நோர்வே பறவையியல் சங்கம்
நோர்வே பறவையியல் சங்கம் (Norwegian Ornithological Society)(நோர்வே: Norsk Ornitologisk Forening , NOF) என்பது ஒரு நோர்வே பறவை ஆய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்பு ஆகும்.
இது 1957 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இருப்பினும் இதே பெயரில் 1920 முதல் 1935 வரை அமைப்பு ஒன்று முன்னதாக இருந்தது. இது பேர்ட்லைஃப் இன்டர்நேஷனலின் நோர்வே கூட்டாளர் அமைப்பு ஆகும். சமூகத்தின் முக்கிய செயல்பாடுகளில் பறவைகளின் வாழ்விடங்களைப் பாதுகாத்தல், பாதுகாப்புத் திட்டங்களை இயக்குதல், பறவைகள் குறித்து பொதுமக்களுக்குக் கல்வி கற்பித்தல் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுதல் ஆகியவை அடங்கும். இதில் சுமார் 9000 உறுப்பினர்களாக உள்ளனர். இதனை நான்கு ஊழியர்கள் நிர்வகிக்கின்றனர். இதன் செயலகம் ட்ரொண்ட்ஹெய்மில் அமைந்துள்ளது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).