நோவா வெப்ஸ்டர்
நோவா வெப்ஸ்டர் Noah Webster | |
---|---|
பிறப்பு | 16 அக்டோபர் 1758 West Hartford |
இறப்பு | 28 மே 1843 (அகவை 84) நியூ ஹேவென் |
கல்லறை | Grove Street Cemetery |
படித்த இடங்கள் |
|
பணி | சொற்களஞ்சிய ஆசிரியர், அரசியல்வாதி, எழுத்தாளர் |
வாழ்க்கைத் துணை/கள் | Rebecca Greenleaf Webster |
குழந்தைகள் | Emily Webster Ellsworth, Julia Webster Goodrich, Henry Bradford Greenleaf Webster, Mary Webster, William Greenleaf Webster, Harriet Webster, Louisa Greenleaf Webster, Eliza Steele Greenleaf Webster |
விருதுகள் | Fellow of the American Academy of Arts and Sciences |
கையெழுத்து | |
நோவா வெப்ஸ்டர் (Noah Webster, 16 அக்டோபர் 1758 – 28 மே 1843) அமெரிக்க ஆங்கில சொல்லிலக்கணத்திற்கும் எழுத்திலக்கணத்திற்கும் காரணியானவர். இவர் பள்ளிப் புத்தகங்களை எழுதினார். அமெரிக்கர்கள் கட்டாயம் அமெரிக்க புத்தகங்களையே கற்க வேண்டும் என்பது இவரது எண்ணம்.
1783 இல் முதல் அமெரிக்க ஆங்கில சொல்லிலக்கணப் புத்தகத்தையும் வெளியிட்டவரும் இவரேயாவர்.
அவரது மொழி சீர்த்திருத்தமைப்பில் அமைந்த ஆங்கில ஒலிப்பு முறைகளும் சொல்லிலக்கணமுமே இன்றைய அமெரிக்க ஆங்கிலமாக திகழ்கின்றது.[1][2][3]
1828 இல் முதல் அமெரிக்க ஆங்கில அகராதியான வெஸ்டரின் அகராதியை வெளியிட்டவரும் இவரே ஆவார். பிரித்தானிய ஆங்கில சொல்லிலக்கண விதி முறைகள் மிகவும் சிக்கலானவை என்பது நோவா வெப்ஸ்டர் கருத்து. அதனால் அவர் அமெரிக்க சொல்லிலக்கணப்படியே அமெரிக்க ஆங்கில பதிப்புக்கள் அமையவேண்டும் என எண்ணியதுடன் அதனை நடைமுறையில் செயல்படுத்தியவருமாவர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dobbs, Christopher. "Noah Webster and the Dream of a Common Language". Noah Webster and the Dream of a Common Language. Connecticut Humanities. பார்க்கப்பட்ட நாள் July 24, 2015.
- ↑ "Connecticut Births and Christenings, 1649–1906". FamilySearch. பார்க்கப்பட்ட நாள் July 24, 2015.
- ↑ American Reformers: Early/Mid 1800s: Noah Webster. "[1] பரணிடப்பட்டது நவம்பர் 26, 2017 at the வந்தவழி இயந்திரம்" accessed July 31, 2019.