நோசீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோசீன்
Nosean
Nosean crystal group - Ochtendung, Eifel, Germany.jpg
செருமனியில் ஆக்டந்தங்கில் கிடைத்த நோசீன் படிகக் குழு.
பொதுவானாவை
வகைசோடாலைட்டு - பெல்ட்சுபேதாயிடு
வேதி வாய்பாடுNa8Al6Si6O24(SO4)
இனங்காணல்
படிக அமைப்புகனசதுரம்

நோசீன் (Nosean) என்பது Na8Al6Si6O24(SO4). H2O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். நோசிலைட்டு என்ற பெயராலும் இக்கனிமத்தை அழைக்கிறார்கள். பெல்ட்சுபேதாயிடு குழுவைச் சேர்ந்த கனிமம் என்று நோசீன் வகைப்படுத்தப்படுகிறது. சம அளவு கனசதுர அலகு கூடுகள் கொண்ட படிகங்களாக சாம்பல், வெண்மை, நீலம், பச்சை, பழுப்பு போன்ற பல்வேறு மாறுபட்ட நிறங்களில் இக்கனிமம் உருவாகிறது. நோசீன் கனிமத்தின் மோவின் அளவுகோல் கடினத்தன்மை மதிப்பு 5.5 முதல் 6 எனவும் இதன் ஒப்படர்த்தி 2.3 முதல் 2.4 எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த அளவு சிலிக்காவைக் கொண்ட தீப்பாறை வகைகளில் காணப்படும் நோசீன் உடனொளிரும் தன்மையைக் கொண்டதாகும். நோசீனுக்கும் ஆவ்யைனுக்கும் இடைப்பட்ட நிலையில் கால்சியத்தைப் பெற்றுள்ள ஒரு திண்மக் கரைசல் அறியப்படுகிறது.

1815 ஆம் ஆண்டு முதன் முதலில் செருமனியிலுள்ள இரனிலேண்டு நிலப்பகுதியில் அந்நாட்டு கனிமவியலாளர் கே.டபிள்யூ நோசு (1753–1835) என்பவரால் நோசீன் கண்டறியப்பட்டது. அரியதொரு கனிமமாக இருந்தாலும் இது பசிபிக் பெருங்கடலில் இருக்கும் தாகித்தி தீவு, அமெரிக்க மாநிலமான யூட்டாவில் அமைந்துள்ள லா சால் மலைத்தொடர் போன்ற பகுதிகளிலும் பரவலாகக் கிடைக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
நோசீன்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோசீன்&oldid=2919283" இருந்து மீள்விக்கப்பட்டது