நைட்ரோஃபென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நைட்ரோஃபென்
Nitrofen.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,4-டைகுளோரோ-1-(4-நைட்ரோபீனாக்சி)பென்சீன்
வேறு பெயர்கள்
நைட்ரோஃபென்;நைட்ரோபீன்; 2,4-டைகுளோரோபீனைல் 4-நைட்ரோபீனைல் ஈதர்
இனங்காட்டிகள்
1836-75-5 Yes check.svgY
ChemSpider 15010
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 15787
பண்புகள்
C12H7Cl2NO3
வாய்ப்பாட்டு எடை 284.09 g·mol−1
தோற்றம் நிறமற்றது, படிகத்திண்மம்[1]
அடர்த்தி 1.80 கி/செ.மீ3 83 ° செ.இல்[1]
உருகுநிலை
0.7-1.2 மி.கி/லி 22 ° செ இல்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

நைட்ரோஃபென் (Nitrofen) என்பது C12H7Cl2NO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச்சேர்மம் ஆகும். களைக்கொல்லியான இச்சேர்மம் ஒரு டைபீனைல் ஈதர் வகையாக பகுக்கப்பட்டுள்ளது. புற்றுநோயூக்கி தொடர்பான கவலைகள் காரணமாக 1996 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியம் [2], அமெரிக்கா போன்ற நாடுகளில் நைட்ரோஃபென் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது [3]. கரிம வேளாண் உணவுகள், முட்டைகள், கரிம கோழிப்பண்னை சார் பொருட்களில் நைட்ரோஃபென்னின் இருப்பு செருமனியில் கண்டறியப்பட்டதால் 2002 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பாவில் கரிம இறைச்சி விற்பனையிலும் உடனடியாக சரிவு ஏற்பட்டது [4][5]. அனைத்துலக புற்றுநோய் ஆய்வு நிறுவனம் நைட்ரோஃபென்னை 2பி வகை புற்றுநோய் காரணி என வகைப்படுத்தியுள்ளது. நைட்ரோஃபென் சேர்மத்தால் மனிதர்களுக்கு புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு உண்டு என்பது இதன் பொருளாகும் [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Nitrofen, WHO/FAO Data Sheets on Pesticides, No. 84
  2. Banned pesticide in German grain, Pesticides News No. 57, September 2002, page 22
  3. Nitrofen data sheet, INCHEM WHO/FAO report, July 1996.
  4. Nitrofen scandal causes organic meat sales to dip, Just Food, October 2, 2002.
  5. Organic scandal halts Germany's green revolution, by John Hooper, The Guardian, June 12, 2002.
  6. IARC Monographs - Classifications - by Group
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைட்ரோஃபென்&oldid=2226281" இருந்து மீள்விக்கப்பட்டது