நைலா கபீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நைலா கபீர் (Naila Kabeer வங்காள: নায়লা কবির ; பிறப்பு 28 ஜனவரி 1950) [1] என்பவர் இந்தியாவில் பிறந்த ஐக்கிய ராச்சிய வங்காளதேச சமூக பொருளாதார நிபுணர், ஆராய்ச்சியளார் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் பெண்ணிய பொருளாதாரத்திற்கான சர்வதேச சங்கத்தின் (IAFFE) தலைவராகவும் உள்ளார். 2018 முதல் 2019 வரை இவர் பதவியில் இருப்பார்.[2] இவர் முதன்மையாக வறுமை, பாலினம் மற்றும் சமூக கொள்கை பிரச்சினைகளில் பணியாற்றுகிறார். பாலினம், வறுமை, சமூக விலக்கு, தொழிலாளர் சந்தைகள் மற்றும் வாழ்வாதாரங்கள், சமூக பாதுகாப்பு போன்றவை குறித்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவை மையமாகக் கொண்டு மையமாக கொண்டு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

கபீர் இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கல்கத்தாவில் பிறந்தார், பின்பு அவரது குடும்பம் கிழக்கு வங்காளத்திற்கு (இப்போது வங்காளதேச ) குடிபெயர்ந்தது.[3] இவர் இந்தியாவின் ஷில்லாங்கில் உள்ள லோரெட்டோ கான்வென்ட் பள்ளிக்குச் சென்றார். 1969 ஆம் ஆண்டில், இவர் உயர் கல்விக்காக ஐக்கிய இராச்சியத்திற்கு சென்றார். லண்டன் பொருளியல் பள்ளியில் பொருளாதாரத்தில், இளாங்கலைப் பட்டம் பெற்றார்.லண்டன் பல்கலைக்ககழகக் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்பு 1985 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார்.

1979 ஆம் ஆண்டில், கபீர் தனது முனைவர் பட்டத்திற்கான களப்பணியை வங்காளதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் செய்தார்.[4] பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டத்திற்குப் பிறகு1985 ஆம் ஆண்டில், லண்டன் பொருளியல் பள்ளியில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். , .[3]

தொழில்[தொகு]

1985 ஆம் ஆண்டில், கபீர் சசெக்ஸில் உள்ள மேம்பாட்டு ஆய்வுகள் நிறுவனத்தில் ஒரு ஆராய்ச்சிப் பயிற்சிக்காக சேர்ந்தார். பின்னர் அங்கு பேராசிரியராக ஆனார்.[5] 2010 ஆம் ஆண்டில், லண்டன் பல்கலைக்கழகத்தின் ஓரியண்டல் மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியில் ஆய்வுகள் பேராசிரியராக சேர்ந்தார்.[6] 2013 ஆம் ஆண்டில், இவர் லண்டன் பொருளியல் பள்ளியில் அரசியல் அறிவியல் பிரிவில் பேராசிரியராக சேர்ந்தார். கபீர் 2004-2005 க்கு இடையில் ஸ்வீடனின் கோதெபாய் பல்கலைக்கழகத்தில் கெர்ஸ்டின் ஹெஸல்கிரென் பேராசிரியராகவும், 2005-2006 க்கு இடையில் தெற்காசியாவில் ஐ.டி.ஆர்.சி பிராந்திய அலுவலகத்தில் மூத்த ஓய்வு வேளைப் பேராசிரியராக இருந்தார்.[7] இவர் 2009-2010 இங்கிலாந்து சர்வதேச மேம்பாட்டுத் துறையில் மூத்த ஆராய்ச்சி ஊழியராகவும் பணியாற்றினார். இவர் சசெக்ஸின் மேம்பாட்டு ஆய்வுகள் நிறுவனத்தில் ஒரு ஓய்வுபெற்ற ஊழியராக இருக்கிறார்.

பாலின அக்கறைகள் பற்றிய கொள்கை மற்றும் திட்டமிடலில் ஒருங்கிணைப்பதற்கான கட்டமைப்புகள் மற்றும் வழிமுறைகளை உருவாக்குவதில் கபீர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.[5] இவர் ஒரு சமூக பொருளாதார நிபுணர் ஆவார். மேலும் இவர் முதன்மையாக வறுமை, பாலினம் மற்றும் சமூக கொள்கைகள் தொடர்பான பிரச்சினைகளில் பணியாற்றுகிறார்.[8] பாலினம், வறுமை, சமூக விலக்கு, தொழிலாளர் சந்தைகள் மற்றும் வாழ்வாதாரங்கள், சமூக பாதுகாப்பு போன்றவை குறித்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவை மையமாகக் கொண்டு மையமாக கொண்டு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.[6][9] ,

கபீர் தற்போது பெண்ணிய பொருளாதாரம், மேம்பாடு மற்றும் மாற்றம், பாலினம் மற்றும் மேம்பாடு ஆகிய பத்திரிகைகளுக்கான ஆலோசனைக்கான ஆசிரியர் குழுவிலும் மற்றும் பெண்ணிய மறுஆய்வு அறக்கட்டளையின் குழுவிவுலும் உள்ளார்.[6][7] இவர் பெட்டர் ஒர்க் ஆலோசனைக் குழுவிலும் உள்ளார்.[10]

குறிப்புகள்[தொகு]

  1. "Kabeer, Naila". Library of Congress. "CIP t.p. (Naila Kabeer) data sheet (born January 28, 1950)"
  2. "2017-2018 Officers". International Association for Feminist Economics (IAFFE).
  3. 3.0 3.1 "Prof. Naila Kabeer: Reflections on Researching Women's Empowerment, SOAS, University of London". soasuniversity (28 January 2013).
  4. "Naila Kabeer: South Asia's 'Daughter Deficit'". IDRCCRDI (7 November 2011).
  5. 5.0 5.1 "Naila Kabeer". Institute of Development Studies.
  6. 6.0 6.1 6.2 "Ninth Confirmed Speaker: Naila Kabeer". LSESU-UCL Economics Conference 2013/14 (4 November 2013). மூல முகவரியிலிருந்து 5 March 2014 அன்று பரணிடப்பட்டது.
  7. 7.0 7.1 "Tracking the Gender Politics of the Millennium Development Goals: from the Millennium Declaration to the post-MDG consultations". LSE – London School of Economics and Political Science (2 October 2013).
  8. "Naila Kabeer". UNRISD.
  9. "Faculty". Gender Institute. Naila Kabeer
  10. "Naila Kabeer joins Better Work Advisory Committee". Better Work (28 March 2013).
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைலா_கபீர்&oldid=2868339" இருந்து மீள்விக்கப்பட்டது