உள்ளடக்கத்துக்குச் செல்

நோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நோட்டம் (NOTAM-Notice To Airmen) என்பது விமானிகளுக்கான அறிவிப்பு ஆகும் ஆகும்.[1][2][3][4] மற்றும் வான் போக்குவரத்துக்கான அறிவிப்பு.[5][6] அல்லது 2021 முதல் 2025 வரை விமான ஓட்டிகளுக்கான அறிவிப்பு ஆகும்.[7][8]) மேலும் இது ஒரு விமானப் பாதையில் அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் விமானப் பயணத்தைப் பாதிக்கக்கூடிய சாத்தியமான ஆபத்துகள் குறித்து விமான ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காக, விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரியிடம் தாக்கல் செய்யப்படும் ஒரு அறிவிப்பாகும்.[9]

நோட்டம் எனும் வான் எச்சரிக்கை அறிவிப்பு என்பவை, எந்தவொரு வானூர்தி வசதி சேவை, செயல்முறை அல்லது அபாயம் ஆகியவற்றின் உருவாக்கம், நிலைமைகள் அல்லது மாற்றம் தொடர்பான தகவல்களைக் கொண்ட அறிவிப்புகள் அல்லது ஆலோசனைகளாகும். இந்தத் தகவல்களை உரிய நேரத்தில் அறிந்துகொள்வது விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பணியாளர்கள் மற்றும் அமைப்புகளுக்கு அவசியமானதாகும்.[10]

நோட்டம்கள், சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து மாநாட்டின் (CICA) பின்னிணைப்பு 15: வானூர்தித் தகவல் சேவைகள் குறிப்பிடும் வழிகாட்டுதல்களின் கீழ் அரசு நிறுவனங்கள் மற்றும் விமான நிலைய இயக்குநர்களால் உருவாக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. ஒரு விமானப் பாதையில் அல்லது ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது விமானத் தகவல் பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு அபாயங்கள் குறித்தும் விமான ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காக ஒரு நோட்டம் விமானப் போக்குவரத்து அதிகாரியிடம் தாக்கல் செய்யப்படுகிறது. அந்த அதிகாரி, அதற்குப் பதிலாக, தொடர்புடைய நோட்டம்களை விமான ஓட்டிகளுக்குப் பரப்புவதற்கான ஒரு வழிமுறையை வழங்குகிறார்.

ஒரு குறிப்பிட்ட வான்வெளிப் பகுதியை சிவில் விமானப் போக்குவரத்திலிருந்து விடுவிக்க வேண்டியிருக்கும்போது நோட்டம் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. பாகிஸ்தானுடனான முந்தைய பதட்டங்களின்போதும் இதேபோன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இது வணிக விமானங்களை இராணுவ நடவடிக்கைப் பகுதிகளிலிருந்து விலக்கி வைப்பதன் மூலம் பொதுமக்களின் உயிரிழப்புகளைத் தடுக்க உதவுகிறது.

நோட்டம் அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன், குறிப்பிட்ட வான்வெளிப் பகுதிக்குள் எந்த சிவில் விமானமும் பறக்க அனுமதிக்கப்படாது.

முன்னதாக இந்தியா ஏவுகணை பரிசோதனைக்கு டிசம்பர் 11, 2025 அன்று, டிசம்பர் 17 முதல் டிசம்பர் 20 வரை வங்காள விரிகுடாவில் 3,550 கிலோமீட்டர் தூரத்திற்கு விமானங்கள் பறக்க தடை செய்து நோட்டம் அறிவிப்பு வெளியிட்டது.[11]

பயன்பாடுகள்

[தொகு]

விமானிகளுக்கான அறிவிப்புகள் (நோட்டம்) பின்வரும் பல காரணங்களுக்காக வெளியிடப்படுகின்றன அல்லது அறிவிக்கப்படுகிறது:

  • விமான சாகச நிகழ்ச்சிகள், பாராசூட் குதிப்புகள், சூடான் பலூன்கள் வானில் விடுதல், பன்னாட்டு பட்டங்கள் விடும் போட்டி இடங்கள், இரவில் நடத்தப்படும் லேசர்கள் நிகழ்ச்சிகள், ராக்கெட் ஏவுதல்கள் போன்றவை காலங்களில் பறப்பு விமானிகளுக்கு நோட்டம் அறிவித்தல்
  • தேசியத் தலைவர்கள் போன்ற முக்கிய நபர்களின் விமானங்கள் பறக்கையில் தற்காலிக வான் கட்டுப்பாடுகள் அறிவித்தல்.
  • செயல்படாத ஓடுபாதைகள் குறித்து அறிவித்தல்.
  • செயல்படாத வானொலி வழிசெலுத்தல் உதவிகள்
  • வான்வெளி கட்டுப்பாடுகளுடன் கூடிய இராணுவப் பயிற்சிகள்
  • உயரமான தடைகளில் உள்ள செயல்படாத விளக்குகள்
  • விமான நிலையங்களுக்கு அருகில் தற்காலிகமாகத் தடைகளை நிறுவுதல் (எ.கா., கிரேன்கள்)
  • பறவைக் கூட்டங்கள் வான்வெளி வழியாகச் செல்வது (BIRDTAM என்று அழைக்கப்படுகிறது)
  • பனி, உறைபனி மற்றும் தேங்கி நிற்கும் நீர் தொடர்பான ஓடுபாதை/டாக்சிவே/ஏப்ரன் நிலை குறித்த அறிவிப்புகள் (SNOWTAM)
  • எரிமலைச் சாம்பல் அல்லது பிற தூசுகளின் மாசுபாட்டில் ஏற்படும் செயல்பாட்டு ரீதியாக குறிப்பிடத்தக்க மாற்றம் குறித்த அறிவிப்பு (ASHTAM)
  • குறிப்பிட்ட பாதிப்புகளைக் குறைக்க தொடர்புடைய இணைப்புகளுடன் கூடிய மென்பொருள் குறியீடு இடர் அறிவிப்புகள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Wragg, David W. (1973). A Dictionary of Aviation (first ed.). Osprey. p. 203. ISBN 9780850451634.
  2. "Notices to Airmen". www.icao.int. Archived from the original on 2021-12-01. Retrieved 2021-12-01.
  3. "FAA Order 7930.2S, Change 2, "Notices to Air Men (NOTAM)" (PDF). www.faa.gov. Archived (PDF) from the original on 2022-12-21. Retrieved 2022-11-27.
  4. "What is a? Notice to Airman (NOTAMs)". Federal Aviation Administration. Archived from the original on 23 November 2023. Retrieved 11 February 2025.
  5. "Notifying airspace users of drone and remotely piloted events or activity | Civil Aviation Authority". www.caa.co.uk. Civil Aviation Authority. Archived from the original on 11 February 2025. Retrieved 11 February 2025.
  6. "Airspace notification of air displays and flypasts | Civil Aviation Authority". www.caa.co.uk. Civil Aviation Authority. Archived from the original on 2025-01-19. Retrieved 2025-02-11.
  7. Gilbert, Gordon (2021-12-07). "Notam Gets Gender-neutral Name in FAA Procedures Update". Aviation International News. Archived from the original on 2025-03-22. Retrieved 2025-02-19.
  8. "NOTAM Term Change from Notice to Air Missions to Notice to Airmen". Federal Aviation Administration. 2025-02-10. Archived from the original on 2025-02-25. Retrieved 2025-02-19.
  9. Chambers, Dan (February 10, 2010). "Flight School 101: What is a NOTAM?". College of Aeronautical Science & Technology. Archived from the original on December 3, 2013. Retrieved February 9, 2013.
  10. "Air Force Instruction Interservice Publication 11-208" (PDF). Archived (PDF) from the original on 2023-01-11. Retrieved 2023-01-11.
  11. ஏவுகணை சோதனைக்கு தயாராகும் இந்தியா; வங்கக் கடலில் விமானங்கள் பறக்க அனுமதி இல்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோட்டம்&oldid=4425770" இலிருந்து மீள்விக்கப்பட்டது