நோரோ வைரஸ்
நோரோவைரசு Norovirus | |
---|---|
ஒத்தசொற்கள் | குளிர்கால வாந்தி பூச்சி,[1] வயிற்றுப் பூச்சி |
![]() | |
நோர்வாக் தீநுண்மியின் ஊடுருவி எதிர்மின்னி நுண்ணோக்கி ஊடான படம். வெண்பட்டை = 50 nm. | |
சிறப்பு | அவசர மருத்துவம், குழந்தை மருத்துவம் |
அறிகுறிகள் | வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி, தலைவலி[2] |
சிக்கல்கள் | நீர்ப்போக்கு[2] |
வழமையான தொடக்கம் | வெளிப்பட்ட 12 முதல் 48 மணி நேரத்திற்குப் பிறகு[2] |
கால அளவு | 1 முதல் 3 நாள்கள்[2] |
காரணங்கள் | நோரோவைரசு[3] |
நோயறிதல் | அறிகுறிகளின் அடிப்படையில்[3] |
தடுப்பு | கை கழுவுதல், மாசுபட்ட மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்தல்[4] |
சிகிச்சை | துணைப் பராமரிப்பு (போதுமான திரவங்கள் அல்லது நரம்பு வழியாகத் திரவங்களைக் குடித்தல்)[5] |
நிகழும் வீதம் | ஆண்டிற்கு 685 மில்லியன் பாதிப்பு[6] |
இறப்புகள் | ஆண்டிற்கு 200,000[6][7] |
பொதுவாக குளிர்கால நிலை வாந்தி என்று குறிப்பிடப்படும் நோரோவைரஸ் (Norovirus அல்லது Norwalk virus), பொதுவான நோய் அறிகுறியாக இரைப்பை குடல் அழற்சியை உண்டாக்கும் .[1][6] நோய்த்தொற்றானது இரத்தப்போக்கு அல்லாத வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்று வலி ஆகியவற்றால் பொது அறிகுறியுடன் வகைப்படுத்தப்படுகிறது. [2][3] காய்ச்சல் அல்லது தலைவலியும் ஏற்படலாம். [2] அறிகுறிகள் பொதுவாக தொற்று வெளிப்பட்ட 12 முதல் 48 மணி நேரத்திற்குப் பிறகு உருவாகின்றன, மேலும் குணமடைய பொதுவாக 1 முதல் 3 நாட்கள் ஆகும்.[2] நோய் பற்றிய சிக்கல்கள் அசாதாரணமானவை, ஆனால் நீரிழப்பு, குறிப்பாக இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் பிற சுகாதார பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அதிகம் இருக்கலாம்.[2]
இந்த வைரஸ் பொதுவாக மலம்-வாய்வழி வழியாக தொற்று பரவுகிறது .[3] இது அசுத்தமான உணவு அல்லது தண்ணீராலோ அல்லது நபருக்கு நபர் தொடர்பு மூலமோ இருக்கலாம்.[3] இது அசுத்தமான மேற்பரப்புகள் வழியாகவோ அல்லது பாதிக்கப்பட்ட நபரின் வாந்தியில் இருந்து காற்று வழியாகவோ பரவக்கூடும்.[3] சுகாதாரமற்ற உணவு தயாரிப்பு மற்றும் நெரிசலான பகுதிகளைப் பகிர்வது ஆகியவை ஆபத்து காரணிகளுள் அடங்கும்.[3] நோய் கண்டறிதல் பொதுவாக அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டது .[3] உறுதிப்படுத்தல் சோதனை பொதுவாக எளிதில் கிடைக்காது, ஆனால் பொது சுகாதார நிறுவனங்களால் அதிக தொற்றின்போது கவனம் செலுத்தி கண்டறியப் படவேண்டும். இந்த வைரஸ் எம் ஆர் என் ஏ வகை என்பதால் ஆர்டி-பாலிமரேசு தொடர் வினை மூலம் கண்டறிய முடியும்.
வரும் முன் காக்கும் தடுப்பு முறையானது கை கழுவுதல், அசுத்தமான மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்வதை உள்ளடக்கியது. [4] ஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பாண்களையும் கூடுதலாகப் பயன்படுத்தலாம், ஆனால் கை கழுவுவதை விட குறைவான செயல்திறன் கொண்டவை.[4] நோரோவைரஸுக்கு தடுப்பூசி அல்லது குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை [4][5] போதுமான திரவங்கள் அல்லது நரம்பு வழி திரவங்களை செலுத்துவது போன்றவை சிகிச்சைகளுள் அடங்கும்.[5] காஃபின் அல்லது ஆல்கஹால் இல்லாத பிற பானங்கள் உதவக்கூடும் என்றாலும், உப்பு சர்க்கரை கலந்த வாய்வழி மறு நீரேற்றும் திரவங்கள் அதிக பலனளிக்கும்.[5]
வைரசின் வகைப்பாடு
[தொகு]நோரோ வைரஸ் | |
---|---|
![]() | |
எலக்ட்ரான் நுண்ணோக்கியில் நோரோவைரசு துகள்கள் | |
தீநுண்ம வகைப்பாடு ![]() | |
இனம்: | நோர்வாக் வைரஸ்
|
நோரோவைரஸ் காரணமாக உலகளவில் ஆண்டுக்கு சுமார் 685 மில்லியன் நோயாளிகள் மற்றும் 200,000 இறப்புகள் ஏற்படுகின்றன.[6][7] இது வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் பொதுவானது [3][8] ஐந்து வயதிற்குட்பட்டவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுகிறார்கள், இந்த குழுவில் இது வளரும் நாடுகளில் சுமார் 50,000 இறப்புகளுக்கு வழிவகுக்கிறது.[6] நோரோவைரஸ் நோய்த்தொற்றுகள் குளிர்கால மாதங்களில் பொதுவாக நிகழ்கின்றன.[6] குறிப்பாக நெருக்கமான பகுதிகளில் வசிப்பவர்களிடையே இது பெரும்பாலும் அது நெரிசல் மற்றும் சுகாதாரமின்மையால் நிகழ்கிறது,.[3] அமெரிக்காவில், இது அனைத்து உணவு மூலம் பரவும் நோய்களில் பாதிக்கு காரணமாகும் .[3] இந்த வைரஸ் 1968 இல் பரவிய ஓஹியோவின் நோர்வாக் நகரத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Norovirus (vomiting bug)". nhs.uk. 2017-10-19. Archived from the original on 2018-06-12. Retrieved 8 June 2018.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "Norovirus Symptoms". CDC (in அமெரிக்க ஆங்கிலம்). 24 June 2016. Archived from the original on 6 December 2018. Retrieved 29 December 2017.
- ↑ 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 Brunette GW (2017). CDC Yellow Book 2018: Health Information for International Travel. Oxford University Press. p. 269. ISBN 9780190628611. Archived from the original on 2022-10-07. Retrieved 2020-09-05.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "Preventing Norovirus Infection". CDC (in அமெரிக்க ஆங்கிலம்). 5 May 2017. Archived from the original on 9 December 2017. Retrieved 29 December 2017.
- ↑ 5.0 5.1 5.2 5.3 "Norovirus - Treatment". CDC. Archived from the original on 22 December 2017. Retrieved 29 December 2017.
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 "Norovirus Worldwide". CDC (in அமெரிக்க ஆங்கிலம்). 15 December 2017. Archived from the original on 7 December 2018. Retrieved 29 December 2017."Norovirus Worldwide". CDC. 15 December 2017. Archived from the original on 7 December 2018. Retrieved 29 December 2017.
- ↑ 7.0 7.1 "Global Burden of Norovirus and Prospects for Vaccine Development" (PDF). CDC. August 2015. p. 3. Archived from the original (PDF) on 29 December 2017. Retrieved 29 December 2017.
- ↑ "A systematic review and meta-analysis of the prevalence of norovirus in cases of gastroenteritis in developing countries". Medicine 96 (40): e8139. October 2017. doi:10.1097/MD.0000000000008139. பப்மெட்:28984764.
- ↑ Vesikari, Timo (2021). "25. Norovirus vaccines in pipeline development". In Vesikari, Timo; Damme, Pierre Van (eds.). Pediatric Vaccines and Vaccinations: A European Textbook (in ஆங்கிலம்) (Second ed.). Switzerland: Springer. pp. 289–292. ISBN 978-3-030-77172-0. Archived from the original on 2023-10-20. Retrieved 2023-10-05.