நையோபோகோல்டைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நையோபோகோல்டைட்டு
Nioboholtite
பொதுவானாவை
வகைசிலிக்கேட்டு கனிமம்
வேதி வாய்பாடு(Nb0.6[]0.4)Al6BSi3O18
இனங்காணல்
நிறம்பலேட்டு வெண்மையும் பழுப்பு மஞ்சள்,சாம்பல் மஞ்சள்
படிக அமைப்புநேர்சாய்சதுரம்
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும்
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα=1.74-1.75, nβ~1.76, nγ~1.76 (தோராயம்)
மேற்கோள்கள்[1][2]

நையோபோகோல்டைட்டு (Nioboholtite) என்பது (Nb0.6[]0.4)Al6BSi3O18. என்ற வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். மிகவும் அரிய இக்கனிமம் மிகப்பெரிய துமார்ட்டியரைட்டு தொகுதியில் நையோபியம் மிகுந்த உறுப்பினர் மற்றும் ஒல்டைட்டு தொகுதியின் நையோபியம் கனிமத்தையொத்த ஓல்டைட்டு என்றும் வகைப்படுத்தப்படுகிறது. இக்குழுவில் மிகச் சமீபத்தில் கண்டறியப்பட்ட மூன்று கனிமங்களில் இதுவும் ஒன்றாகும். பன்னாட்டு கனிமவியம் சங்கம் நையோபோகோல்டைட்டு கனிமத்தை Nhlt[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

தைட்டனோகோல்டைட்டும் சுசிக்லேரையைட்டும் மற்ற இரு கனிமங்களாகும். போலந்து நாட்டின் சாப்கோவைசு சிலாசுகியில் உள்ள சுசிக்லேரை கிராமத்தில் இவை மூன்றும் கிடைத்தன [1] .[4]. குறிப்பாக தனித்த வகை தீப்பாறைகளில் இவை கிடைத்தன. நையோபோகோலைட்டு மற்றும் சிகியாவினாட்டோயைட்டு இரண்டும் அத்தியாவசிமானா நையோபியம் மற்றும் போரான் தனிமங்களைக் கொண்டுள்ளன[1].

ஓலைட்டு மற்றும் சுகிளாரைட்டுடன் கலந்துள்ள மற்ற பல எண்ணிக்கையிலான கனிமங்களுடன் நையோபோகோல்டைட்டு கனிமம் கலந்துள்ளது. ஆண்டிமனியும் ஆர்சனிக்கும் முக்கியமான மாசுக்களாக அதிக அளவில் இதில் கலந்துள்ளன. அலுமினியம், இரும்பு, டாண்ட்டலம், தைட்டானியம், பாசுபரசு மற்றும் ஐதராக்சில் குழுக்கள் குறைந்த அளவில் கலந்துள்ளன[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Pieczka, A.; Evans, R. J.; Grew, E. S.; Groat, L. A.; Ma, C.; Rossman, G. R. (2013). "The dumortierite supergroup. II. Three new minerals from the Szklary pegmatite, SW Poland: Nioboholtite, (Nb0.60.4)Al6BSi3O18, titanoholtite, (Ti0.750.25)Al6BSi3O18, and szklaryite, 〈Al6BAs3+3O15". Mineralogical Magazine 77 (6): 2841. doi:10.1180/minmag.2013.077.6.10. 
  2. "Nioboholtite: Nioboholtite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-03.
  3. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A. 
  4. "Schiavinatoite: Schiavinatoite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நையோபோகோல்டைட்டு&oldid=3938641" இலிருந்து மீள்விக்கப்பட்டது