உள்ளடக்கத்துக்குச் செல்

நோபல் அறக்கட்டளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோபல் அறக்கட்டளை
உருவாக்கம்29 சூன் 1900; 126 ஆண்டுகள் முன்னர் (1900-06-29)
தலைமையகம்ஸ்டாக்ஹோம், சுவீடன்
வலைத்தளம்nobelprize.org/the-nobel-foundation

நோபல் அறக்கட்டளை[a] என்பது நோபல் பரிசுக்கான நிதியையும் நிர்வாகத்தையும் நிர்வகிப்பதற்காக சூலை 29, 1900இல் நிறுவப்பட்ட ஒரு தனியார் அமைப்பாகும்.[2] இந்த அறக்கட்டளை டைனமைட்டைக் கண்டுபிடித்த ஆல்பிரட் நோபலின் இறுதி விருப்பத்தின் அடிப்படையில் உருவானது.[3]

அறிவியலில் முக்கியமான திருப்புமுனைகள் மற்றும் கலாச்சார அல்லது சமூக முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள் குறித்தும் நோபல் கருத்தரங்குகளை இந்த அறக்கட்டளை நடத்துகிறது.

வரலாறு

[தொகு]

ஆல்பிரட் நோபல் (ஆல்பிரட் பெர்ச்சார்டு நோபல்ⓘ; பிறப்பு: 21 அக்டோபர் 1833, ஸ்டாக்ஹோம், சுவீடன்) சுவீடன் நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர், பொறியியலாளர், கண்டுபிடிப்பாளர், ஆயுதத் தயாரிப்பாளர், டைனமைட்டின் கண்டுபிடிப்பாளர் ஆவார். இவர் இரும்பு மற்றும் எஃகு ஆலையாக இருந்த தனது மூலத் தொழிலை மாற்றி அமைத்த ஒரு பெரிய ஆயுதத் தயாரிப்பு நிறுவனமான போபோர்சு நிறுவனத்திற்குச் சொந்தக்காரராக இருந்தார். நோபல் 355 வெவ்வேறு காப்புரிமைகளைக் கொண்டிருந்தார். இதில் டைனமைட்டு மிகவும் பிரபலமானது. இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் நோபல் தனது வாழ்நாளில் கணிசமான தனிப்பட்ட சொத்துக்களைச் சேர்த்தார்.[4] 1896இல் நோபல் தனது இறுதி ஆண்டுகளைக் கழித்த இத்தாலியின் சான்ரேமோ|ல் உள்ள தனது வில்லாவில் பக்கவாதத்தால் காலமானார்.[5][6][7][8]

நோபல் தனது பணத்தை இயற்பியல், வேதியியல், அமைதி, உடலியங்கியல் அல்லது மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றுக்கான பரிசுகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வெளிப்படுத்தினார். இது பலரை ஆச்சரியப்படுத்தியது.[7] நோபல் தனது வாழ்நாளில் பல உயில்களை எழுதியிருந்தாலும், கடைசி உயில் அவர் இறப்பதற்குச் சற்று முன்பு எழுதப்பட்டு, நவம்பர் 27, 1895 அன்று பாரிசில் உள்ள சுவீடன்-நார்வே கழகத்தில் கையெழுத்திடப்பட்டது.[9] ஐந்து நோபல் பரிசுகளை நிறுவி எண்டோவ் செய்வதற்காக நோபல் தனது மொத்தச் சொத்தில் 94 சதவீதமான 31 மில்லியன் சுவீடிய குரோனாவை உயிலாக எழுதி வைத்தார்.[10]

நவம்பர் 25, 1895 தேதியிட்ட ஆல்பிரெட் நோபலின் உயில்

இவரது உயிலை நிறைவேற்றுபவர்கள் இராக்னர் சோல்மன் மற்றும் உருடால்ப் லில்செக்விசுட்டு ஆவர். இவர்கள் நோபலின் செல்வத்தைக் கவனித்துக் கொள்ளவும் பரிசுகளை ஒழுங்கமைக்கவும் நோபல் அறக்கட்டளையை உருவாக்கினர்.[12] நோபலின் உயில் பரிசுகளை நிறுவியிருந்தாலும், இவரது திட்டம் முழுமையடையாமல் இருந்தது. மேலும் பல்வேறு தடைகள் காரணமாக, நோபல் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு திசம்பர் 10, 1901 அன்று வில் இரெண்ட்கன், கொன்ராது இரெண்ட்கன் உள்ளிட்டோருக்கு முதலாவது நோபல் பரிசுகள் வழங்கப்படுவதற்கு ஐந்து ஆண்டுகள் ஆனது.[7][13][14] 2024இன் இறுதியில், அறக்கட்டளையின் முதலீட்டு மூலதனம் 6.6 பில்லியன் சுவீடிய குரோனா அல்லது தோராயமாக 700 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.[15]

நோபல் அறக்கட்டளை

[தொகு]
கோசுடா புளோர்மன் இயற்றிய ஆல்பிரெட் நோபலின் உருவப்படம்

நோபல் பரிசுகளின் நிதியையும் நிர்வாகத்தையும் நிர்வகிப்பதற்காகவே நோபல் அறக்கட்டளை சூலை 29, 1900 அன்று ஒரு தனியார் அறக்கட்டளையாகத் தொடங்கப்பட்டது.[16] இது நோபலின் இறுதி உயிலின் அடிப்படையில் அமைந்துள்ளது.[3] இந்த நேரத்தில் நோபலின் |உயில் அதிக சந்தேகத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. எனவே ஏப்ரல் 26, 1897 வரை இவரது உயில் நார்வேயிய நாடாளுமன்றமான இசுட்டோர்ட்டிங்கால் அங்கீகரிக்கப்படவில்லை.[17] இதன் பிறகு நோபல் அமைதிப் பரிசை வழங்கவிருந்த நார்வேயிய நோபல் குழுவின் உறுப்பினர்களை இவர்கள் நியமித்தனர். சிறிது காலத்திற்குப் பிறகு, மற்ற பரிசளிப்பு அமைப்புகளும் நியமிக்கப்பட்டன. கரோலின்வகை நிறுவனம் சூன் 7 அன்றும், சுவீடிய அகாதமி சூன் 9 அன்றும், அரச சுவீடிய அறிவியல் அகாதமி சூன் 11 அன்றும் இணைந்தன.[18][19] 1900-இல், நோபல் அறக்கட்டளையின் புதிதாக உருவாக்கப்பட்ட விதிமுறைகள் சுவீடன் நாட்டு மன்னர் இரண்டாம் ஆசுகரால் அறிவிக்கப்பட்டன.[7][12]

நோபல் கருத்தரங்குகள்

[தொகு]

1965ஆம் ஆண்டில், அறக்கட்டளை நோபல் கருத்தரங்குகளைத் தொடங்கியது. இது உலகெங்கிலும் உள்ள அறிவியலின் முத்திரையான திருப்புமுனைகளைக் கொண்டுள்ள பகுதிகள் அல்லது முதன்மையான கலாச்சார அல்லது சமூக முக்கியத்துவம் வாய்ந்த பிற தலைப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கருத்தரங்குகளை நடத்தும் திட்டமாகும்.[20] இந்த கருத்தரங்கு புரோசுடாகிளண்டின்கள், வேதியியல் இயக்கவியல், நீரிழிவு நோய், சரம் கோட்பாடு, இயற்பியல் அண்டவியல், 1980களில் பனிப்போர் போன்ற தலைப்புகளை உள்ளடக்கியுள்ளது.[21] நோபல் கருத்தரங்குக் குழுவானது வேதியியல், இலக்கியம், அமைதி, இயற்பியல் மற்றும் உடலியங்கியல் அல்லது மருத்துவம், பொருளியல் உள்ளிட்ட உள்ள நோபல் குழுக்களின் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.[20]

நோபல் குடும்பத்தின் உறுப்பினர்களால் அறிவிக்கப்பட்ட பிற நோபல் பரிசுகள்

[தொகு]

2007ஆம் ஆண்டில், மைக்கேல் நோபல், குசுதாவ் நோபல், பீட்டர் நோபல் மற்றும் பிலிப் நோபல் ஆகியோரால் நிறுவப்பட்ட நோபல் தொண்டு அறக்கட்டளை, மாற்று எரிசக்தி தொழில்நுட்பத்தில் புதுமைகளுக்கு விருது வழங்கும் புதிய நோபல் பரிசான மைக்கேல் நோபல் எரிசக்தி விருதினை நிறுவுவதற்கான தங்கள் திட்டங்களை அறிவித்தது. ஆல்பிரெட் நோபல் தனது பரிசுகளை நிறுவியதிலிருந்து நோபல் குடும்பத்தால் நிறுவப்பட்ட முதல் புதிய நோபல் பரிசு இதுவாகும். இருப்பினும், இது நோபல் அறக்கட்டளையால் அல்லாமல் நோபல் தொண்டு அறக்கட்டளையால் வழங்கப்படும். இருப்பினும் இரண்டும் நோபல் குடும்பத்தால் நிறுவப்பட்ட அமைப்புகளாகும்.[22][23]

இந்தத் திட்டம் நானோ டி. எக்சு. 07இல் அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசின் நற்பெயர் மற்றும் நன்மதிப்பு மீதான தெளிவான துஷ்பிரயோகத்திற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சுறுத்தி நோபல் அறக்கட்டளை விரைவாக பதிலளித்தது.[24] நோபல் அறக்கட்டளையின் இயக்குனர் மைக்கேல் சோல்மேன் மற்றும் நோபல் குடும்பத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆகியோர் 'டாக்டர் மைக்கேல் நோபல் விருது' மற்றும் நோபல் தொண்டு அறக்கட்டளை மற்றும் நோபல் குடும்ப நலச் சங்கம் ஆகியவற்றை எதிர்த்தனர்.[25]

குறிப்புகள்

[தொகு]
  1. ↑ Swedish: Nobelstiftelsen

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Nobelstiftelsen Verksamhetsberättelse 2013" (PDF). www.nobelprize.org (in ஸ்வீடிஷ்). Nobel Foundation.
  2. ↑ Lemmel, Birgitta (2000-06-29). "The Nobel Foundation: A Century of Growth and Change". Nobel Foundation. Retrieved 2010-12-19.
  3. 1 2 "The Nobel Foundation". Nobel Foundation. Retrieved 2010-12-19. The Nobel Foundation is a private institution established in 1900 based on the will of Alfred Nobel. The Foundation manages the assets made available through the will for the awarding of the Nobel Prize in Physics, Chemistry, Physiology or Medicine, Literature and Peace. It represents the Nobel Institutions externally and administers informational activities and arrangements surrounding the presentation of the Nobel Prize.
  4. ↑ "Biography of Alfred Nobel – Succeed through Studying Biographies". School for Champions. 8 திசம்பர் 2001. Archived from the original on 14 மார்ச் 2012. Retrieved 15 சனவரி 2010.
  5. ↑ "Alfred Nobel's final years in Sanremo". NobelPrize.org (in அமெரிக்க ஆங்கிலம்). 23 June 2016. Retrieved 2021-06-29.
  6. ↑ "Si-Facts_FS15b_ENG.bak" (PDF). Archived from the original (PDF) on 31 ஆகத்து 2010. Retrieved 15 சனவரி 2010.
  7. 1 2 3 4 5 AFP, "Alfred Nobel's last will and testament" பரணிடப்பட்டது 9 அக்டோபர் 2009 at the வந்தவழி இயந்திரம், The Local(5 October 2009): accessed 14 January 2009.
  8. ↑ "History – Historic Figures: Alfred Nobel (1833–1896)". BBC. Retrieved 2010-01-15.
  9. ↑ "The Nobel Foundation and its Role for Modern Day Science". Metapress. 1981. Archived from the original on 14 சூலை 2011. Retrieved 12 சூலை 2010.
  10. ↑ "The Will of Alfred Nobel", Nobel Foundation. Retrieved 6 November 2007.
  11. ↑ Alfred Nobel|"Alfred Nobel's Will", Nobel Foundation. Retrieved 15 February 2007. (English version).
  12. 1 2 "Nobel Prize" (2007), in Encyclopædia Britannica. Retrieved 15 January 2009, from Encyclopædia Britannica:
    After Nobel's death, the Nobel Foundation was set up to carry out the provisions of his will and to administer his funds. In his will, he had stipulated that four different institutions—three Swedish and one Norwegian—should award the prizes. From Stockholm, the Royal Swedish Academy of Sciences confers the prizes for physics, chemistry, and economics, the Karolinska Institute confers the prize for physiology or medicine, and the Swedish Academy confers the prize for literature. The Norwegian Nobel Committee based in Oslo confers the prize for peace. The Nobel Foundation is the legal owner and functional administrator of the funds and serves as the joint administrative body of the prize-awarding institutions, but it is not concerned with the prize deliberations or decisions, which rest exclusively with the four institutions.
  13. ↑ "All Nobel Laureates". Nobel Foundation. Archived from the original on 6 அக்டோபர் 2012. Retrieved 15 சனவரி 2010.
  14. ↑ "First Nobel Prizes: December 10, 1901", This Day in History [தொடர்பிழந்த இணைப்பு], History (U.S. TV channel). Retrieved 30 July 2006.
  15. ↑ "The Nobel Foundations' 2024 asset management and earnings". NobelPrize.org.
  16. ↑ Lemmel, Birgitta (2007-06-29). "The Nobel Foundation: A Century of Growth and Change". Nobel Foundation. Archived from the original on 2007-10-26. Retrieved 2007-10-30.
  17. ↑ "The Nobel Foundation – History". Nobel Foundation. Archived from the original on 2008-06-12. Retrieved 2010-01-15.
  18. ↑ "Nobel Prize History –". Infoplease.com. 1999-10-13. Retrieved 2010-01-15.
  19. ↑ Encyclopædia Britannica "Nobel Foundation (Scandinavian organization) – Britannica Online Encyclopedia". Encyclopædia Britannica.  
  20. 1 2 "Nobel Symposia". Nobel Foundation. Archived from the original on 2007-10-12. Retrieved 2007-10-28.
  21. ↑ "Complete List of Nobel Symposia from 1965 – present". Nobel Foundation. Archived from the original on 2007-05-14. Retrieved 2007-10-30.
  22. ↑ Nobel, Philip (2007-10-09). "Michael Nobel Energy Award". PRBuzz.com இம் மூலத்தில் இருந்து 2007-11-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071109235244/http://www.prbuzz.com/michael-nobel-energy-award-9423.html.
  23. ↑ Nobel, Philip (2007-10-09). "Statement from the Nobel Charitable Trust Foundation regarding the Michael Nobel Energy Award". I-Newswire.com இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://www.archive.web/20130103164708/http://www.i-newswire.com/pr125464.html.
  24. ↑ nanoPRwire (2007-09-24). "Michael Nobel Relieved of nanoTX'07 Activities After Protest from Nobel Foundation and Family Society". Nano Science and Technology Institute. Archived from the original on 15 April 2008. Retrieved 2007-10-18.
  25. ↑ Feder, Barnaby J. (2007-10-18). "The Nobel Prize That Wasn't". The New York Times. http://bits.blogs.nytimes.com/2007/09/18/the-nobel-prize-that-wasnt/.

வெளி இணைப்புகள்

[தொகு]

59°20′15″N 18°04′28″E / 59.3376°N 18.0744°E / 59.3376; 18.0744

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோபல்_அறக்கட்டளை&oldid=4659693" இலிருந்து மீள்விக்கப்பட்டது