நொச்சிமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நொச்சிமலை
நகர பஞ்சாயத்து
Skyline of நொச்சிமலை
நாடுகள் இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
அரசு
 • தலைவர்ராஜாவதி குமரன் (திமுக)
பரப்பளவு
 • மொத்தம்16.3 km2 (6.3 sq mi)
ஏற்றம்171 m (561 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,298
 • அடர்த்தி80/km2 (210/sq mi)
மொழிகள்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்606 610
தொலைபேசிக் குறியீடு91-4175
வாகனப் பதிவுTN 25
நாடாளுமன்ற தொகுதிதிருவண்ணாமலை
தட்பவெப்பநிலைமிதமானது (கோப்பென் காலநிலை வகைப்பாடு)

 

நொச்சிமலை (Nochimalai) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் திருவண்ணாமலையிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 157 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நொச்சிமலையின் மக்கள் தொகை 1298 ஆகும். இதில் 629 ஆண்களும் 669 பெண்களும் உள்ளடங்குவர். பாலின விகிதமானது 1064 ஆக உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி பாலின விகிதமான 996 ஐ விட அதிகமானதாகும். இக்கிராமத்தின் எழுத்தறிவு விகிதமானது 84.07% ஆக உள்ளது. இதுவும் தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதமான 80.09% ஐ விட அதிகம் ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nochimalai Village Population - Tiruvannamalai - Tiruvannamalai, Tamil Nadu". www.census2011.co.in. 2022-08-10 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நொச்சிமலை&oldid=3588927" இருந்து மீள்விக்கப்பட்டது