நைக்டிபட்டிராசிடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைக்டிபட்டிராசிடே
Nyctibatrachus beddomii.jpg
நைக்டிபாட்ராச்சசு பெடோமி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: நீர்நில வாழ்வன
வரிசை: வாலற்றன
குடும்பம்: நைக்டிபேட்ராச்சிடே
மாதிரிப் பேரினம்
நைக்டிபாட்ராச்சசு
பெளலஞ்சர், 1882

நைக்டிபட்டிராசிடே (Nyctibatrachidae) என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் இலங்கையிலும் காணப்படும் ஒரு குறைந்த எண்ணிக்கையிலான சிற்றினங்களைக் கொண்ட தவளைக் குடும்பமாகும். இவை பொதுவாக வலுவான தவளைகள் எனப்படுகின்றன.[1][2] நைக்டிபட்டிராசிடே அண்மையிலே ஒரு குடும்பமாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த தவளைகள் முன்னர் பரவலாக வரையறுக்கப்பட்ட குடும்பமான இரணிடே குடும்பத்தில் வைக்கப்பட்டன. மிகச் சமீபத்தில் இலங்கானெக்டினே, நைக்டிபட்டிராச்சினே, மற்றும் அசுட்ரோபட்ராச்சினே ஆகிய மூன்று துணைக் குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டன.[3][4]

பேரினம்[தொகு]

இந்தக் குடும்பம் மூன்று பேரினங்களை இதன் துணைக் குடும்பங்களில் கொண்டுள்ளது:[1][2][4]

 • துணைக் குடும்பம் ஆசுட்ரோபாட்ராசினே
  • ஆசுட்ரோபாட்ராசசு விஜயகுமார் மற்றும் பலர்., 2019 (தென்மேற்கு இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் - 1 சிற்றினம்)
 • துணைக் குடும்பம் இலங்கனெக்டினே
  • இலங்கானெக்டெசு துபோயிசு மற்றும் ஓக்லர், 2001 (இலங்கை - 2 சிற்றினங்கள்)
 • துணைக் குடும்பம் நைக்டினோபட்டிராச்சினே
  • நைக்டிபாட்ராச்சசு பெளலென்ஜர், 1882 (தென்மேற்கு இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் - 28 சிற்றினங்கள்)

விளக்கம்[தொகு]

நைக்டிபாட்ராச்சசு என்பது வலுவான-உடலமைப்புடைய தவளைகள் ஆகும். இவை சிறிய அளவுடைய (மூக்கு-குதம் நீளம் <20 மி.மீ. வரை)நைக்டிபட்ராச்சசு பெடோமி முதல் ஒப்பீட்டளவில் பெரிய (84 மி.மீ. வரை நைக்டிபட்ராச்சசு கர்நாடகென்சிசு) காணப்படும். மலைப்பாங்கான பசுமைமாறாக் காடுகளில் உள்ள நீரோடைகளுக்கு அருகில் இவை காணப்படுகின்றன. இலங்கனெக்டெசு என்பது சதுப்புநிலங்களில் மெதுவாக ஒட்டும் ஆறுகளில் காணப்படும் நீர் வாழ் சிற்றினமாகும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Frost, Darrel R. (2014). "Nyctibatrachidae Blommers-Schlösser, 1993". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. 29 May 2014 அன்று பார்க்கப்பட்டது.
 2. 2.0 2.1 "Nyctibatrachidae". AmphibiaWeb: Information on amphibian biology and conservation. [web application]. Berkeley, California: AmphibiaWeb. 2015. 29 November 2015 அன்று பார்க்கப்பட்டது.
 3. Blackburn, D.C.; Wake, D.B. (2011). "Class Amphibia Gray, 1825. In: Zhang, Z.-Q. (Ed.) Animal biodiversity: An outline of higher-level classification and survey of taxonomic richness". Zootaxa 3148: 39–55. http://mapress.com/zootaxa/2011/f/zt03148p055.pdf. 
 4. 4.0 4.1 Shanker, Kartik; Blackburn, David C.; Stanley, Edward L.; Swamy, Priyanka; Srikanthan, Achyuthan N.; Torsekar, Varun R.; Dinesh, K. P.; Pyron, Robert Alexander et al. (2019-03-12). "A new ancient lineage of frog (Anura: Nyctibatrachidae: Astrobatrachinae subfam. nov.) endemic to the Western Ghats of Peninsular India" (in en). PeerJ 7: e6457. doi:10.7717/peerj.6457. பன்னாட்டுத் தர தொடர் எண்:2167-8359. பப்மெட் சென்ட்ரல்:6419720. https://peerj.com/articles/6457. 
 5. Vitt, Laurie J.; Caldwell, Janalee P. (2014). Herpetology: An Introductory Biology of Amphibians and Reptiles (4th ). Academic Press. பக். 509–510. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைக்டிபட்டிராசிடே&oldid=3420530" இருந்து மீள்விக்கப்பட்டது