நைட்ரோசில் சயனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைட்ரோசில் சயனைடு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
நைட்ரசு சயனைடு
இனங்காட்டிகள்
4343-68-4
ChemSpider 109829
InChI
  • InChI=1S/CN2O/c2-1-3-4
    Key: CAMRHYBKQTWSCM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 123214
SMILES
  • C(#N)N=O
பண்புகள்
CN2O
வாய்ப்பாட்டு எடை 56.02 g·mol−1
தோற்றம் நீலப்பச்சை வாயு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

நைட்ரோசில் சயனைடு (Nitrosyl cyanide) CN2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நீலம் மற்றும் பச்சை நிறங்களுக்கு இடைப்பட்ட ஒரு நிறத்தில் வாயு நிலையில் இது காணப்படுகிறது, [1] வினையூக்கியான குளுக்கோசு ஆக்சிடேசு என்ற நொதியின் முன்னிலையில் சயனமைடை ஆக்சிசனேற்றம் செய்து தேவைப்படும்போது நைட்ரோசில் சயனைடு தயாரிக்கப்படுகிறது, [2]

கட்டமைப்பும் வினைத்திறனும்[தொகு]

நைட்ரோசில் சயனைடு சமதளக் கட்டமைப்பில் உள்ளது. நைட்ரோசில் குளோரைடின் கட்டமைப்பிற்கு ஒப்பானதாகவும் உட்புற நைட்ரசனில் வலுவாக வளைந்தும் காணப்படுகிறது. C-N-O அமைப்பின் பிணைப்புக் கோணம் 113° ஆகும். NCN அமைப்பின் பிணைப்புக் கோணம் 170°.[1] குறைந்த வெப்பநிலையில் நைட்ரோசில் குளோரைடுடன் வெள்ளி சயனைடைச் சேர்த்து வினைப்படுத்தினால் இச்சேர்மத்தை உருவாக்க முடியும். பொதுவாக இச்சேர்மம் தனிமைப்படுத்தப்படுவதில்லை, ஆனால் டையீல்சு -ஆல்டர் வினைகளில் பியூட்டாடையீன் உடன் கிடைக்கிறது. N=O பிணைப்பு முழுவதும் வளையக்கூட்டு வினைகள் நிகழ்கின்றன. 9,10-இருமெத்தில் ஆந்திரசீன் உடன் மீளக்கூடிய ஒரு கூட்டுவிளைபொருளை இது உருவாக்குகிறது.

தொடர்புடைய சேர்மம்[தொகு]

நிறமற்ற வாயுவான நைட்ரைல் சயனைடு, நைட்ரோசில் சயனைடுடன் தொடர்பு கொண்ட சேர்மமாகும். இதனுடைய கொதிநிலை 7 பாகை செல்சியசு வெப்பநிலையாகும். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Kirby, G. W. (1977). "Tilden Lecture. Electrophilic C-nitroso-compounds". Chemical Society Reviews 6: 1. doi:10.1039/CS9770600001. 
  2. Shirota, Frances N.; Goon, David J.W.; Demaster, Eugene G.; Nagasawa, Herbert T. (1996). "Nitrosyl cyanide, a putative metabolic oxidation product of the alcohol-deterrent agent cyanamide". Biochemical Pharmacology 52 (1): 141–147. doi:10.1016/0006-2952(96)00174-8. பப்மெட்:8678898. 
  3. Rahm, Martin; Bélanger-Chabot, Guillaume; Haiges, Ralf; Christe, Karl O. (2014). "Nitryl Cyanide, NCNO2". Angewandte Chemie International Edition 53 (27): 6893–6897. doi:10.1002/anie.201404209. பப்மெட்:24861214. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைட்ரோசில்_சயனைடு&oldid=3327843" இலிருந்து மீள்விக்கப்பட்டது