நௌசாரோ பெரோஸ் மாவட்டம்
நௌசாரோ பெரோஸ் மாவட்டம்
ضلع نوشہرو فیروز نوشهرو فيروز ضلعو | |
|---|---|
மாவட்டம் | |
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நௌசெரோ பெரோஸ் மாவட்டத்தின் அமைவிடம் | |
| நாடு | பாகிஸ்தான் |
| மாகாணம் | சிந்து மாகாணம் |
| கோட்டம் | சாகித் பெனாசீராபாத் கோட்டம் |
| பெரிய நகரம் | மொரோ நகரம் |
| தலைமையிடம் | நௌசாரோ பெரோஸ் |
| அரசு | |
| • வகை | மாவட்டம் (நிர்வாகி-துணை ஆணையாளர்) |
| பரப்பளவு | |
| • மாவட்டம் | 2,946 km2 (1,137 sq mi) |
| மக்கள்தொகை (2023) | |
| • மாவட்டம் | 17,77,082 |
| • அடர்த்தி | 600/km2 (1,600/sq mi) |
| • நகர்ப்புறம் | 5,07,244 |
| • நாட்டுப்புறம் | 12,69,838 |
| எழுத்தறிவு | |
| • எழுத்தறிவு % |
|
| நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
| இணையதளம் | www |
நௌசாரோ பெரோஸ் மாவட்டம் (Naushahro Feroze District), பாக்கித்தான் நாட்டின் தெற்கில் உள்ள சிந்து மாகாணத்தின் 30 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் சிந்து மாகாணத்தில் நடுவில் அமைந்த சாகித் பெனாசீராபாத் கோட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நௌசாரோ பெரோஸ் நகரம் ஆகும். நௌசாரோ பெரோஸ் நகரமானது, சிந்து மாகாணத் தலைநகரான கராச்சிக்கு தென்மேற்கே 342 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 1,071 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
அரசியல்
[தொகு]நாடாளுமன்றத் தொகுதிகள்
[தொகு]பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு (National Assembly) இம்மாவட்டம் இரண்டு தொகுதிகளை கொண்டுள்ளது. அவைகள் NA-211 மற்றும் NA-212 தொகுதிகளாகும்.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]இம்மாவட்டம் சிந்து மாகாணச் சட்டமன்றத்தில் (PS) PS-33, PS-34, PS-35 மற்றும் PS-36 என 4 தொகுதிகளை கொண்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]இம்மாவட்டம் நௌசாரோ பெரோஸ் வட்டம், பிரியா வட்டம், காந்தியாரோ வட்டம், மெரப்பூர் வட்டம் என நான்கு வட்டங்களையும், மோரோ நகரம் மற்றும் நௌசாரோ பெரோஸ் நகரங்களைக் கொண்டுள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 98.12% ஆகும்[2]இதன் மக்கள் தொகையில் இசுலாமியர்கள் 98.12%% இந்துக்கள் 1.63% மற்றும் பிற சமயத்தினர் 0.25% உள்ளனர்..[3]
மொழி
[தொகு]இம்மாவட்ட மக்கள் தொகையில் சிந்தி மொழியை 92.13% மக்களும், உருது மொழியை 3.98% மக்களும், பஞ்சாபி மொழியை 2.13% மக்களும் மற்றும் பிற மொழிகளை 1.76% மக்களும் பேசுகின்றனர்[4]