நோய்க்கிருமிகள் மற்றும் உலக சுகாதாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நோய்க்கிருமிகள் மற்றும் உலக சுகாதாரம்(Pathogens and Global Health) என்ற விமா்சன மருத்துவ இதழ் 'மானே' பதிப்பகத்தாரால் வெளியிடப்படுகிறது. இது வெப்ப மண்டல நோய்கள் தொடா்பான தகவல்களையும் நுண்ணுயிரியல், நோய் தொற்றியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் பற்றிய தகவல்களையும் விவரிக்கின்றது. மேலும் இது மருத்துவப் பூச்சியியல், எச்.ஐ.வி./எய்ட்ஸ், மலேரியா மற்றும் காசநோய் ஆகியவற்றைப் பற்றியும் இவ்விதழ் விவரிக்கிறது. இவ்விதழின் முதல் முதன்மை ஆசிரியா் ஆண்ட்ரியா கிரிசாந்தி(இம்பீரியல் கல்லுாரி, இலண்டன்).

வரலாறு[தொகு]

இவ்விதழ் சர் ரொனால்டு ராஸ் என்பவரால் 1906 ஆம் ஆண்டு 'டிராபிகல் மெடிசின் அண்ட் பாரசீடாலஜி அன்னல்ஸ்'(Annals of Tropical Medicine and Parasitology) என்ற பெயரில் தொடங்கப்பட்டது. 'லிவர்பூல் ஸ்கூல் ஆப் ட்ராபிகல் மெடிசின்' என்ற கல்விநிலையத்தின் ஆய்வு முடிவுகளை பகிர்ந்து கொள்வதற்காக இவ்விதழை அவர் தொடங்கினார். 2011 மே மாதத்தில் இவ்விதழை மானே பதிப்பகத்தார்(Maney Publishing) வாங்கினார்கள். பின்னர் 2012 ல் தற்போதைய தலைப்பான 'நோய்க்கிருமிகள் மற்றும் உலக சுகாதாரம்(Pathogens and Global Health)' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இவ்விதழ் உயிரியல், நோய்த்தடுப்பியல், மரபியல், நோய்க்கான மருத்துவம், நோய்க்கிருமிகளின் கட்டுப்பாடு முதலியவற்றைப் பற்றியும் அலசுகிறது..

மேற்கோள்கள்[தொகு]

"Master Journal List". Intellectual Property & Science. Thomson Reuters. Retrieved 2015-03-22. "Pathogens and Global Health". NLM Catalog. National Center for Biotechnology Information. Retrieved 2015-03-22. "Content overview". Scopus. Elsevier. Retrieved 2015-03-22. "Pathogens and Global Health". 2014 Journal Citation Reports. Web of Science (Science ed.). Thomson Reuters. 2015.

வெளியிணைப்புகள்[தொகு]

பன்னாட்டுத் தர தொடர் எண் 2047-7724

  • Online:

பன்னாட்டுத் தர தொடர் எண் 2047-7732

  • Annals of Tropical Medicine and Parasitology:

பன்னாட்டுத் தர தொடர் எண் 0003-4983