நைமா கான் உப்ரேதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைமா உப்ரேதி

நைமா கான் உப்ரேதி (Naima Khan Upreti) (1938–2018) இவர் ஓர் இந்திய நாடக நடிகரும், பாடகரும் மற்றும் தூர்தர்ஷனில் தயாரிப்பாளரும் ஆவார். இந்திய நாடக இசையில் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் மோகன் உப்ரேதியின் மனைவியும் ஆவார்.

நைமா கான் உப்ரேதி வட இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் இரண்டு கோட்டங்களில் ஒன்றான குமாவோன் கோட்டத்தில் ஒரு பிரபலமான நபராக உள்ளார். மேலும் இவரது கணவர் மோகன் உப்ரேதியுடன் உத்தரகண்ட் நாட்டுப்புற இசையைப் பாதுகாப்பதற்கும் புத்துயிர் பெறுவதற்கும் இவர் செய்த பங்களிப்புக்காக இவர் நினைவுகூரப்படுகிறார். இவர் தனது கணவருடன் பிரபலமான குமாவோனி பாடலான "பெடு பக்கோ பரோ மாசா" பாடலைப் பாடினார். [1] . பழைய குமாவோனி கவிதைகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற மரபுகளை உறுப்பினராகப் பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்காகவும் பின்னர் தில்லியின் பார்வதியா கலா கேந்திராவின் தலைவராகவும் இவர் அறியப்படுகிறார். தூர்தர்ஷனில் இருந்த காலத்தில், ஷரத் தத் என்பவருடன் தூர்தர்ஷனின் முதல் வண்ண தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தயாரிப்பதில் ஈடுபட்டார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

நைமா கான் உப்ரேதி 1938 மே 25 அன்று உத்தரகண்ட் மாநிலத்தின் அல்மோராவில் ஒரு முஸ்லீம் தந்தை மற்றும் ஒரு கிறிஸ்தவ தாய்க்கு பிறந்தார். இவர் தனது பள்ளிப் படிப்பை ஆடம் பெண்கள் பள்ளியில் இருந்து முடித்தார். அதைத் தொடர்ந்து அல்மோராவில் உள்ள ராம்சே இன்டர் கல்லூரி பள்ளியிலும் படித்தார். 1958ஆம் ஆண்டில் ஆக்ரா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம், அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் 1969ஆம் ஆண்டில் தேசிய நாடகப் பள்ளியில் பட்டம் பெற்றார். [2] மற்றும் தேசிய நாடகப் பள்ளியின் தகவல் அமைப்பு நிறுவனத்தில் சில காலம் பணியாற்றினார். புனேவின் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் சான்றிதழ் பட்டமும் பெற்றார்.

தொழில்[தொகு]

தேசிய நாடகப் பள்ளி தகவல் அமைப்பு நிறுவனத்தின் உறுப்பினராக, நைமா கான் உப்ரேதி பல நாடக தயாரிப்புகளில் பங்கேற்றார். மேலும் இப்ராஹிம் அல்காசி, சுரேகா சிக்ரி, உத்தரா போகர், எம். கே. ரெய்னா மற்றும் பல நாடக ஆளுமைகளுடன் பணியாற்றினார். ஒத்தெல்லோ, தி காகசியன் சால்க் சர்க்கிள், நாடக் போலம்பூர் கா, ஸ்கந்தகுப்தர் போன்ற பல நாடக தயாரிப்புகளில் இவர் பணியாற்றினார்.

1968ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே பார்வதியா கலா கேந்திராவுடன் இவர் தொடர்பு கொண்டிருந்தார். மேலும் ராஜுலா மலுஷாஹி, அஜுவா பாபால், ராமி, இராம்லீலை, இந்திரசபை போன்ற பல தயாரிப்புகளில் பங்கேற்றார். 1997இல் மோகன் உப்ரேதி இறந்த பிறகு, நைமா கான் உப்ரேதி பார்வதியா கலா கேந்திராவின் தலைவராகப் பொறுப்பேற்றார். மோகன் உப்ரேதியின் பணிகளை இவர் முன்னெடுத்துச் சென்று மேகதூதம், ராமி, கோரிதானா, அமீர் குஸ்ராவ், அல்கோசா போன்ற பல நாடக தயாரிப்புகளை ஏற்பாடு செய்தார். [3]

அகில இந்திய வானொலியின் பல நாட்டுப்புற பாடல்கள், நாடக தயாரிப்புகள் மற்றும் வானொலி நிகழ்ச்சிகளுக்கு இவர் குரல் கொடுத்தார். இவர் ஓய்வு பெறும் வரை தூர்தர்ஷனில் பணிபுரிந்தார். மேலும் கிருஷி தரிசனம், கசுரகோ நடன விழா போன்ற பல தொலைக்காட்சித் தயாரிப்புகளின் தயாரிப்பாளராக இருந்தார்.

விருதுகள்[தொகு]

2010இல் நாட்சம்ரத் நாடகக் குழுவின் வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற பல பாராட்டுகளையும் இவர் பெற்றுள்ளார். [4]

இறப்பு[தொகு]

இவர் 2018 சூன் 15 அன்று டெல்லியில் காலமானார். [5]

குடும்பம்[தொகு]

நைமா கான் உப்ரேதி மோகன் உபிரேதி என்பவரை மணந்தார். [6]

ஆளுமை[தொகு]

நைமா கான் உப்ரேதி மற்றும் மோகன் உபிரேதி ஆகியோர் உத்தர்கண்டின் பல நாட்டுப்புற பாடல்களைப் பாடினர். "பேது பக்கோ பரோ மாசா" மற்றும் "ஓ லாலி ஹவுசியா" பாடல்களும் எச்.எம்.வி நிறுவனம் வெளியிட்டது.

நைமா கான் உப்ரேதி முஸ்லீம் திருமண பாடல்களின் தொகுப்பையும் புத்தகத்தில் வெளியிட்டார் - நக்மதி ராஸ்ம் [7] .

நடராங் பிரதிஷ்டானின் காப்பகங்களுக்கும் இவர் பங்களித்தார். [8]

குறிப்புகள்[தொகு]

  1. "Kumaoni Songs - BRAHMINS FROM KUMAON HILLS". dpuckjoe.wikifoundry-mobile.com.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Wayback Machine" (PDF). 18 July 2011. Archived from the original on 18 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்ரல் 2020. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)CS1 maint: unfit URL (link)
  3. "THEATRE Parvatiya Kala Kendra presents "Rami" Musical play about Armymen's Wives of Uttaranchal at LTG - 24th & 25th October 08". Delhi Events. 25 October 2008. பார்க்கப்பட்ட நாள் 2 July 2018.
  4. "NATSAMRAT THEATRE GROUP". www.natsamrattheatre.com. Archived from the original on 6 ஏப்ரல் 2020. பார்க்கப்பட்ட நாள் 2 July 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "नईमा खान उप्रेती श्रद्धाजंली ! ( 15 - 6-2018 दिवंगत )  स्मृति शेष !!". द अड्डा. 16 June 2018. Archived from the original on 6 ஏப்ரல் 2020. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்ரல் 2020. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help); no-break space character in |title= at position 17 (help)
  6. KUCKREJA, ARUN (1 September 2006). "Twins from the Himalayas" (in en-IN). The Hindu. The Hindu (The Hindu). https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/twins-from-the-himalayas/article3230536.ece. 
  7. Khan Upreti, Naima (2007). Nagmati Rasm. Almora, Uttarakhand: Mohan Upreti Lok Sanskriti, Kala Evam Vigyan Shodh Samiti. 
  8. "Natarang Pratishthan - Documentation". www.natarang.org. பார்க்கப்பட்ட நாள் 2 July 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைமா_கான்_உப்ரேதி&oldid=3561248" இலிருந்து மீள்விக்கப்பட்டது