உள்ளடக்கத்துக்குச் செல்

நைட்ரோ ஆல்க்கீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நைட்ரோ ஆல்க்கீன் (Nitroalkene) ஒரு வேதி வினைக்குழுவாகும். நைட்ரோ ஒலிபீன் என்ற பெயராலும் இக்குழுவை அழைக்கிறார்கள். பகுதிக்கூறுகளான நைட்ரோ மற்றும் ஆல்க்கீன் குழுக்களின் வினைகளை இணைத்து இக்குழு செயல்படுகிறது. ஆல்க்கீன் வினையூக்கத்தின் வழியாக நைட்ரோ ஆல்க்கீன் அதனுடைய தனிப்பண்புகளை வெளிப்படுத்துகிறது. இதன்மூலம் மைக்கேல் வினை அல்லது டையீல்சு-ஆல்டர் கூட்டுவினைகள் போன்ற தனிச்சிறப்பு மிக்க வினைகளில் இக்குழு மிகப்பயனுள்ளதாக உள்ளது [1].

தயாரிப்பு

[தொகு]

நைட்ரோ ஆல்க்கீனை பல்வேறு வழிகளில் தயாரிக்க இயலும். சில குறிப்பிடத்தக்க முறைகள் இங்கு தரப்பட்டுள்ளன.

  • என்றி வினை போன்ற நைட்ரோ ஆல்டால் வினைகளில் இதைத் தயாரிக்க இயலும் :[1][2][3]
.
  • தளத்தில் உருவாக்கப்படும் நைட்ரைல் அயோடைடு ஆல்க்கீனுடன் ஈடுபடும் நைட்ரோயேற்றம் வினையினாலும் இதைப் பெறலாம். வெள்ளி நைட்ரைடும் மூலக்கூற்று அயோடினும் நைட்ரைல் அயோடைடு தயாரிப்பில் பயன்படுகின்றன :[4]

.

  • அமிலச்சூழலில் அலுமினியம் ஆக்சைடை வினையூக்கியாகப் பயன்படுத்தி ஆல்க்கீனுடன் நைட்ரிக் ஆக்சைடு சேர்த்து நேரடியாக நைட்ரோயேற்றம் செய்தும் இதைத் தயாரிக்கலாம் :[5]

.

.

  • நைட்ரோ ஆல்ககால்களை நீர்நீக்கம் செய்தும் நைட்ரோ ஆல்க்கீனைத் தயாரிக்கலாம் :[7]

.

வினைகள்

[தொகு]

பல்வேறு வகையான வேதி வினைகளில் நைட்ரோ ஆல்க்கீன் பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.

  • இலைகோரிசிடின் தொகுப்பில் மைக்கேல் ஏற்பியாக நைட்ரோ ஆல்க்கீன் செயல்படுகிறது :[1][8]

.

  • டையீல்சு-ஆல்டர் கூட்டு வினையில் பியூட்டாடையீனை நோக்கி வினையூக்கம் பெற்ற டையீனோபிலாக நைட்ரோ ஆல்க்கீன் செயல்படுகிறது :[1][9]

.

.

  • நைட்ரோ ஆல்க்கீனை பெரிசைக்ளிக் மறுசீரமைப்பு வினைக்கு உட்படுத்தி இண்டோல் தயாரிக்க இயலும் :[11]

.

  • ஐதராக்சிலமீன் வேதி வினைக்குழுவை ஏந்தியுள்ள ஆல்க்கீனை பகுதி ஐதசனேற்றம் செய்ய நைட்ரோ ஆல்க்கீன் பயன்படுகிறது :[12]

.

  • முதல்நிலை அமீன்களாக ஒடுக்குவதற்கும் நைட்ரோ ஆல்க்கீன் பயன்படுகிறது :[12][13]

.

  • 1,4 கூட்டு வினையுடன் தொடர்புடைய சமச்சீர்மையற்ற சிடெட்டர் வினையிலும் இது பயன்படுகிறது :[14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Furniss, Brian; Hannaford, Antony; Smith, Peter; Tatchell, Austin (1996). Vogel's Textbook of Practical Organic Chemistry 5th Ed. London: Longman Science & Technical. pp. 635, 768, 1035–1036, & 1121. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780582462366. {{cite book}}: Unknown parameter |last-author-amp= ignored (help)
  2. Ballini, Roberto; Castagnani, Roberto; Petrini, Marino (1992). "Chemoselective synthesis of functionalized conjugated nitroalkenes". The Journal of Organic Chemistry 57 (7): 2160–2162. doi:10.1021/jo00033a045. 
  3. Worrall, David E. (1929). "Nitrostyrene". Org. Synth. 9: 66. doi:10.15227/orgsyn.009.0066. 
  4. Waldman, Steve; Monte, Aaron, Monte; Bracey, Ann; Nichols, David (1996). "One-pot Claisen rearrangement/O-methylation/alkene isomerization in the synthesis of ortho-methoxylated phenylisopropylamines". Tetrahedron Letters 37 (44): 7889–7892. doi:10.1016/0040-4039(96)01807-2. 
  5. Mukaiyama, T.; Hata E.; Yamada, T. (1995). "Convenient and Simple Preparation of Nitroolefins Nitration of Olefins with Nitric Oxide". Chemistry Letters 24 (7): 505–506. doi:10.1246/cl.1995.505. 
  6. Varma, Rajender; Naicker, Kannan; Liesen, Per (1998). "Selective nitration of styrenes with clayfen and clayan: A solvent-free synthesis of β-nitrostyrenes". Tetrahedron Letters 39 (23): 3977–3980. doi:10.1016/S0040-4039(98)00740-0. 
  7. Ranganathan, Darshan; Rao, Bhushan; Ranganathan, Subramania; Mehrotra, Ashok; Iyengar, Radha (1980). "Nitroethylene: a stable, clean, and reactive agent for organic synthesis". The Journal of Organic Chemistry 45 (7): 1185–1189. doi:10.1021/jo01295a003. 
  8. Jubert, Carole; Knochel, Paul (1992). "Preparation of polyfunctional nitro olefins and nitroalkanes using the copper-zinc reagents RCu(CN)ZnI". The Journal of Organic Chemistry 57 (20): 5431–5438. doi:10.1021/jo00046a027. 
  9. Noboru Ono; Hideyoshi Miyake; Akio Kamimura; Aritsune, Kaji (1987). "Regioselective Diels–Alder reactions. The nitro group as a regiochemical control element". Perkin Transactions 1: 1929–1935. doi:10.1039/P19870001929. 
  10. Jie Jack Li (2013). Heterocyclic Chemistry in Drug Discovery. New York: Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781118354421. pp.43-4
  11. Novellino, Luisa; d'Ischia, Marco; Prota, Giuseppe (1999). "Expedient Synthesis of 5,6-Dihydroxyindole and Derivatives via an Improved Zn(II)-Assisted 2,β-Dinitrostyrene Approach". Synthesis 5: 793–796. doi:10.1055/s-1999-3469. https://archive.org/details/sim_synthesis_1999-05_5/page/793. 
  12. 12.0 12.1 Masahiko Kohno; Shigehiro Sasao; Shun-Ichi Murahashi (1990). "Synthesis of Phenethylamines by Hydrogenation of β-Nitrostyrenes". Bulletin of the Chemical Society of Japan 63 (4): 1252–1254. doi:10.1246/bcsj.63.1252. https://archive.org/details/sim_bulletin-of-the-chemical-society-of-japan_1990-04_63_4/page/1252. 
  13. Koch, Werner; Reichert, Benno (1935). "Über die katalytische Hydrierung substituierter ω-Nitrostyrole". Archiv der Pharmazie 273 (18–20): 265–274. doi:10.1002/ardp.19352731802. 
  14. DiRocco, D. A.; Oberg, K. M.; Dalton, D. M.; Rovis, T. (2009). "Catalytic Asymmetric Intermolecular Stetter Reaction of Heterocyclic Aldehydes with Nitroalkenes: Backbone Fluorination Improves Selectivity". Journal of the American Chemical Society 131 (31): 10872–10874. doi:10.1021/ja904375q. பப்மெட்:19722669. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைட்ரோ_ஆல்க்கீன்&oldid=3521101" இலிருந்து மீள்விக்கப்பட்டது