நைக்டையோர்னிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைக்டையோர்னிசு
காட்டுப் பஞ்சுருட்டான்
உயிரியல் வகைப்பாடு
உலகம்: மெய்க்கருவுயிரி
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: பறவை
வரிசை: கொராசிபார்மிசு
குடும்பம்: மீராப்பிடே
பேரினம்: நைக்டையோர்னிசு
ஜார்டைன் & செல்பை, 1830
மாதிரி இனம்
நைக்டையோர்னிசு அமிக்டசு[1]
தெம்னிக், 1824

உரையினை காண்க

நைக்டையோர்னிசு (Nyctyornis) என்பது பஞ்சுருட்டான் குடும்பப் பேரினமாகும். இது மெரோபிடே குடும்பத்தில் உள்ள பாசரின் பறவைகளுடன் நெருங்கிய தொடர்புடையது. இந்த பேரினத்தில் இரண்டு சிற்றினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இது வெப்பமண்டல தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது.[2]

படம் விலங்கியல் பெயர் பொதுப் பெயர் பரவல்
நைக்டையோர்னிசு அமிக்டசு சிவப்பு தாடி தேனீ உண்ணும் பறவை தென்கிழக்காசியா
நைக்டையோர்னிசு அதர்டோனி காட்டுப் பஞ்சுருட்டான் இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகள்

நைக்டையோர்னிசு பேரினமானது இயற்கையியலாளர்களான வில்லியம் ஜார்டின் மற்றும் ப்ரிடாக்ஸ் ஜான் செல்பி ஆகியோரால் 1830-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.[3][4] இந்த பெயர் பண்டைக் கிரேக்கச் சொல்லான நக்ட் என்பதிலிருந்து வந்தது, அதாவது இரவு அல்லது இரவுப்பொழுது என்பதாகும். ஆர்னிசு என்றால் பறவை குறிப்பதாகும்.[5] 2007-ல் வெளியிடப்பட்ட ஒரு மூலக்கூறு தொகுதி வரலாற்று ஆய்வு, இந்த பேரினமானது அடிப்படையானது மற்றும் தேனீ உண்ணும் குடும்பத்தின் மீதமுள்ள உறுப்பினர்களுடன் ஒரு சகோதர குழுவை உருவாக்குகிறது என்பதைக் காட்டுகிறது.[6]

மற்ற தேனீ பிடிப்பான்களைப் போலவே, நைக்டையோர்னிசு பேரினத்தின் சிற்றினங்களும் நீண்ட வால்கள், நீண்ட கீழ்நோக்கிய அலகு மற்றும் கூர்மையான இறக்கைகள் கொண்ட வண்ணமயமான பறவைகள் ஆகும். இவை பெரிய தேனீ பிடிப்பான் ஆகும்.{[7] முக்கியமாகப் பச்சை, முக நிறம் இந்தச் சிற்றினத்தின் பெயரினைச் சுட்டிக் காட்டுகிறது. இந்த நிறம் சற்று தொங்கும் தொண்டை இறகுகள் வரை நீண்டு "தாடியை" உருவாக்குகிறது.[8]

இரண்டு நைக்டையோர்னிசு சிற்றினங்கள் மட்டுமே தேனீ பிடிப்பான்கள் ஆகும். இவை கண் பட்டை இல்லாதவை மற்றும் இரு நிற அலகுகளைக் கொண்டுள்ளன.[6] இவற்றின் ஓசை மற்ற தேனீ பிடிப்பான்களிடமிருந்து வேறுபடுகின்றன.[9] இவற்றின் அளவு மற்றும் அதிக வட்டமான இறக்கைகள் மீரோப்சு பேரினத்தைச் சேர்ந்த உறுப்பினர்களைக் காட்டிலும் பறக்கும்போது வேறுபாட்டினை அளிக்கிறது.[9]

மற்ற தேனீ பிடிப்பான்கள் பொதுவாக, முக்கியமாகப் பூச்சிகளை உண்ணுகின்றன. குறிப்பாகத் தேனீக்கள், குளவிகள் மற்றும் ஹார்னெட்டுகள். இவற்றைப் பறந்து செல்லும் போது பிடித்து உண்ணுகின்றன. ஆனால் இவை வேறுபட்ட உத்தியைக் கொண்டுள்ளன. இவை குழுக்களாக அல்லாமல் தனியாகவோ அல்லது இணைகளாகவோ வேட்டையாடுகின்றன.[9] மேலும் நீண்ட நேரம் அசையாமல் அமர்ந்து இரையைத் தொடரும். நீல-தாடி கொண்ட தேனீ-உண்ணும் பறவைகள் பசுமையாக இருக்கும். மேலும் தேனீக்கள் சில நேரங்களில் ஒரு பறவையின் பிரகாசமான நீல தாடியால் ஈர்க்கப்படுகின்றன. இப்பறவையினை பூ எனத் தவறாகக் கூடத் தேனீக்கள் நினைக்கலாம்.[10] இவை மணல் கரைகளின் ஓரத்தில் சுரங்கம் போன்ற கூடுகளைக் கட்டுகின்றன.[11]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Momotidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-25.
 2. Gill, Frank; Donsker, David, eds. (2016). "Todies, motmots, bee-eaters, hoopoes, wood hoopoes & hornbills". World Bird List Version 6.4. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 23 October 2016.
 3. James L. Peters, தொகுப்பாசிரியர் (1945). Check-list of Birds of the World. Volume 5. Cambridge, Massachusetts: Harvard University Press. பக். 238. https://www.biodiversitylibrary.org/page/14480249. 
 4. Sir William Jardine, 7th Baronet; Prideaux John Selby (1830). Illustrations of Ornithology. 2. Edinburgh: W.H. Lizars. Addenda. https://www.biodiversitylibrary.org/page/39770170. 
 5. Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. பக். 277. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4081-2501-4. https://archive.org/details/Helm_Dictionary_of_Scientific_Bird_Names_by_James_A._Jobling. 
 6. 6.0 6.1 Marks, B.D.; Weckstein, J.D.; Moyle, R.G. (2007). "Molecular phylogenetics of the bee-eaters (Aves: Meropidae) based on nuclear and mitochondrial DNA sequence data". Molecular Phylogenetics and Evolution 45 (1): 23–32. doi:10.1016/j.ympev.2007.07.004. பப்மெட்:17716922. 
 7. Fry, Fry & Harris 1992, ப. 242.
 8. Fry, Fry & Harris 1992, ப. 241-244.
 9. 9.0 9.1 9.2 Fry, Hilary (2001). "Family Meropidae (Bee-eaters)". in del Hoyo, J.; Elliott, A.; Sargatal, J.. Handbook of the Birds of the World. 6: Mousebirds to Hornbills. Barcelona, Spain: Lynx Edicions. பக். 286–325. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-84-87334-30-6. https://archive.org/details/handbookofbirdso0006unse/page/286/mode/1up. 
 10. Fry, Fry & Harris 1992, ப. 243.
 11. Fry, Fry & Harris 1992, ப. 242, 244.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைக்டையோர்னிசு&oldid=3862086" இலிருந்து மீள்விக்கப்பட்டது