நோய்நீக்கி மீன்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரண்டு மீன்கள் பெரிய மீனின் மேல் படிந்துள்ள வெளிப்புற ஒட்டுண்ணிகளைச் சுத்தம் செய்யும் காட்சி

'நோய்நீக்கி மீன்கள் (Cleaner fish) இவை கடலுக்கு அடியில் வாழும் பெரிய மீன்களின் தோல் பகுதியில் ஒட்டுண்ணிகளை நீக்கி நல்வாழ்விற்கு உதவுகிறது.[1] மேலும் பெரிய மீன்களின் வாய்பகுதியில் ஏற்பட்டுள்ள நோய்தொற்றுக்களை அதன் வாய் உள்ளேயே சென்று சுத்தப்படுத்துகிறது. இவற்றின் மூலம் சுற்றுச்சூழல் மண்டலம் பாதுகாக்கப்படுகிறது.[2] சிறிய மீன்களை பெரிய மீன்கள் உணவாக உட்கொள்ளும் பழக்கம் இருந்தாலும் இந்த வகை மீன்கள் வாய்க்குள் சென்று சுத்தம் செய்யும் வரை பெரிய மீன்கள் தனது வாயை மூடாமல் திறந்து வைத்திருக்கும் குணம் கொண்டுள்ளது. இவற்றில் கெளிறு, பால் சொரை (Wrasse), சிசில்ட் (Cichlid) போன்ற மீன்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Curry, O. "Morality as natural history." University of London Ph.D. Thesis. 2005. Accessed 2009-06-08.
  2. Gingins, S (2013) "Power and temptation cause shifts between exploitation and cooperation in a cleaner wrasse mutualism", Proceedings of the Royal Society B, 280 (1761): 20130553. எஆசு:10.1098/rspb.2013.0553
  3. ஆயிரம் 09: ஆழ்கடலில் ஓர் அதிசய டாக்டர்! தி இந்து தமிழ் 16 நவம்பர் 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோய்நீக்கி_மீன்கள்&oldid=2747813" இருந்து மீள்விக்கப்பட்டது