,ந,ஈ,தி நபர்களுக்கு வழங்குவதனை முதன்மையாகக் கொண்டு செயல்படுகிறது. [3] [7] [8]

எதிர்பால்சேர்க்கை மற்ற பாலின காதல் ஈர்ப்பு, முன்னுரிமைகள் மற்றும் நடத்தைகள் பற்றிய கல்வியினை உள்ளடக்கியது ஆகும்.

ந,ந,ஈ,தி உளவியலின் ஒட்டுமொத்த குறிக்கோள் அறிவார்ந்த வேலை மற்றும் உளவியல் ஆராய்ச்சியில் ந,ந,ஈ,தி பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.ந,ந,ஈ,தி உளவியல் படிப்பு மற்றும் பயிற்சியை உள்ளடக்கிய ஒரு துறையாக இருப்பதால், அது உளவியலின் எந்தப் பகுதியிலிருந்தும் அறிஞர்கள் அல்லது நிபுணர்களை இந்த ஆராய்ச்சியில் பக்கெடுப்பதில் தனிக் கவனம் செலுத்துகிறது.

சான்றுகள்[தொகு]

  1. Balsam, K. F., Beauchaine, T. P., Mickey, R. M., & Rothblum, E. D. (2005). Mental health of lesbian, gay, bisexual, and heterosexual siblings: Effects of gender, sexual orientation, and family. Journal of Abnormal Psychology, 114(3), 471–476.
  2. Biblarz, T. J., & Savci, E. (2010). Lesbian, gay, bisexual, and transgender families. Journal of Marriage and Family, 72, 480–497
  3. 3.0 3.1 Clarke, V., Ellis, S. J., Peel, E., & Riggs, D. W. (2010). Lesbian, gay, bisexual, trans and queer psychology: An introduction. Cambridge, UK: Cambridge University Press.
  4. Clarke, V., & Peel, E. (Eds.). (2007). Out in psychology: Lesbian, gay, bisexual, trans and queer perspectives. Chichester, UK: Wiley.
  5. Peel, E. (2014). LGBTQ+ psychology. In T. Thomas (Ed.), Encyclopedia of Critical Psychology. doi:10.1007/978-1-4614-5583-7_171
  6. That's revolting! : queer strategies for resisting assimilation. Sycamore, Mattilda Bernstein. (New rev. and expanded ). Brooklyn: Soft Skull Press. 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59376-195-0. இணையக் கணினி நூலக மையம்:182552895. https://www.worldcat.org/oclc/182552895. 
  7. Herek, G. M. (2004). Beyond "homophobia": Thinking about sexual stigma and prejudice in the twenty-first century. Sexuality Research and Social Policy, 1(2), 6–24.
  8. Herek, G. M. (2009). Hate crimes and stigma-related experiences among sexual minority adults in the United States: Prevalence estimates from a national probability sample. Journal of Interpersonal Violence, 24, 54–74.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ந,ந,ஈ,தி_உளவியல்&oldid=3867949" இலிருந்து மீள்விக்கப்பட்டது