நொய்டா தொடர் கொலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நொய்டா தொடர் கொலைகள் என்பது டெல்லியை அடுத்த நொய்டாவில் 2006 ஆம் ஆண்டு சுரேந்தர் கோலி மற்றும் தொழிலதிபர் மொணீந்தர் சிங் பாந்தர் ஆகியோர் சிறுமிகளின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. குற்றம்சாட்டப்பட்ட இருவர் மீதும் 16 வழக்குகள் தொடரப்பட்டன. இதில் ஐந்து வழக்குகளில் இருவருக்கும் சிபிஐ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தபோது, மொணீந்தர் சிங் பாந்தர் விடுவிக்கப்பட்டார். சுரேந்தர் கோலியின் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தன. அவர் தாக்கல் செய்த கருணை மனு ஜூலை 27-ம் தேதி குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நொய்டா_தொடர்_கொலைகள்&oldid=1837155" இருந்து மீள்விக்கப்பட்டது