நோக்கு (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நோக்கு கொழும்பிலிருந்து 1970ம் ஆண்டில் வெளிவந்த ஒரு கவிதை இதழாகும். இதன் முதல் இதழ் 1970ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளிவந்தது. இதன் தனிப்பிரதி விலை 1.25 சதமாகும். மொத்தம் 32 பக்கங்களைக் கொண்டிருந்தது.

பணிக்கூற்று[தொகு]

  • புதுமைப்பா ஏடு

வெளியீடு[தொகு]

செய்யுத் கள வெளியீடு 149/3 காலி வீதி, கொழும்பு 04

தொகுப்பாளர்கள்[தொகு]

  • இ.ரத்தினம்
  • இ. முருகையன்

நோக்கம்[தொகு]

முதல் இதழில் இவ்விதழின் நோக்கம் பற்றி இ. முருகையன் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “இன்று நம்மிடையே பல்வேறுபட்ட கருத்துகளை பார்க்கின்றோம். எழுதத் தொடங்கி முயன்று முன்னேறிக் கொண்டிருக்கும் கவிஞர்கள் ஒரு வகை. அவ்வாறு முன்னேறி குறிப்பிட்ட தரத்தில் ஏறிவிட்டோம் என்ற நினைப்போடு இடையிடையே கவிதைகளை எழுதியும் வெளியிட்டும் வருவோர் மற்றொரு வகையினர். ஈழம் தமிழகம் உலகம் என விரிந்து செல்லும் நோக்கு விசாலத்துடன் கவிதைக் களங்களின் எல்லைகளைத் தொட்டி அப்பாற் செல்ல முயலும் கலைமுகத்து முனைவர்கள் வேறும் சிலர். இவ்வாறாக சகலரையும் அரவணைத்து முன்செல்லும் நோக்கமுடையது நமது பா ஏடு” எனக் குறிப்பிட்டிருந்தார்.

உள்ளடக்கம்[தொகு]

இதில் பல தரப்பிலான கவிதைகள் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோக்கு_(இதழ்)&oldid=848772" இருந்து மீள்விக்கப்பட்டது