உள்ளடக்கத்துக்குச் செல்

நேர்மறை உளச்சிகிச்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேர்மறை உளவியல் சிகிச்சை முறை

நேர்மறை உளச்சிகிச்சை (Positive psychotherapy, PPT), உளநோய் மருத்துவரும் உளச்சிகிச்சையாளருமான நோஸ்ரத் பெசெசுக்கியான் மற்றும் அவரது குழுவினரால் செருமனியில் 1968-இல் உருவாக்கப்பட்ட ஒரு சிகிச்சை முறை ஆகும். நேர்மறை உளச்சிகிச்சை முறை மனிதப் பண்புக் கோட்பாட்டோடு சேர்ந்த மனோ இயக்கவியல் உளச்சிகிச்சை மற்றும் மனித இயல்பின் நேர்மறை கருத்துணர்தலை சார்ந்த சிகிச்சை முறை ஆகும். 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி , இருபது நாடுகளில் பயிற்சி மையங்கள் உள்ளன. இதை நேர்மறை உளவியலுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது.[1]

விளக்கம்

[தொகு]

இது  நோஸ்ராத் பெசெஷ்கியானால் 1970கள், 1980களில் உருவாக்கப்பட்டது.[2][3][4]

தொடக்கத்தில் "வகைப்படுத்தல் பகுப்பாய்வு" என்று அழைக்கப்பட்டது. பின்னர் பெசெஷ்கியன் 1977இல் தனது படைப்பை வெளியிட்டபோது நேர்மறை உளச்சிகிச்சை என்று மறுபெயரிடப்பட்டார். 1987-இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இதில் "நேர்மறை" என்பது "பாசிட்டிவசு“ எனும் இலத்தீன் மொழியிலிருந்து மனித அனுபவங்களின் உண்மையான, உறுதியான அம்சங்களைக் குறிப்பதாக அமைகிறது.

நேர்மறை உளச்சிகிச்சையின் முதன்மை நோக்கம், நோயாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் திறன், பலம், வளம், ஆற்றல் முதலியனவற்றை அங்கீகரித்து வளர்த்துக் கொள்ள உதவுவதாகும். இந்த அணுகுமுறை உளவியல் சிகிச்சையின் பல்வேறு முறைகளிலிருந்து கூறுகளை ஒருங்கிணைக்கிறது. அவற்றில்,

  1. மனித இயல்பு மற்றும் சிகிச்சை குறித்த மனிதநேயக் கண்ணோட்டம்,
  2. மன நல மற்றும் உளவழி உடல் கோளாறுகள் பற்றிய மனோதத்துவப் புரிதல்,
  3. குடும்பம், கலாச்சாரம், வேலை, மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய முறையான அணுகுமுறை
  4. நடைமுறை, சுய உதவி, மற்றும் இலக்கு சார்ந்த ஐந்து-கட்ட சிகிச்சை செயல்முறைகள்.[5]

நேர்மறை உளச்சிகிச்சை என்பது முரண்களை மையப்படுத்தி , வளங்களை முன்னிறுத்தும் அணுகுமுறையாகும். இது இருபதுக்கும் மேற்பட்ட மாறுபட்ட கலாச்சாரங்களின் ஆய்வுகளால் உருவாக்கப்பட்டதாகும்.[6]. புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை மற்றும் செயல்முறை சார்ந்த பகுப்பாய்வு உளவியல் சிகிச்சைக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்ட நேர்மறை உளவியல் சிகிச்சை, நோயறிதல், சிகிச்சை, சிகிச்சைக்குப் பிந்தைய சுய உதவி மற்றும் பயிற்சிக்கு அரை-கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது.

அறிமுகம் – நிறுவனர் பற்றி

[தொகு]
நோஸ்ராத் பெசெஷ்கியான்

நோஸ்ராத் பெசெஷ்கியான், நேர்மறை உளவியல் சிகிச்சையின் நிறுவனர் ஆவார். இவர் ஜெர்மனியை சேர்ந்த உளவியலாளர், நரம்பியல் நிபுணர், உளவியல் மருத்துவர் மற்றும் உளவழிஉடல்கோளாறு (psychosomatic) மருத்துவ நிபுணர் ஆவார். இவரது வேர்கள் ஈரானில் இருந்தவையாகும். 1960களின் இறுதியில் மற்றும் 1970களின் தொடக்கத்தில், இவர் பின்வரும் நிகழ்வுகளில் இருந்து தூண்டல் பெற்றார்

  • அந்த காலக் கட்டத்தின் பிரதான மனநிலை, இது மனிதமைய உளவியலையும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட முன்னேற்றங்களையும் உருவாக்க வழிவகுத்தது.
  • விக்டர் பிராங்கிள், ஜேக்கப் எல். மொரீனோ, ஹைன்ரிக் மெங் போன்ற சிறந்த உளச்சிகிச்சையாளர்களுடனும் மனநல மருத்துவர்களுடனும் நடைபெற்ற தனிப்பட்ட தொடர்புகள்.
  • பஹாயி மதத்தின் மனிதமைய மற்றும் ஒருங்கிணைந்த கொள்கைகள் மற்றும் மதிப்புகள்.
  • அந்தக் காலத்தில் செருமனியில், மனோதத்துவ ஆய்வாளர்களுக்கும், நடத்தை உளவியலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகள் போன்ற எதிர்மறையான அனுபவங்களால் ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையை நாடல்.
  • கலாச்சார ரீதியாக உணர்திறன் வாய்ந்த வழிமுறைக்கான தேடலால் மேற்கொள்ளப்பட்ட பரந்த பண்பாட்டு ஒப்பீடுகள்.

பெசெஷ்கியனின் வாழ்க்கை வரலாறும் ஆளுமையும் அதன் உருவாக்கத்தை பெரிதும் பாதித்ததால், அவர் அணுகுமுறையின் வளர்ச்சியுடன் பிணைக்கப்படுகிறார். பெசெஷ்கியனை அவரது வாழ்க்கை வரலாற்றாசிரியர் " இரண்டு உலகங்களுக்கு இடையில் அலைந்து திரிபவர்" என்று விவரித்தார்; அவரது வாழ்க்கை வரலாறு "கிழக்கும் மேற்கும்" என்ற துணைத் தலைப்புடன் வந்துள்ளது.[7]

பெஸெஷ்கியான் கூற்றின்படி, நேர்மறை உளசிகிச்சை வளர்ச்சிக்கு அவருடைய அனுபவமே தூண்டுகோலாக இருந்தது. 1954 முதல் ஐரோப்பாவில் வாழ்ந்த ஒரு ஈரானியராக இருந்ததால், கலாச்சாரங்களுக்கிடையேயான நடத்தைகள், மரபுகள் மற்றும் மனப்பாங்குகளின் வேறுபாடுகளை மிக நுட்பமாக உணர முடிந்தது. இந்த விழிப்புணர்வு அவருடைய சிறு வயதிலேயே தோன்றியது; அவர் பஹாயி மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவருடைய முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் யூத சக மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் இருந்த மதச்சார்ந்த மாறுபாடுகளை கவனித்துப் பார்த்தார். இந்த அனுபவங்கள் அவரை வெவ்வேறு மதங்களும் மக்களும் எப்படி தொடர்பு கொள்கிறார்கள் என்பதைக் குறித்து சிந்திக்க வைத்தது, மேலும் உலகை நோக்கும் பார்வை மற்றும் குடும்பக் கொள்கைகள் மனப்பாங்குகளை எப்படி உருவாக்குகின்றன என்பதையும் புரிந்து கொள்ள வைத்தது.

அவருடைய சிறப்பு மருத்துவப் பயிற்சியின் போது, வெவ்வேறு உளவியல், நரம்பியல் மற்றும் உளசிகிச்சை முறைகள் ஒன்றோடொன்று மோதுவதை அவர் கண்டறிந்தார்—இந்த அனுபவங்கள் அவருக்குப் பாகுபாடுகளை விட்டுவிட்டு மனதளவில் திறந்த நிலைப்பாட்டை ஏற்க முக்கியத்துவம் இருக்கிறது என்பதைக் கற்றுத் தந்தது.[7]

நேர்மறை உளசிகிச்சை வேர்கள் மனித மைய உளவியல் மற்றும் உளசிகிச்சை கோட்பாடுகளிலே காணப்படுகின்றன, இவை கார்ட் கோல்ட்ஸ்டீன், ஆபிரகாம் மாஸ்லோ மற்றும் கார்ல் ரோஜர்போன்றவர்களால் உருவாக்கப்பட்டன. உள பகுப்பாய்வு மற்றும் அதன் பிறகான வளர்ச்சிகள், அதிலிருந்து தோன்றிய நியோ-ஃபிராய்டியன், உளஉடல் கோளாறு மற்றும் கவனத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறைகள் (பாலின்ட் போன்றவருடைய),  பெஸெஷ்கியானின் பார்வையை வடிவமைத்தன. இந்த பிளவுகளுக்கு பதிலளிக்க அவர் அனைத்தையும் இணைக்கும் ஒரு மேல்நிலை கோட்பாட்டை உருவாக்கவேண்டும் என விரும்பினார். அதே நேரத்தில், பஹாயி மதத்தின் சில கோட்பாடுகள் பெஸெஷ்கியானை அவரது வாழ்நாள் முழுவதும் வியக்க வைத்தன மற்றும் அவரை ஊக்குவித்தன. இந்தக் கோட்பாடுகள், அறிவியலும் மதமும் ஒத்திசைவுடன் இணைந்திருக்கும் என்ற கருத்தை, “மனிதன் என்பது மதிப்பிட முடியாத மதிப்புள்ள ரத்தினங்கள் நிறைந்த ஒரு சுரங்கம்” என்பதைக் கூறும் பஹாயி மதக் கோட்பாட்டை, மற்றும் பல்வேறு கலாச்சாரங்களை தழுவும் ஒரு உலகளாவிய சமுதாயப் பார்வையையும் உள்ளடக்கியிருந்தன. இக்கோட்பாடுகள், அவரது பணியிலும் தத்துவக் கணக்கீட்டிலும் முக்கியமான பாதிப்பை ஏற்படுத்தின.[7]

நேர்மறை உளசிகிச்சையின் முன்னேற்றத்திற்க்கு பல காரணிகள் உள்ளன. இந்த காரணிகளில் அடங்குபவை: தொடர்ச்சியான மருத்துவக் கல்வியின் மூலம் பெறப்பட்ட உள்ளடக்கமான பார்வைகள், உளசிகிச்சை மற்றும் உளஉடல் குறைபாடு செயல்பாடுகளில் நோயாளர்களுடன் வேலை செய்த அனுபவங்கள், பல்வேறு கலாச்சாரங்கள், மதங்கள் மற்றும் மதிப்பீட்டு முறைகளைச் சேர்ந்த மக்களுடன் ஏற்பட்ட தொடர்புகள், மேலும், உளசிகிச்சை முறைகள் கொண்டுள்ள பரந்த பரிமாணம் மற்றும் மாறுபட்ட தன்மை. இந்த ஒட்டுமொத்த அனுபவங்கள் இணைந்து, 1969-இல் வேறுபடுத்தப்பட்ட பகுப்பு எனப்படும் ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்க வழிவகுத்தன. இது பின்னர் மேலும் நுட்பமாக்கப்பட்டு, 1977-ஆம் ஆண்டில் நேர்மறை உளசிகிச்சை எனும் பெயரில் உருவெடுத்தது. நோஸ்ராத் பெசெஷ்கியான் எழுதிய தொடக்ககால நூல்களின் தலைப்புகள், எடுத்துக்காட்டாக "Psychotherapy of Everyday Life (1974) மற்றும் "In Search of Meaning (1983)" போன்றவை, இந்த வளர்ச்சிக்கான அடையாளங்களாக அமைகின்றன. மேலும், நேர்மறை குடும்ப சிகிச்சை (1980) என்ற தலைப்பு,1970 களில் வளர்ந்த முறையான குடும்பசிகிச்சையுடன் ஏற்பட்ட இணைப்பையும் ஒத்த வளர்ச்சியையும் வலியுறுத்துகிறது. மொத்தமாக, பெஸெஷ்கியான் இந்த அணுகுமுறையைப் பற்றிய 29 புத்தகங்களையும் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார், இது இந்த சிகிச்சைமுறையின் விரிவான இலக்கிய மற்றும் பரவலுக்கு முக்கிய பங்களிப்பாகும்.[7]

வளர்ச்சி மற்றும் வரலாறு

[தொகு]

1970–1980கள்:

[தொகு]

1970கள் என்பது நேர்மறை உளசிகிச்சையின் வளர்ச்சிக்கும் மற்றும் அதை ஏற்றுக்கொள்ளலுக்கும் முக்கியமான காலப்பகுதியாகும். இந்த காலத்தில் PPT ஒரு திருப்புமுனையை அடைந்து,உளசிகிச்சைத்  துறையில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த ஆண்டுகளில் PPT-இன் அடிப்படைக் கொள்கைகள் உருவாகத் தொடங்கின, பல நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்காக இந்தக் கொள்கைகள் பயன்படுத்தப்பட்டன. மேலும், இந்தக் கொள்கைகள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, ஜெர்மனியிலும், ஜெர்மனிக்கு வெளியிலும் உள்ள சர்வதேச நாடுகளில் நடைபெறும் சொற்பொழிவுகளில் வழங்கப்பட்டன. இந்த முக்கியமான காலகட்டத்தில் PPT-இன் ஐந்து அடிப்படைப் புத்தகங்களில் நான்கு வெளியிடப்பட்டன:

  • Psychotherapy of Everyday Life (முதலில் ஜெர்மனில் Schatten auf der Sonnenuhr என்ற பெயரில் 1974இல் வெளியிடப்பட்டது),
  • Positive psychotherapy (1977இல் ஜெர்மனில் வெளியிடப்பட்டது),
  • Oriental Stories in Positive Psychotherapy (1979இல் ஜெர்மனில்),
  • Positive Family Therapy (1980இல் ஜெர்மனில் வெளியிடப்பட்டது).

மேலும், 1970களில் PPT-க்கு முதன்முறையாக பட்டப்படிப்பு பிந்தைய பயிற்சிகள் அறிமுகமாகின. 1974இல் நிறுவப்பட்ட பயிற்சி அமைப்பு, பின்னாளில் விஸ்பாடன் உளசிகிச்சை கல்விக்கூடத்தின் (WIAP) முன்னோடியாகவும் அமைந்தது. ஹெஸ்ஸி மாநிலத்தின் மருத்துவச் சபை, 1979இல் இதனை உளசிகிச்சை குடியிருப்பு பயிற்சிக்கான பயிற்சி அமைப்பாக அங்கீகரித்தது. மேலும், 1977இல் நிறுவப்பட்ட ஜெர்மன் நேர்மறை உளசிகிச்சை சங்கம் (German Association for Positive Psychotherapy),உலகின் முதல் நேர்மறை உளசிகிச்சை தேசிய சங்கமாகியது.

1980களில் PPT தொடர்ந்து மேம்பட்டது. இந்த காலத்தில் "In Search of Meaning"(1983இல் ஜெர்மனில் வெளியிடப்பட்டது; 1985இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது) உள்ளிட்ட புத்தகங்கள் வெளிவந்தன. இளம் ஒத்துழைபாளர்களுடன் இணைந்து PPT முறையை அமைப்புசெய்வதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. 1988 இல் ஹாமித் பெஸெஷ்கியான் தனது PPT குறித்த ஆய்வுகக்கட்டுரை யை சமர்ப்பித்தார். இதுவே PPT பற்றிய முதல் முற்றிலும் தனிப்பட்ட ஆராய்ச்சி ஆகும். இதில் PPT-இல் முதன்மை நேர்காணலுக்கான அமைப்பில் ஒரு முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த முதல்நேர்காணலுக்காக ஒரு வினாத்தாள் உருவாக்கப்பட்டு, மனோஉந்துவிசை (psychodynamic) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. 1988இல் இந்த வினாத்தாள்  WIPPF (PPT வினாத்தாள்) உடன் சேர்த்து சிறிய மாற்றங்களுடன் வெளியிடப்பட்டது. இது மனோஉந்துவிசை உளசிகிச்சையின் பின் அமையக்கூடிய ஒரு அரை கட்டமைக்கப்பட்ட முதல்நேர்காணல் முறையின் ஆரம்ப முன்னோடியாகும்.[8][9]

1980களில், பெஸெஷ்கியான் ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள வளர்ந்து வரும் நாடுகளில் PPT தொடர்பான பட்டறைகளை நடத்தி வந்தார். இந்தக் காலகட்டத்தில் PPT தொடர்பான முக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. அவர் நிர்வாகப் பயிற்சி மற்றும் பயிற்சி கொடுத்தல் போன்ற துறைகளிலும் PPT-ஐ அறிமுகப்படுத்த முயற்சி செய்தார். இதன் மூலம் PPT-க்கு அந்த துறைகளிலும் ஆர்வம் உருவானது.

1990–2010

[தொகு]

இந்தக் காலகட்டத்தில், பெசெஷ்கியான் தனது இறுதி அடிப்படை படைப்பான "உளஉடல் மற்றும் நேர்மறை உளசிகிச்சை" என்ற புத்தகத்தை 1991-ஆம் ஆண்டு ஜெர்மனில் வெளியிட்டார்; பின்னர் இது 2013-ஆம் ஆண்டு ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த நூல், பல்வேறு உளவியல் மற்றும் உடல் சிக்கல்களை கடக்க ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் மனோ உந்துவிசை அணுகுமுறையை அறிமுகப்படுத்தியது.

1990களில் நடத்திய மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய அரசியல் மாற்றங்கள், 1980களிலேயே ஆரம்பித்திருந்த PPT-இன் சர்வதேச விரிவாக்கத்தை வேகமாக்கின. கிழக்கு ஐரோப்பிய பண்பாடுகள், கிழக்கு மற்றும் மேற்கு கலாசாரங்களுக்கு இடையில் ஒரு தனித்த உளவியல் நிலையைப் பெற்றிருந்தன, இதனால் PPT இங்கு மிகுந்த ஆர்வத்துடன் ஏற்கப்பட்டது. அறிவைப் பெறும் ஆர்வமும் ஒழுங்கான வேலை முறைகளும் கொண்டிருந்த கிழக்கு ஐரோப்பிய ஊழியர்கள், PPTவின் கருத்தரங்குகளை ஜெர்மனிக்கு வெளியிலும் அமைப்பதற்கும் முன்னெடுத்துச் செல்லவும் முக்கிய பங்கு வகித்தனர். 1990-க்குள், உலகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட PPT மையங்கள் நிறுவப்பட்டன; முதன்மையான மையம் ரஷ்யாவின் கசானில் அமைக்கப்பட்டது. புல்கேரியா (1993), ரோமேனியா (2004), மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் PPT க்கான முதன்மையான தேசிய சங்கங்கள் உருவாக்கப்பட்டன. PPT இன் இந்த சர்வதேச பரவல், 1996-ஆம் ஆண்டு ஜெர்மனியில் NGO-வாக பதிவு செய்யப்பட்ட உளசிகிச்சைக்கான சர்வதேச மையம் (International Center for Positive Psychotherapy) மூலம் மேலும் வலுப்பெற்றது. இது பின்னர் நேர்மறை உலக சங்கம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த உளசிகிச்சை(WAPP) என மாற்றப்பட்டது. இந்த வளர்ச்சிகள், 1990-ல் வியன்னாவில் உருவான உளசிகிச்சைக்கான தொழில்முறை மற்றும் சட்ட தரநிலை அமைத்த உளசிகிச்சையின் கிழக்கு சங்கம் (EAP) என்ற அமைப்புடன் ஒத்துழைக்கத் தொடங்கின.PPT பிரதிநிதிகள் EAP உருவாக்கப்பட்ட நாளிலிருந்தே அதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.[10]

ஜெர்மன் மொழிப் பேசும் நாடுகளில், 1994-ல் க்ளாஸ் கிராவே [11] வெளியிட்ட ஆய்வின் பின்னர், பல்வேறு உளசிகிச்சை முறைகளின் பயன்தன்மையைப் பற்றிய வாதம் உருவாயிற்று மற்றும் அந்த தொடர்ந்த விவாதம் உளசிகிச்சை சட்டங்களை கொண்டது. இதற்குப் பதிலாக, பெசெஷ்கியான் மற்றும் அவரது குழுவினர் PPT பற்றிய விரிவான பயன்தன்மை ஆய்வை நடத்தினர். இது 1997-ல் ரிச்சர்ட் மெர்டென் பரிசு பெற்றது. இந்த ஆய்வு PPT-இன் நடைமுறை பயன்தன்மையை உணர்த்தியதுடன், சான்றுகளின் அடிப்படையிலான சிகிச்சை முறைகள் (Evidence-based practice) அதிக முக்கியத்துவம் பெறும் காலகட்டத்துடன் ஒத்துப் போனது.[12]

1999-ல் PPT-இல் மேம்பட்ட படிப்புகளுக்கான சர்வதேச பாடத்திட்டம் வெளியிடப்பட்டது.இது வெவ்வேறு நாடுகளின் அனுபவங்களிலிருந்து பெறப்பட்டது.2000-ம் ஆண்டில் முதல் முறையாக வருடாந்திர சர்வதேச பயிற்சியின் தொடக்கவிழா  நடத்தப்பட்டது.PPT விரிவாக்கம் ஜெர்மனிக்குள் அதிகாரப்பூர்வமாகக் கொண்டுவரப்பட்டது. வைஸ்பேடன் உளசிகிச்சை கல்விக்கூடம் (Wiesbaden Academy for Psychotherapy - WIAP)[13] அரசாங்க அங்கீகாரம் பெற்றது, இதன் மூலம் மனோ உந்துவிசை உளசிகிச்சை துறையில் உளவியலாளர்களுக்கான பிந்தைய பட்டதாரி பயிற்சி மற்றும் குழந்தை மற்றும் இளம்பருவ சிகிச்சை துறையில் கல்வியியலாளர்கள் மற்றும் சமூக பணியாளர்களுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது.

1998-ல் நடைமுறையில் வந்த ஜெர்மன் உளசிகிச்சைசட்டம், PPT-இன் அடிப்படை மற்றும் மேம்பட்ட பயிற்சித் திட்டங்கள் மேலும் அமைப்புக்குள் வருவதற்கும் காரணமாக அமைந்தது.அதன் செல்வாக்கு ஜெர்மனியை கடந்தும் பரவியது.கிழக்கு ஐரோப்பாவில் நடைபெற்ற அடிப்படை நிலை PPT கருத்தரங்கங்கள் புதிய கருத்துகளை உருவாக்கவும் வழிவகுத்தன.

PPT ஆரம்பத்தில் இருந்த மருத்துவத்திற்கான சூழலைத் தாண்டி, பள்ளி மற்றும் பல்கலைக்கழகக் கல்வி, நிர்வாகப் பயிற்சி, மற்றும் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பயன்பாட்டைக் கண்டது[14][15]. PPT-இன் முதல் உலக மாநாடு 1997-ல் ரஷ்யாவின் St. Petersburg நகரத்தில் நடைபெற்றது; அதன்பின் ஒவ்வொரு 3–4 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடைபெறுகிறது. 2005-ம் ஆண்டில், போலிவியாவின் UTEPSA பல்கலைக்கழகத்தில் PPT இல் முதுநிலை பட்டம் வழங்கும் முதல் பட்டபடிப்பு நிறைவுபெற்றது. அதே ஆண்டில், மனிஜே மற்றும் நொஸ்ராத் பெசெஷ்கியான் இணைந்து Prof.-Peseschkian Foundation எனப்படும், International Academy of Positive and Transcultural Psychotherapy (IAPP)-ஐ நிறுவினர். இந்த நிறுவனம் PPT தொடர்பான சர்வதேச முயற்சிகளை ஒருங்கிணைக்கிறது மற்றும் நேர்மறை உளசிகிச்சையின் சர்வதேச ஆவணங்களை பராமரிக்கிறது.

2010 முதல்

[தொகு]

2010-ம் ஆண்டு PPT-இன் நிறுவுனராக இருந்த நொஸ்ராத் பெசெஷ்கியான் காலமானதுடன், PPT சமூகம் ஒரு புதிய கட்டத்துக்குள் நுழைந்தது.

1996ஆம் ஆண்டு நேர்மறை உளசிகிச் சைக்கான சர்வதேச மையமாக , நேர்மறை மற்றும் கலாசாரங்களுக்கு இடையேயான உளசிகிச்சைக்கான உலக சங்கம் (WAPP) நிறுவப்பட்டது. இது நேர்மறை உளசிகிச்சைக்கான உலகளாவிய கூட்டு அமைப்பு சங்கமாகும். WAPP-இல் தனிநபர் உறுப்பினர்கள், தேசிய சங்கங்கள், பயிற்சி நிறுவனங்கள், மையங்கள் மற்றும் தேசிய மற்றும் வட்டார நிலைகளில் பிரதிநிதி அலுவலகங்கள் அடங்கியுள்ளன. இதன் முதன்மை நோக்கம், உறுப்பினர்களுக்கும் நேர்மறை உளசிகிச்சையைப் பற்றி கற்க, நடைமுறைப்படுத்த, மற்றும் விளம்பரப்படுத்த விரும்பும் தனி நபர்களுக்கும் ஆதரவு அளிப்பதாகும். WAPP, ஜெர்மனியின் வீஸ்பாடனில் பதிவு செய்யப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற மற்றும் அரசுக்கு உட்பட்டதல்லாத(NGO) அமைப்பாகும். 2024ஆம் ஆண்டில், இது உலகளவில் 60 நாடுகளில் 2,600க்கும் மேற்பட்ட தனிநபர் உறுப்பினர்களைக் கொண்ட பெருமை பெற்றது.[16]

நேர்மறை உளசிகிச்சை, உளசிகிச்சைக்கான  ஐரோப்பிய  சங்கத்தால் (EAP) அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு சிகிச்சை முறை ஆகும். ஐரோப்பிய நேர்மறை உளசிகிச்சை மையங்களின் கூட்டமைப்பு (The European Federation of Centers for Positive Psychotherapy - EFCPP) என்பது ஐரோப்பில் செயல்படும் அமைப்பாகும். இது IAPP -கல்விகூடம் மூலம் EAP-யுடன் இணைந்து European Wide Organization (EWO), European Wide Accrediting Organization (EWAO) மற்றும் European Accredited Psychotherapy Training Institute (EAPTI) என்ற முறையில் சேவை செய்கிறது. EFCPP மூலம் பயிற்சி பெறும் ஆசான்கள் European Certificate of Psychotherapy (ECP) ஐ பெற முடியும்.[17]

நேர்மறை உளசிகிச்சை, அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரையாகும் (பதிவு எண்: 6,082,225).[18] 2016ஆம் ஆண்டில், இது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சுவிட்சர்லாந்திலும் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது.[19]

2024ஆம் ஆண்டுக்குள், நேர்மறை உளசிகிச்சை தேசிய சங்கங்கள் பல்கேரியா , ஜார்ஜியா, ஜெர்மனி, ரோமேனியா, கொசோவோ, உக்ரைன் மற்றும் எதியோப்பியா ஆகிய நாடுகளில் நிறுவப்பட்டது.[20] மேலும், PPT 50க்கும் மேற்பட்ட உள்ளூர் அல்லது வட்டார பயிற்சி மையங்கள் மூலமாக அர்மேனியா, ஆஸ்திரியா, பெலாரஸ், புல்கேரியா, சீனா, சைப்ரஸ், ஜார்ஜியா, ஜெர்மனி, கொசோவோ, லாட்வியா, வட மேஸிடோனியா, போலந்து, ரோமேனியா, ரஷ்யா, துருக்கி, உக்ரைன், மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் பரப்பப்படுகிறது. PPT குறித்த கருத்தரங்கங்கள் மற்றும் சொற்பொழிவுகள் உலகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்றடைந்துள்ளன. முக்கியமாக, PPT தற்போது  உளவியல் பாடத்திட்டங்கள் மற்றும் புல்கேரியா, ரஷ்யா, உக்ரைன், மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களின் உளசிகிச்சை நிகழ்ச்சிகள் ஆகியவற்றில்  சேர்க்கப்பட்டுள்ளது.[21]

கோட்பாடு

[தொகு]

முக்கிய பண்புகள்:

[தொகு]

PPT-யின் அடித்தளம், பிற சிகிச்சை முறைகளிலும் காணப்படும் அறிவியல் கோட்பாடுகளில் இருக்கிறது. எனினும்,பெசெஷ்கியான் அவர்களின் முறை, உள இயக்கவியல் (psychodynamic) மற்றும் மனிதமைய (humanistic) உளசிகிச்சை கோட்பாடுகள் ஆகியவற்றின் கூறுகளை இணைக்கிறது மற்றும் கலாசாரங்களுக்கு இடையேயான உளவியல் அணுகுமுறையை உருவாக்க பயிற்சி அளிக்கிறது. PPT மேலும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை (integrative approach) செயல்படுத்துகிறது, இது ஒருவரின்  தனிப்பட்ட தேவைகள், ஆரோக்கிய நலத்தை ஊக்குவிக்கும் கோட்பாடு (salutogenetic principles), குடும்ப சிகிச்சை, மற்றும் சுய உதவி கருவிகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்கிறது.[22]

PPT முறையின் முக்கிய அம்சங்கள்:

  • ஒருங்கிணைந்த உளவியல் சிகிச்சை முறை
  • மனிதமையமான உள இயக்கவியல் முறை
  • ஒருமித்த, ஒருங்கிணைந்த சிகிச்சை முறைமை
  • மோதல் அடிப்படையிலான குறுகிய கால சிகிச்சை முறை
  • கலாச்சாரத்தை உணரும் சிகிச்சை முறை .
  • கதைகள், வாழ்க்கை நிகழ்ச்சிக் குறிப்பு மற்றும் ஞானத்தின் பயன்பாடு
  • புதுமையான தலையீடுகள் மற்றும் நுட்பங்கள்
  • உளசிகிச்சை, பிற மருத்துவ பிரிவு, ஆலோசனை, கல்வி, வரும்முன் காப்பது, மேலாண்மை மற்றும் பயிற்சிகளில் பயன்பாடு

முக்கியக் கோட்பாடுகள் :

[தொகு]

நேர்மறை உளசிகிச்சையின் மூன்று முக்கியத் தூண்கள் (அல்லது கோட்பாடுகள்):[4]

  1. நம்பிக்கையின் கோட்பாடு : PRINCIPLE OF HOPE
  2. சமநிலையின் கோட்பாடு - PRINCIPLE OF BALANCE
  3. ஆலோசனையின் கோட்பாடு - PRINCIPLE OF CONSULTATION

நம்பிக்கையின் கோட்பாடு இந்த கோட்பாடு, ஒரு நோய் அல்லது உள்ளுணர்வு குழப்பத்திற்குப் பின்னுள்ள அர்த்தத்தையும் நோக்கத்தையும் நோயாளி புரிந்து கொள்ள உளவியலாளர் உதவ வேண்டும் எனக் கூறுகிறது. இதன் மூலம் அந்தக் கோளாறு நேர்மறையாக மறுவடிவமைக்கப்படுகிறது. இதனாலேயே ஒரு நேர்மறை பார்வை(Positive Interpretation) ஏற்படுகிறது.

(எடுத்துக்காட்டுகள்):

  • தூக்க தொந்தரவு என்பது குறைந்த நேரம் உறங்கியும்,விழிப்புடன் நிர்வகிக்கக்கூடிய திறனாகக் கருதப்படுகிறது.
  • மனச்சோர்வு என்பது, உள்ளுணர்வு முரண்பாடுகளுக்கு எதிராக ஆழமாக உணர்ந்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறனாகக் பார்க்கப்படுகிறது.
  • மனச்சிதைவு நோய்(schizophrenia) என்பது ஒரே நேரத்தில் இரண்டு உலகங்களில் வாழும் திறன் அல்லது கற்பனையின் விசித்திரமான உலகத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறது.

இந்த மாதிரியான நேர்மறை பார்வை நோயாளிக்கு மட்டுமல்ல அவரின் சுற்றுப்புறத்திற்கும் பார்வை மாற்றத்தை ஏற்படுத்தும். இவ்வாறு, நோய்கள் ஒரு சின்னத் தோற்ற (symbolic) செயல்பாட்டை வகிக்கின்றன என்பதை மனநல சிகிச்சையாளர் மற்றும் நோயாளி இருவரும் புரிந்துகொள்ள வேண்டும். நோயாளி, நோயின் அறிகுறிகளும் புகார்களும் தனது வாழ்க்கையின் நான்கு பரிமாணங்களிலும் சமநிலையை மீட்டெடுக்க ஒரு சைகையாக (signal) செயல்படுகின்றன என்பதைக் கற்றுக்கொள்கிறார்.

சமநிலையின் கோட்பாடு இந்த கோட்பாடு, சமுதாய மற்றும் கலாச்சார வேறுபாடுகள் இருந்தாலும், ஒவ்வொரு மனிதரும் தங்கள் பிரச்சனைகளை கையாளும்போது பொதுவான சமாளிக்கும் வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றனர் என்று கூறுகிறது. நொஸ்ராட் பெஸெஷ்கியான் உளசிகிச்சையின் சமநிலை மாதிரியுடன் இணைத்துள்ளார், இது வேறுபட்ட கலாச்சாரங்களில் உள்ள முரண்பாடுகளை தீர்க்க ஒரு மாற்றத்திற்குரிய மற்றும் சமகால அணுகுமுறையை அளிக்கிறது. இந்த மாதிரி நான்கு அடிப்படை பரிமாணங்களை சுட்டிக்காட்டுகிறது:

  1. உடல் / ஆரோக்கியம் – உளவியல் உடல் தொடர்பான பிரச்சனைகள்
  2. சாதனை / வேலை – மன அழுத்தத்திற்கு காரணமான கூறுகள்
  3. தொடர்பு / உறவுகள் – மனச்சோர்வுக்கான திறன் கொண்ட தூண்டல்கள்
  4. எதிர்காலம் / கற்பனை / வாழ்க்கையின் பொருள் – பயம் மற்றும் வழக்கத்திற்கு மாறான பயம்

இந்த நான்கு பரிமாணங்களும் ஒவ்வொரு மனிதரிலும் இயற்கையாகவே இருக்கின்றன. ஆனால் மேற்கு நாடுகள் உடல் நலம் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தும் போது, கிழக்கு நாடுகள் மனித உறவுகள், கற்பனை, எதிர்கால கனவுகள் ஆகியவற்றை அதிக முக்கியத்துவமாகக் கருதுகின்றன (நேர்மறை உளசிகிச்சையின் கலாச்சாரங்களுக்கு இடையேயான அம்சம்). கற்பனை இல்லாமை மற்றும் தொடர்பு குறைபாடு பல உளவியல் உடல் நோய்களுக்கு காரணமாக இருக்கலாம். ஒவ்வொருவரும் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான தனிப்பட்ட முறைகளை உருவாக்குகிறார்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட முறையை மட்டுமே பயன்படுத்தும் போது, மற்ற வழிகள் மறைக்கப்படக்கூடும்.

மோதல்களின் உள்ளடக்கங்கள் — நேர்த்தி, ஒழுங்கு, மரியாதை, நம்பிக்கை, நேரம், பொறுமை போன்றவை — முதன்மை மற்றும் இரண்டாம் நிலை திறன்களாக வகைப்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் அன்பு (Love ) மற்றும் அறிவு (knowledge) எனும் அடிப்படைகளில் வளர்ந்தவை. இது, ஃப்ராய்டின் Id, Ego  வேறுபாடாகக் கருதப்படுகிறது.

ஆலோசனையின் கோட்பாடு: சிகிச்சை மற்றும் சுய  உதவியின் ஐந்து கட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. இக்கட்டங்கள், நேர்மறை உளசிகிச்சையில் நெருக்கமாக பின்னிப் பிணைந்துள்ளது. இந்த கட்டங்களில், நோயாளி மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு நோயையும், அதற்கான தனிப்பட்ட தீர்வையும் பற்றிய ஒருங்கிணைந்த தகவல் வழங்கப்படுகிறது. அந்த ஐந்து கட்டங்கள் பின்வருமாறு:

  1. உற்று கவனித்தல் மற்றும் மனதளவில் விலகல் (Observation and Distancing): இந்த கட்டம்,ஒரு குறிப்பிட்ட அளவிற்கான உணர்ச்சிப் பிணைப்பில்லாத நிலையை பராமரிக்கும்போது, ஆசைகளையும் பிரச்சனைகளையும் உணரவும் வெளிப்படுத்தவும் உதவுகிறது.
  2. வாழ்க்கை நிகழ்வுகளை பட்டியலிடல் (Taking Inventory): கடந்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் நடந்த முக்கியமான வாழ்க்கை நிகழ்வுகளை சிந்தனை மூலமாக விமர்சித்து பார்வையிடும் கட்டமாகும்.
  3. சூழ்நிலை ஊக்குவிப்பு (Situational Encouragement): இந்த கட்டத்தில், சுயஉதவி மற்றும் உள்ளார்ந்த வளங்களை இயக்குவது முக்கியமானது. நோயாளி, கடந்த காலத்தில் வெற்றிகரமாக சிக்கல்களைத் தீர்த்த அனுபவங்களை நினைவுகூரும்படி ஊக்குவிக்கப்படுகிறார்.
  4. அகநிலை வெளிப்படுத்தல் (Verbalization): நோயாளியின் தகவல்தொடர்புத் திறன்களை வெளிப்படுத்த வலியுறுத்தும் கட்டமாகும். வாழ்க்கையின் நான்கு பரிமாணங்களுடன் தொடர்புடைய நிலுவையிலுள்ள முரண்பாடுகள்  மற்றும் பிரச்சனைகளை வெளிப்படுத்தவும் தெளிவாக பேசவும் அவர்களை செயல்பட வைக்கிறது
  5. இலக்குகளை விரிவுபடுத்தல் (Expansion of Goals): பிரச்சனைகள் தீர்க்கப்பட்ட பின், முன்னோக்கி சிந்திக்கும் நிலையை வளர்க்க இந்த கட்டம் உதவுகிறது. “உங்கள் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்த பிறகு என்ன செய்ய விரும்புகிறீர்கள்?” அல்லது “அடுத்த 5 ஆண்டுகளுக்கான உங்கள் இலக்குகள் என்ன?” போன்ற கேள்விகள் வழியாக நோயாளி ஊக்குவிக்கப்படுகிறார்.

இந்த ஐந்து கட்டங்களும் சிகிச்சை மற்றும் சுயஉதவிக்கான ஒரு முழுமையான அணுகுமுறையை உள்ளடக்கியவை. தனிநபரின் நலனின் பல்வேறு அம்சங்களை அணுகுவதற்கும், அவர்களின் சுயவளர்ச்சி மற்றும் எதிர்கால இலக்குகளை ஊக்குவிப்பதற்கும் ஒரு கட்டமைப்பை வழங்குகின்றன.

ஆதாரக்கோட்பாடாக நேர்மறை உளசிகிச்சை

[தொகு]

பெசெஷ்கியானின் முதல் கட்ட இலக்கு இரண்டு மடங்காக இருந்தது: ஒன்று, நோயாளிகள் எளிதாகப் புரிந்து கொண்டு பயன்படுத்தக்கூடிய ஒரு முறையை உருவாக்குவது; மற்றொன்று, நேர்மறை உளசிகிச்சையை வெவ்வேறு உளசிகிச்சை பள்ளிகளுக்கிடையிலான ஒரு பாலமாக வழங்குவது. 1977-ஆம் ஆண்டு ஜெர்மனில் மற்றும் 1987-ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அவரது நேர்மறை உளசிகிச்சை  எனும் புத்தகத்தில், இந்த சவாலுக்கென்று முழுமையான ஒரு அத்தியாயத்தை “Positive Psychotherapy and Other Psychotherapies” (பக்கம் 365–400) எனும் தலைப்பில் அவர் அர்ப்பணித்திருந்தார். அந்த அத்தியாயமே அந்த புத்தகம் முழுவதிலும் மிகவும் கடினமானதும், அதிக உழைப்புடன் எழுதப்பட்டது என அவர் கருதியுள்ளார்.[23]

நேர்மறை உளசிகிச்சையை வெறும் ஒரு உள சிகிச்சை முறையாக மட்டும் பார்க்கக் கூடாது என்றும், இது ஒரு முழுமையான வடிவமைப்பை வழங்குகிறது என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த வடிவமைப்பு, குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு சரியான உளவியல் முறைகளைத் தேர்ந்தெடுக்கவும், அவற்றுக்கிடையே மாற்றங்களை ஏற்படுத்தவும் உதவுகிறது. சுருக்கமாகச் சொன்னால், நேர்மறை உளசிகிச்சை ஒரு உளசிகிச்சையின் ஆதாரக்கோட்பாட்டை குறித்துக்காட்டுகிறது. இது உளசிகிச்சையை வெறும் ஒரு குறிப்பிட்ட அறிகுறி தன்மைக்கான  நிலையான முறையாக அல்லாமல், பரந்த சமூகம்,கலாச்சாரங்களுக்கு இடையேயான மற்றும் அவை செயல்படும் சமூக சூழல் ஆகியவற்றுக்கு மறுமொழியாகவும்  பார்க்கிறது.

மேலும், நேர்மறை உளசிகிச்சை என்பது குறுகிய தன்மை உடையதும், தனி முறையிலானதும் அல்ல என்று பெசெஷ்கியான் வலியுறுத்துகிறார். அதற்குப் பதிலாக, இது பல்வேறு உளசிகிச்சை முறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. இதில் உளவியல் பகுப்பாய்வு, உள இயக்கவியல், நடத்தை சிகிச்சை, குழு சிகிச்சை,  அறிதுயில் நிலை மூலம் நோய் தீர்க்கும் சிகிச்சை, மருந்து சார்ந்த சிகிச்சை மற்றும் உடல் சிகிச்சை போன்ற பல்வேறு அணுகுமுறைகள் தழுவப்படுகின்றன. எனவே, நேர்மறை உளச்சிகிச்சை என்பது சிகிச்சையின் பல பரிமாணங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த முறையாகவே பார்க்கப்படலாம்.

இதற்குப் பிறகு இரு தசாப்தங்கள் கடந்த பின்பு, சுவிட்சர்லாந்தில் உள்ள க்லாஸ் கிராவே மற்றும் அவரது சக ஊழியர்கள் பல்வேறு உளச்சிகிச்சை முறைகளின் செயல்திறனைப் பற்றிய ஒரு ஆதார பகுப்பாய்வை வெளியிட்டு, மரபுவழி உள சிகிச்சை பள்ளிகளை மீறி/அப்பால் செல்லக்கூடிய ஒரு பொது முறைதான் தேவை என்று முன்மொழிந்தனர்[23]. அமெரிக்காவில், ஜெரோம் ஃபிராங்க் ஒருங்கிணைந்த உளசிகிச்சைக்கு ஒரு திட்டத்தை வெளியிட்டார், ஆனால் இது சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் பரவலாக ஏற்கப்படவில்லை.[24]

அந்த காலத்திலிருந்து அதிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட , தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த உளசிகிச்சை இயக்கங்கள், தன் முக்கிய இலக்கை விலக்கி வைத்துவிட்டு, பெரும்பாலும் வெவ்வேறு உளசிகிச்சை பள்ளிகளில் இருந்து தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் புறசெயல்பாடு மட்டுமே செய்துள்ளன.[25][26]

இன்றைக்கு, சிகிச்சையாளர் மற்றும் நோயாளிக்கிடையிலான நம்பிக்கை உறவுத் தொடர்பு, உணர்வுபூர்வமான புரிதல், எதிர்பார்ப்பு, பண்பாடு ஏற்புடையதன்மை, மற்றும் சிகிச்சையாளர் தனிப்பட்ட குணாதிசயங்கள் ஆகியவைகளே குறிப்பிட்ட உளவியல் முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களைவிட, அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்கிற கருத்து உருவாகியுள்ளது.

நேர்மறை அணுகுமுறை

[தொகு]

நேர்மறை உளசிகிச்சை என்பது, இருக்கும் சிக்கல்களை நீக்குவது மட்டுமின்றி, ஏற்கனவே உள்ள திறன்கள் மற்றும் சுயஉதவிக்கான சாத்தியங்களை எழுப்புவதை வலியுறுத்துகிறது. இந்த சிகிச்சை, ஒருவரின் வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் திறன்களிலிருந்து துவங்குகிறது[4]. இது ஆபிரகாம் மாஸ்லோ[27] -வின் அணுகுமுறையைப் பின்பற்றுகிறது, அவர் மக்களில் உள்ள நேர்மறையான குணங்களை மையமாகக் கொண்டு ஆராய்வதற்காக "நேர்மறை உளவியல்"[28]  என்ற சொல்லை உருவாக்கினார். இன்றைய மனநோய் அறிகுறிகள் மற்றும் மனநோய்கள்,முரண்பாடுகளுக்கு எதிர்வினையாகவே பார்க்கப்படுகின்றன. இந்த சிகிச்சை "நேர்மறை" எனப்படுவது, ஏனெனில் , நோயின் உருவாக்கமும் (pathogenesis), மகிழ்ச்சி, திறன்கள், வளங்கள், சாத்தியங்கள் கொண்ட நல (ஆரோக்கிய) உருவாக்கமும் (salutogenesis) கொண்ட  இதில் பங்கேற்கும் தனி மனிதர்களின் முழுமையை அடையாளம் கொள்கிறது (Jork K, Peseschkian N.,[29] p. 13).

“நேர்மறை உளசிகிச்சை” எனும் சொல்லில் உள்ள “நேர்மறை” என்பது மக்ஸ் வெபர் (1988) கூறிய "நேர்மறை அறிவியல்கள்" என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. அதாவது, கவனிக்கப்பட்ட நிகழ்வை எந்தவொரு தீர்ப்பும் இன்றி கொடுக்கும் விளக்கம். நோஸ்ரட் பெசஷ்கியான் “positum” என்ற சொல்லை விரிவாகப் பயன்படுத்துகிறார், அது “இருப்பவை”, “கொடுக்கப்பட்டவை” அல்லது “உண்மை” என்பதைக் குறிக்கும். ஒரு நோயின் நேர்மறை அம்சமும், அதன் எதிர்மறை அம்சம் போன்று, அதை உணரவும், மருத்துவ சிகிச்சை அளிக்கவும் முக்கியமாகும். இந்த சிகிச்சை ஏற்கனவே உள்ள திறமைகள் மற்றும் சுய உதவிக்கான திறனை அணிதிரட்டுகிறது. இது மனிதர்களை  “அறிகுறி மூட்டையாக” (bag of symptoms) கருதுவதற்கு மாறாக, வளர்ச்சிக்கான சாத்தியங்கள் மற்றும் திறன்களுடன் கூடிய முழுமையான தனி மனிதர்களாகவே பார்க்கிறது. பெசஷ்கியானின் கூற்றுப்படி, மனநோய் அறிகுறிகள் மற்றும் மனநோய்கள் முரண்பாடுகளுக்கு எதிர்வினையாகவே உள்ளன.இந்த சிகிச்சை "நேர்மறை" எனப்படுவது,ஏனெனில் இது மேலே குறிப்பிட்டது போல தனி மனிதர்களின் முழுமையை அடையாளம் கொள்கிறது.[30]

நேர்மறை உளசிகிச்சையின் கருத்து என்பது மனித இயல்பினுடைய மனிதமையம் அடிப்படையில் அணுகுகிறது[31]. இது மனிதர்களில் உள்ள இயல்பான நன்மையும், திறன்களையும் வலியுறுத்துகிறது[32]. PPT-யின் கூற்றுப்படி, மனிதர்களுக்கு இரண்டு அடிப்படை திறன்கள் உள்ளன: அன்பு கொடுக்கவும், அறிவு பெறவும், கல்வி மற்றும் சொந்த வளர்ச்சி மூலம், இத்திறன்கள்  மற்றும் தனித்துவமான குணநலன்களை வளர்த்தல்  முடியும். இந்தக் கோணத்தில், சிகிச்சை என்பது நோயாளி மற்றும் அவரது குடும்பத்திற்கான வளர்ச்சி மற்றும் கல்விக்கான ஒரு கருவியாகக் காணப்படுகிறது.

நேர்மறை உளசிகிச்சையில், மனநோய்கள் கூட நேர்மறை பார்வையில் மறுவடிவமைக்கப்படுகின்றன. உதாரனமாக மனச்சோர்வு – முரண்பாடுகளுக்கு ஆழமான உணர்வுகளுடன் எதிர்வினை காட்டும் திறனாக பார்க்கப்படுகிறது. தனிமைக்கான பயம் – மற்றவர்களுடன் இருப்பதற்கான விருப்பமாக பார்க்கப்படுகிறது. மதுவிலக்கு – பிறரிடமிருந்து கிடைக்காத அன்பைத் தானாகவே வழங்கிக் கொள்ளும் திறனாக மறுவிளக்கம் அளிக்கப்படுகிறது. மனப்பிறழ்வு (psychosis) – ஒரே நேரத்தில் இரண்டு உலகங்களில் வாழும் திறனாக கருதப்படுகிறது. இதயநோய் – ஒரு விஷயத்தை மிகவும் நெருக்கமாக இருதயத்தில் வைத்திருக்கும் திறனாக பார்க்கப்படுகிறது.[33]

இந்த நேர்மறை அணுகுமுறையால், நோயாளி, அவரது குடும்பம் மற்றும் மருத்துவர்/சிகிச்சையாளர் ஆகியோருக்குள் பார்வை மாற்றம் ஏற்படுகிறது[34]. மனநோய் அறிகுறி மீது மட்டும் கவனம் செலுத்தாமல், அதன் பின் உள்ள முரண்பாட்டின் அடிப்படைகளை அடையாளம் காண முடிகிறது. மேலும், சில நேரங்களில், "உண்மையான நோயாளி"[35] சிகிச்சைக்காக வந்தவர் அல்ல, அவரின் சமூக சூழலிலுள்ள வேறு ஒருவர் ஆக இருக்க வாய்ப்பு உள்ளது. நோய்களை நேர்மறையாக விளக்கும் இந்த அணுகுமுறை, நோயாளிகள் தங்களை சுற்றியுள்ளவர்கள் மற்றும் தங்கள் நோயின் உள இயக்கவியல் மற்றும் செயல்பாட்டு முக்கியத்துவத்தை புரிந்துகொள்வதற்கு உதவுகிறது. அதேபோல், அவர்கள் மனநோய்களை மட்டும் பார்ப்பதற்கு மாறாக, தங்களின் திறன்களையும் வளங்களையும் புரிந்துகொள்வதை ஊக்குவிக்கிறது.

அடிப்படை மற்றும் உண்மையான திறன்கள்

[தொகு]

மன உளைச்சல் மற்றும் மனநோய்களுக்கு வழிவகுக்கும் தினசரி வாழ்க்கையின் முரண்பாடுகள் உள்ளார்ந்த  முரண்பாடுகள் பெரும்பாலும் உண்மையான  மதிப்புமிக்க தீர்ப்புடன் தொடர்புடையவை. அவைகளுக்குப் பின்னால், காதல், நீதி  ஒழுங்கு, நம்பிக்கை அல்லது பொறுமை போன்ற மதிப்பீடுகள் உள்ளன.இவை, நேர்மறை உளசிகிச்சையில் “உண்மையான திறன்கள்” என்று அழைக்கப்படுகின்றன. நடைமுறை நடத்தை, மதிப்பீடுகள், நற்பண்புகள் மற்றும் முரண்பாடான எண்ணங்கள், எல்லா கலாச்சாரங்களிலும் காணப்படும் உண்மையான உள்ளார்ந்த திறன்களின் குறிப்பிட்ட கருத்துக்களுடன் தொடர்புடையவை. ஒவ்வொரு மனிதரும், தன் வாழ்நாளில் கற்றுக் கொண்டு வளர்த்துக்கொண்ட ஒரு கருத்துக்கு, தனித்துவமான முறையில் எதிர்வினை அளிக்கிறார்கள். அந்த கருத்து, அவரின் தனிப்பட்ட அனுபவங்களால் ஆழமாக பதியப்பட்டதோடு, கலாச்சாரம் மற்றும் கல்வியின் மூலம் பரம்பரையாக வந்த ஒரு மாதிரியாகவும் உருவாகியுள்ளது. உதாரணத்திற்கு, நேர்த்தி அல்லது நம்பிக்கை போன்றவை ஒரே சூழ்நிலையிலும் இரண்டு மனிதர்களால் வெவ்வேறு வகையில் அணுகப்படலாம். நேர்த்தி அல்லது நம்பிக்கை போன்ற செயல்பாட்டிலுள்ள நிகழ்கால திறன்களைப் பற்றிய மாறுபட்ட கருத்துகள்,முரண்பாடுகளை உருவாக்கி, அவை மன உளைச்சலுக்கும்  சில நேரங்களில் உடல் எதிர்வினைகளுக்கும் வழிவகுக்கும்.கருத்துகளுக்கான வெவ்வேறு மதிப்பீடுகள், மாறுபட்ட கலாச்சாரம் மற்றும் குடும்பக் கருத்துக்களிலிருந்து தோன்றுகின்றன. தொடர்பு, சாதனை அல்லது நீதி போன்றவற்றுடன் ஒப்பிடும் போது, நேர்த்தி அல்லது நம்பிக்கைக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடுகிறது. இது முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடியதாய் இருக்கலாம், ஆனால் அதே நேரத்தில் பரிமாற்றம், கற்றல் மற்றும் ஒருவரது கருத்துக்களை விரிவுபடுத்துவதற்கும் வழிவகுக்கும். 1977 ஆம் ஆண்டு, நஸ்ரத் பேசெஷ்கியான் "உண்மையான திறன்கள்" என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார்.[36]

பெசெஷ்கியான் வரையறைப்படி, ஒவ்வொரு நபரும் இரண்டு அடிப்படை திறன்களைக் கொண்டிருப்பார்:

  1. அன்பு செலுத்தும் திறன் – இது உணர்ச்சி சார்ந்த தேவைகளாக, முதன்மை திறன்கள் மூலமாக வெளிப்படுகிறது. பின்வரும் முதன்மை உண்மையான உள்ளார்ந்த திறன்களில் தெரிகிறது: பொறுமை,நேரம், நம்பிக்கை.
  2. அறிந்து கொள்வதற்கான திறன் – இது சமூக ஒழுக்கநெறிகளாக, இரண்டாம் நிலை உண்மையான திறன்கள் மூலம் வளர்கிறது. இத்திறன் பின்வரும் இரண்டாம் நிலை உண்மையான திறன்களில் தெரிகிறது: நேர்த்தி,தூய்மை,ஒழுங்கு.

நாம் நமது அனுபவங்களை, அறிந்து கொள்ளும் திறனின் உதவியுடன் அமைக்கிறோம்... இதில் கற்றுக்கொள்ளும் திறன் (அனுபவங்களை சேர்த்தெடுத்தல்) மற்றும் கற்றுத் தரும் திறன் (அனுபவங்களை பிறருடன் பகிர்தல்) அடங்கியுள்ளது.[37]

உண்மையான திறன்கள்:
முதன்மை உண்மையான திறன்கள் (அன்பு செலுத்தும் திறன்) இரண்டாம் நிலை உண்மையான திறன்கள் (அறிந்து கொள்வதற்கான திறன்)
காதல்/ஏற்றுக்கொள்ளல் நேர்த்தி
மாதிரியாக்கம் (மாடலிங்) தூய்மை
பொறுமை ஒழுங்கு
நேரம் கீழ்படிதல்/ஒழுக்கம்
தொடர்பு மரியாதை/சரியான நடத்தை
பாலியல்/மென்மை திறந்த மனம்/நேர்மை
நம்பிக்கை உண்மைத்தன்மை
திடநம்பிக்கை நீதியுணர்வு
விசுவாசம் சிக்கனம்
சந்தேகம் நம்பகத்தன்மை
உறுதி துல்லியம்
ஒற்றுமை மனசாட்சி
எதிர்பார்ப்பு விடாமுயற்சி/சாதனை
உணர்ச்சித் தேவைகள் மற்றும் உறவுகளுக்கான திறனை உருவாக்கும் (மாதிரியாக்கம் மூலம் அடையப்படுகிறது) சமூக ஒழுக்கம் மற்றும் உறவுகளின் வடிவமைப்பு (கல்வியின் மூலம் உருவாகிறது)

பெசெஷ்கியன் உருவாக்கிய "வேறுபாட்டுப் பகுப்பாய்வு கோட்பாடு" ([38] p. 25) எனும் முறை, அந்நேரத்தில் நிலவிய உளவியல் பகுப்பாய்வு அணுகுமுறையை பூர்த்தி செய்வதாக இருந்தது. உளவியல் பகுப்பாய்வு அணுகுமுறை அக்காலத்தில் உளவியல் பாலின கட்டங்களை (உதாரணத்திற்கு: வாய்வழி, மலவழி,எதிர்பாலின பெற்றோருடன் பாலியல் ஈர்ப்பு(oedipal)) மற்றும் தன்னாட்சி வளர்ச்சி மற்றும் இயல்பான உள்ளுணர்வு (id) மற்றும் சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட நீதிகள் (super-ego) இடையிலான முரண்களை பற்றியதாக இருந்தது. வேறுபாட்டு பகுப்பாய்வு, தொடக்க கட்டங்களில் எந்த குறிப்பிட்ட உள்ளடக்கங்கள் எழுகின்றன என்பதை கேட்கிறது: பெற்றோர்களின் பொறுமை, நம்பிக்கையின் வளர்ச்சி, நிபந்தனை இல்லாத ஏற்றுக்கொள்ளலில்  அன்பின் அனுபவம் ஆகியவை வாய்மூலக் கட்டத்தில் வெற்றிகரமான வளர்ச்சிக்கான, வளர்ச்சி உளவியல் முன்நிபந்தனைகளாகும். "முதன்மை" எனப்படும் இத்திறன்கள் பெற்றோரின் நேரடி நடத்தையும் அவர்களது நடத்தை மாதிரியாக இருப்பதாலும் குழந்தையின் மனதில் பதியப்படுகின்றன. உதாரணமாக, முதன்மை திறனாகிய பொறுமை(தன்னிடம் அல்லது பிறரிடம்), நம்பிக்கை(தன்னிடம் , மற்றவர்களிடம் அல்லது விதியில்) மற்றும் நேரம் (கொடுப்பதும் பெறுவதும்), இவை அனைத்தும் ஒரு புதிதாகப் பிறந்த குழந்தையின் உள வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படைத் தேவைகள். ஒரு குழந்தைக்கு வெப்பம், நேரம், பொறுமை, மற்றும் அனுதாபமான, நிபந்தனையற்று ஏற்றுக்கொள்வது அவருடைய வயதிற்கு ஏற்ப உள்ளடக்க சமநிலை உருவாக அவசியமாகிறது.[39]

முதல் தொடர்புடைய மனிதருடன் உள்ள முதன்மை உண்மையான திறன்கள், தன்னுடன் தொடர்பு கொள்ளவும், தன்னுடன் அமைதியாக இருக்கவும், தன்னை உணரவும், தன்னையும் உலகத்தையும் பற்றிய விழிப்புணர்வை வளர்க்கவும், இறுதியாக உள் மற்றும் வெளிப்புற முரண்பாடுகளை சிறப்பாகக் கையாளவும் சாத்தியமாக்குகின்றன. “பொறுமை” என்ற முதன்மை திறன் என்பது பொருத்தமான உந்துதல்களை கட்டுப்படுத்தும் முன் நிபந்தனையாகும், “நம்பிக்கை” என்ற திறன் என்பது உளநிலை ஆதரவு, கதகதப்பு மற்றும் பாதுகாப்பு உணர்வுக்காக தேவையாகும். தாயிடமிருந்து பெறும் அறியாத, ஆனால் அன்புமிக்க ஏற்றுக்கொள்ளல், அல்லது நேரமுள்ள, பொறுமையுள்ள பாட்டி, அல்லது தந்தையின் உள்நிலைப் பரிச்சயமான உருவம், அதாவது குழந்தை முழுமையாக நம்பிக்கை வைத்து, தன்னை அவர் அரவணைப்பில் விழ அனுமதிக்கவும், தானாகவே இன்னும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியாததை அவரிடம் நம்பிக்கையுடன் பகிர்ந்து கொள்ளவும் முடிந்த நிலை ஆகியவை எவ்வளவு முக்கியமானது![40]

இரண்டாம் உண்மையான திறன்களான நேர்த்தி, மரியாதை, வெளிப்படைத்தன்மை, நீதிநிலை, உண்மைத்தன்மை போன்றவை முரண்பாடுகள் மற்றும் தவறான புரிதல்களைக் தீர்ப்பதில் சமூக விதிமுறைகளைப் போல பங்கு வகிக்கின்றன. "ஒழுங்கு" என்பது மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும், தம்பதிகளுக்கும் இடையில் பெரும்பாலும் தோன்றும் முரண்பாட்டின் உள்ளடக்கம். "நீதி" எனும் இரண்டாம் நிலை திறன், அநீதியை எதிர்கொள்வது, அதை மீண்டும் மீண்டும் சமன் செய்வது, அன்பாக ஏற்றுக்கொள்வது, புரிந்து கொள்ள நேரம் செலுத்துவது, பொறுமையாக இருப்பது என்பதை குறிக்கும். "கீழ்படியும் தன்மை" என்பது ஒழுக்கத்தின் வெளிப்பாடாக இருப்பினும்,ஜெர்மனியில் ஜனநாயக சூழலில் வரலாற்றுப் பின்னணியால் பெரிதாக மதிக்கப்படாததால், இது பொதுவாக வாழ்வின் உண்மையாக  ஏற்றுக்கொள்ளப்பட்டது,பள்ளிகளில் கட்டமைப்பாக பார்க்கப்படுகிறது. இது ஒழுங்குகளுக்கு கீழ்ப்படியும் தேவைக்காக, முடிவெடுக்கும் உள்ளார்ந்த விடுதலையை ஒதுக்கி வைக்கிறது. இது கல்வி முறைகளில் அடிக்கடி தோன்றும் முரண்பாடுகளுள் ஒன்றாக இருக்கிறது. உளவியல் சிகிச்சையில், குற்ற உணர்வு முரண்பாடுகளை  தூண்டுவது போன்ற மதத்தை அடிப்படையாகக் கொண்ட சூழ்நிலைகளில், சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட நீதிகளுடைய (superego) முரண்பாடுகள் மிகவும் தெளிவாக வெளிப்படுகின்றன.

கலாசாரங்களுக்கு இடையேயான பார்வையிலிருந்து பார்க்கும்பொழுது, கிழக்கத்திய கலாச்சாரங்களில், ,  அன்பு, நம்பிக்கை   மற்றும் தொடர்பு போன்ற முதன்மை திறன்கள் மிகவும் மதிக்கப்படுகின்றன. மேற்கத்திய நாடுகளில் ஒழுங்கு, நேர்த்தி மற்றும் தூய்மை போன்ற இரண்டாம் நிலை திறன்கள் அதிகமாக வலியுறுத்தப்படுகின்றன. குழந்தை பருவத்திலேயே இதற்கான வலியுறுத்தல்கள் தொடங்குகின்றன—உதாரணமாக, உணவு நேரங்கள் திட்டமிடப்பட்டிருப்பதும், முக்கிய உணவிற்கு நேரம் கட்டாயமாக நிர்ணயிக்கப்படுவதும் போன்றவை. இத்தகைய வேறுபாடுகள் பல சந்தர்ப்பங்களில் தவறான புரிதல்கள், முரண்பாடுகள் மற்றும் மதிப்பீடுகளுக்கு வழிவகுக்கின்றன.

நேர்மறை உளசிகிச்சை, இந்த முரண்பாடுகளின் உள்ளடக்கங்களை உணர்ச்சிகளுக்கான தூண்டுதல்களாக ஆராய்கிறது. சிகிச்சையின் போது, வெளிப்புற மற்றும் உள்ளார்ந்த முரண்பாடுகள் அல்லது மதிப்புகள் மற்றும் இந்த முரண்பாடுகளின் உள்ளடக்கங்களாக இருக்கும் திறன்கள் மீது கவனம் செலுத்தப்படுகிறது. எதிர்மறையான கருத்துக்களின் முரண்பாட்டினால்தான், துன்பம் மற்றும் உடல் அறிகுறிகள் ஏற்படுத்தக்கூடிய உணர்ச்சிகள் செயல்படுகின்றன என்று புரிகிறது. இந்த தொடர்பில், முரண்பாட்டை மையமாக கொண்ட செயல்முறை அவற்றை அடையாளம் காண்பதைகாட்டிலும் தூண்டுதலுக்கு காரணமானதில் குறைவாக கவனம் செலுத்துகிறது. அதற்கு பிறகு அவற்றிற்கு காரணமான முரண்பாட்டின் மூலம் வேலை செய்கிறது.[6]

பன்மயகலாச்சார அணுகுமுறை

[தொகு]

நொஸ்ராட் பெசெஷ்கியனின் முதல் கவனம் பன்மயகலாச்சார கோணத்தை உளவியல் சிகிச்சையில் ஒருங்கிணைத்தல் மட்டுமல்லாமல் சமூக-அரசியல் முக்கியத்துவத்தையும் கொண்டிருந்தது. நேர்மறை உளசிகிச்சையில், பெசெஷ்கியன் பன்மயகலாச்சார அணுகுமுறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார், ஏனெனில் இது அவருடைய சிகிச்சை முறையின் முழுவதும் வரும் தொடர் கருத்து ஆகும். இந்த அணுகுமுறை, தனிமனித முரண்பாடுகளை புரிந்து கொள்ளும் வகையில் மதிப்பு வாய்ந்த உட்பார்வைகளையும், முக்கியமான சமூக தாக்கத்தையும் கொண்டுள்ளது. குடியேறுதல், வளர்ச்சி உதவி, பல்வேறு கலாச்சாரத்தை சேர்ந்த தனி மனிதர்களுடன் தொடர்பு கொள்ளுதல், பன்மயகலாச்சார திருமணங்கள்,  பாகுபாட்டை எதிர்கொள்வது, வேறுபட்ட கலாச்சாரங்களில் இருந்து வந்த மாற்று மாதிரிகள், மற்றும் பன்மயகலாச்சார சூழ்நிலைகளில் இருந்து தோன்றும் அரசியல் சவால்கள் போன்ற பிரச்சனைகள் அனைத்தையும் இந்த அணுகுமுறையின் மூலம் அணுக முடியும்.[41]

நேர்மறை உளசிகிச்சையில், கலாச்சார உண்மைகள் உள்ளடக்கப்பட்டதும், ஒவ்வொரு சிகிச்சையின் இயல்பான தனித்துவத்தை அங்கீகரித்ததன் மூலமாக, அதன் பயன்பாடுகள் பரவலாக விரிந்துள்ளன. இது பன்முக நாடுகளின் சமூகங்களில் பயனுள்ள முறையாக உருவெடுத்துள்ளது.[14]

PPT தற்போது 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் உளவியல் நிபுணர்களால் கற்றுக்கொள்ளப்பட்டும், நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகிறது. எனவே இது பன்மய கலாச்சார உளவியல் சிகிச்சைக்கான ஒரு அணுகுமுறையாக கருதப்படலாம். அதனால், நேர்மறை உளசிகிச்சையின் கொள்கைகள், பன்மயகலாச்சார உளவியல் சிகிச்சை என்ற துறையை வரையறுக்கவும் கட்டமைக்கவும் அடித்தளமாக விளங்குகின்றன; இத்துறை உளவியல் கல்வி, தொடர்ந்து கல்வி பெறும் பயிற்சிகள் மற்றும் புதிய உளவியல் சிகிச்சைத் துறைகளை அங்கீகரித்து ஏற்பதற்கு அத்தியாவசியமானதாகும்.

"பன்மயகலாச்சாரம்" (Transcultural) என்ற சொல் நேர்மறை உளசிகிச்சையில் இரண்டு விதமாக புரிந்து கொள்ளப்படுகிறது:

  1. இது, வேறுபட்ட கலாச்சாரப் பின்னணியிலிருந்து வரும் நோயாளிகளின் தனித்துவமான அம்சங்களை அங்கீகரிப்பதைக் குறிக்கிறது. இதேசமயம், இது "கலாச்சாரங்களுக்கு இடையேயான" அல்லது "புலம் பெயர்ந்த உளசிகிச்சை" (Migrant Psychotherapy) என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
  2. இது, ஒவ்வொரு சிகிச்சை உறவிலும் கலாச்சார காரணிகளைப் பரிசீலிக்க வேண்டும் என்பதையும், அதன் மூலம் சிகிச்சையாளரின் திறன்களை விரிவுபடுத்தி, சமூக-அரசியல் விழிப்புணர்வை மேம்படுத்த வேண்டும் என்பதையும் குறிக்கிறது.

நேர்மறை உளசிகிச்சை என்பது, “பல்வேறு தன்மைகளில் ஒற்றுமை” என்ற கருத்தினைப் பின்பற்றும், கலாச்சார உணர்திறன் முறையாகும். இது மேற்கத்திய "உளவியல் குடியேற்றம்" ஆக பார்க்கப்படக்கூடாது.[42] நொஸ்ராட் பெசெஷ்கியன், நேர்மறை உளசிகிச்சையின் சமூக அம்சத்தின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துகிறார். இது  குழுக்கள்,மக்கள், சமூகங்கள், நாடுகள் மற்றும் கலாச்சாரக் குழுக்களுக்கிடையேயான வேறுபட்ட சமூக உறவுகளில் பரவலாக பயன்படுத்தக் கூடியதாகும். இதன் மூலம், தொடர்பு சவால்கள், மனித திறன்கள் மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் ஆகியவற்றை கவனித்து ஒரு முழுமையான சமூகக் கோட்பாட்டை நிறுவலாம். பன்மயகலாச்சார உளவியல் சிகிச்சை என்பது வெறும் கலாச்சாரங்களை ஒப்பிட்டு பார்ப்பதல்ல, ஆனால் மனித நடத்தையின் கலாச்சார பரிமாணங்களைக் கவனிக்கும் ஒரு விரிவான கருத்தாகும். இது, மனிதர்கள் எவ்வாறு வேறுபடுகிறார்கள் மற்றும் அவர்கள் எதில் ஒற்றுமையைக் கொண்டுள்ளனர் என்பதைக் கண்டறிய முயல்கிறது. நேர்மறை உளசிகிச்சை, நோயாளிகள் தங்களுடைய நடத்தையின் சொந்த திறன்களை விரிவாக்கவும், தங்கள் கண்ணோட்டங்களை உறவுபடுத்தவும் , பிற கலாச்சாரங்களில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட கதைகள், சமூக சட்டங்கள், மற்றும் சமநிலை மாதிரிகள் போன்ற கருவிகளைப் பயன்படுத்துகிறது.இவை பன்மயகலாச்சார கண்ணோட்டதை ஊக்குவிக்க பயன்படுகிறது.[43]

1979ஆம் ஆண்டு, பெசெஷ்கியன் “பன்மயகலாச்சார உளசிகிச்சை" என்ற சொல்லைப் பயன்படுத்தினார் மற்றும் அவருடைய “வியாபாரியும் கிளியும்" (The Merchant and the Parrot): உளசிகிச்சையில் கிழக்கத்திய கதைகள் (Oriental Stories in Positive Psychotherapy) என்ற புத்தகத்தில் ஒரு அதிகாரத்தை இதற்கெனவே அர்பணித்திருந்தார். அவர் நம்பியது: பன்மயகலாச்சார சிக்கல்களுக்கு தீர்வுகாண்பது எதிர்காலத்தின் முக்கியமான பணிகளில் ஒன்றாக இருக்கும், ஏனெனில் தனிப்பட்ட வாழ்க்கை, வேலை மற்றும் அரசியலில் இத்தகைய சிக்கல்களின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. பன்மயகலாச்சார சிக்கல்களின் கொள்கை என்பது, மனிதர்களுக்கிடையேயான உறவுகளையும், அவர்களது உள் முரண்பாடுகளை கையாள்வதற்கான முறையையும் வரையறுக்கும் முக்கியக் கொள்கையாக மாறுகிறது. இவ்வாறு, இது உளவியல் சிகிச்சையின் முக்கியப் பகுதியாக மாறுகிறது.[44]

நேர்மறை உளசிகிச்சையின் முதல் நேர்காணல்

[தொகு]

பெஸெஷ்கியான் அரை-வடிவமைக்கப்பட்ட ஒரு முதல் நேர்காணலை உருவாக்கினார், இது உள இயக்கவியல்  உளசிகிச்சைத் துறையில் உள்ள சில அரிய முன்முயற்சிகளில் ஒன்றாகும். ஹமிட் பெஸெஷ்கியான் 1988-ல் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை நேர்மறை உளசிகிச்சையை நோக்கமாகக் கொண்ட முதல் முனைவர் பட்ட ஆய்வுக்கட்டுரையாகும்[45]. நேர்மறை உளசிகிச்சையில் உள்ள முதல் நேர்காணல் முதன்முதலில் இதே ஆய்வில் வடிவமைக்கப்பட்டது. இந்த நேர்காணலுக்கான கேள்வித்தாள் இதில் வெளியிடப்பட்டது, மேலும் அதன் மீதான ஒரு உள இயக்கவியல் ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. இது, பின்னர் உருவான அரை-வடிவமைக்கப்பட்ட உள இயக்கவியல் முதல் நேர்காணலுக்கான முன்னோடியாகவும், உள இயக்கவியல் சிகிச்சைக்கான முக்கியமான பங்களிப்பாகவும் 1988-இல் நேர்மறை உளசிகிச்சை தொடர்பான WIPPF கேள்வித்தாளுடன் வெளியிடப்பட்டது.

உளச்சிகிச்சையில் முதல் நேர்காணல் என்பது மிகவும் முக்கியமான கூறாகும், இது உடல்நல மருத்துவத்தில் உள்ள மருத்துவ பரிசோதனை மற்றும்  நோய்விபரங்களைச் சேகரிப்பதுடன் ஒப்பிடக்கூடியதாகும். இது நோயறிதல், சிகிச்சை திட்டமிடல், நோய்முன்னறிவு மற்றும் அனுமானம் உருவாக்கம் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.[46]

PPT-இல், இந்த முதல் நேர்காணல் மருத்துவ வரலாற்றைப் போலவே ஒரு நோயறிதல் அணுகுமுறையைக் கொண்டுள்ளது[47]. அதோடு, இது உறவுசார்ந்த காரணிகள் மற்றும் சிகிச்சை கூட்டுறவையும் (therapeutic alliance) எடுத்துக் கொள்ளுகிறது[48]. இது சிகிச்சை பயனளிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கையின் தாக்கத்தையும் உணர்கிறது (Snyder[49], 193–212, Frank[50]). அரை-வடிவமைக்கப்பட்ட தன்மையும், மாற்றத்துக்குத் துணையாக உள்ள கருத்துகளும் காரணமாக, இந்த நேர்காணல் தனிமனிதர் சிகிச்சை, தம்பதிகள் சிகிச்சை, குடும்ப சிகிச்சை, ஆலோசனை மற்றும் பயிற்சி போன்ற பல்வேறு சூழ்நிலைகளில் பயன்படுத்தத்தக்கது. மேலும், இது பல்வேறு கலாச்சார சூழல்களுக்கு ஏற்றவாறு பொருந்திக் கொள்ளக்கூடியது.

நேர்மறை உளசிகிச்சையில் உள்ள முதல் நேர்காணல் என்பது அரை-வடிவமைக்கப்பட்ட ஒரு நேர்காணலாகும், இது கட்டாயமான மற்றும் விருப்பமான கேள்விகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. கட்டாயமான கேள்விகளுக்கான பதில்களைப் பொருத்து, ஆலோசகர் விருப்பமான கேள்விகளை கேட்கலாம் அல்லது வேண்டாம் என முடிவு செய்யலாம். இந்த கேள்விகள் திறந்தவெளியாகவோ அல்லது மூடப்பட்டவையாகவோ (open - ended or closed) இருக்கலாம், மேலும் இவை நோயறிதல், சிகிச்சைத் திட்டமிடல், நோய் முன்னறிதல் மற்றும் கருதுகோள் வடிவமைப்பு ஆகிய நோக்கங்களுக்காக தகவல்களைச் சேகரிக்க வடிவமைக்கப்பட்டவை ([51] p. 31).

இந்த நேர்காணல் தொடக்க சந்திப்பிலோ அல்லது ஆரம்ப அமர்வுகளிலோ, சிகிச்சையின் ஆரம்ப கட்டமாக பயன்படுத்தப்படலாம். மேலும், இது முதல் அமர்வில் நோக்கத்திற்கேற்ப ஒரு அறிமுகக் கருவியாகவும் பயன்படுத்தப்படலாம், பின்னர் அமர்வுகளில் ஆலோசகர் குறிப்பிட்ட பகுதிகளில் ஆழமாக செல்ல முடியும்.மேலும், இது வெவ்வேறு கலாசாரங்களுக்கு ஏற்ப மாற்றி அமைக்கக் கூடியது.இந்த முதல் நேர்காணல் தனிநபர்கள், குழந்தைகள், இளைஞர்கள், தம்பதிகள் மற்றும் குடும்பங்களுடன் நடத்தப்படும் சிகிச்சை, ஆலோசனை மற்றும் பயிற்சி போன்ற பல்வேறு அமைப்புகளில் பயன்படுத்தத்தக்கது[52].

சமநிலை மாதிரி

[தொகு]

சமநிலை மாதிரி என்பது பரவலாக அங்கீகரிக்கப்பட்டது மற்றும் சிகிச்சை, சுய உதவி மற்றும் குடும்ப சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படக்கூடியது. இது ஃப்ராய்டின் லிபிடோ கருத்து, அட்லரின் வாழ்க்கை இலக்குகள் மற்றும் யூங்கின் நான்கு செயல்பாடுகள் — உணர்வு, காரணம், உணர்திறன் மற்றும் உள்ளுணர்வு — ஆகியவற்றுடன் ஒப்பிடத்தக்கது. சமநிலை மாதிரி ஒரு மனிதரின் தனித்தன்மையை கட்டமைப்பு உருவாக்கமாக (பிரதிநிதித்துவமாக) காண்பிக்கிறது மற்றும் அந்த மனிதருக்கு பற்றாக்குறையாக இருக்கக்கூடிய பகுதிகளை அடையாளம் காண செயல்படுகிறது. அந்த பற்றாக்குறையுள்ள பகுதிகளை சிகிச்சையின் போது கையாளுவதன் மூலம் ஒரு புதிய சமநிலையை உருவாக்க முடியும், இது சிகிச்சைக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துகிறது.

நேர்மறை உளவியல் சிகிச்சையில் சமநிலை மாதிரி நோஸ்ரட் பெசெஷ்கியன் உருவாக்கியது

சமநிலை மாதிரி என்பது மனிதன் வாழும் மற்றும் செயல்படும் வாழ்க்கையின் நான்கு  தளங்கள் முக்கியம் எனும் கருத்தினை அடிப்படையாகக் கொண்டது. இந்த தளங்கள் ஒருவரின் மொத்த வாழ்க்கைத் திருப்தி, சுயமதிப்பு மற்றும் சவால்களை எதிர்கொள்வதற்கான திறன் ஆகியவற்றில்  குறிப்பிடத்தக்க வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த தளங்கள்,நிகழ்காலத்தில் தனிமனிதனுடைய தனித்தன்மையை பிரதிபலிக்கும் முக்கியமான குறியீடுகளாக வேலை செய்கிறது. அவை வாழ்க்கையின் உயிரியல்-உடல் (biological-physical), பகுத்தறிவு- அறிவார்ந்த (rational-intellectual), சமூக-உணர்வுப்பூர்வமான (socio-emotional) மற்றும் கற்பனை, மதிப்பு நோக்கிய (imaginative, value-oriented) கூறுகளை உள்ளடக்கியவை. ஒவ்வொருவரிலும் இந்த நான்கு தளங்களுக்கும் தேவையான திறன்கள் இருப்பினும், கல்வி மற்றும் சூழ்நிலை போன்ற காரணிகளின் அடிப்படையில் சில தளங்கள் முக்கியத்துவம் பெறக்கூடும் அல்லது புறக்கணிக்கப்படக்கூடும்.[53] ஒரு மனிதனின் ஆற்றல், செயல்கள் மற்றும் எதிர்வினைகள் கீழ்க்கண்ட நான்கு துறைகளுடன் தொடர்புபட்டும், அவை மூலம் பாதிக்கப்படுவதுமாக உள்ளன:

  1. உடல்ரீதியான செயல்கள் மற்றும் உணர்வுகள் – சாப்பிடுதல், குடித்தல், அன்பு/மென்மை, பாலுணர்ச்சி, உறங்குதல், ஓய்வு, விளையாட்டு, தோற்றம், உடை முதலியவை.
  2. தொழில் சாதனைகள் மற்றும் திறன்கள் – தொழில், வீட்டு பணிகள், தோட்ட வேலை, அடிப்படை மற்றும் மேம்பட்ட கல்வி, பண நிர்வாகம் போன்றவை.
  3. உறவுகள் மற்றும் தொடர்பு முறைமை – துணைவர், குடும்பத்தினர், நண்பர்கள், அறிமுகமானவர்கள் மற்றும் அந்நியர்கள் ; சமூக நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள்.
  4. எதிர்காலத் திட்டங்கள், மத/ஆன்மீக பயிற்சிகள், வாழ்க்கையின் பொருள் அல்லது நோக்கம், தியானம், பிரதிபலிப்பு, மரணம், நம்பிக்கைகள், எண்ணங்கள் மற்றும் கற்பனை அல்லது பார்வையின் வளர்ச்சி ஆகியவை.

சமநிலை மாதிரியின் முக்கிய நோக்கம் என்பது வாழ்க்கையின் இந்த நான்கு துறைகளுக்குள் சமநிலையை மீட்டெடுப்பதுதான். உளவியல் சிகிச்சை நடைமுறைகளில், நோயாளி தனது சொந்த வளங்களை கண்டறிந்து, அவற்றை பயன்படுத்தி ஒரு இயங்கும் சமநிலையை அடைய உதவுவதுதான் குறிக்கோள்.[54] சமநிலையான ஆற்றல் ஒதுக்கீட்டை முதன்மையாகக் கருதுவதே இதன் முக்கிய நோக்கம். அதாவது, நேர அளவை சமமாகப் பகிர்வதற்கு மாறாக ஒவ்வொரு துறைக்கும் இயக்கமிக்க முறையில் சமமான சதவீதம் (25%) ஆற்றல் வழங்கப்பட வேண்டும்.ஒரு துறையில் நீண்ட காலமாக ஒருபக்கம் சார்ந்திருப்பது மற்ற எதிர்மறையான வெளிப்பாடுகளுக்கிடையில் மோதல்கள் மற்றும் நோய்கள்  ஏற்படுத்தக்கூடும்.

மாதிரி பரிமாணங்கள்

[தொகு]

உள இயக்கவியல் உளசிகிச்சையில், ஒரு நோயாளியின் தொடக்கக் குழந்தைப்பருவ அனுபவங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை மதிப்பீடு செய்வது முக்கியமானதும் சவாலானதுமான ஒரு பணியாகும். நேர்மறை உளசிகிச்சையில், மாதிரி பரிமாணங்கள் (Model Dimensions)[55] என்ற கருத்து — "எடுத்துக்காட்டுகள்"(examples), "பாத்திர மாதிரிகள்"(Role models), அல்லது "அன்பின் வடிவங்கள்"(form of love ) என்றும் அழைக்கப்படுகிறது — இவை ஒரு  தனி மனிதனின் அனுபவங்களையும் வளர்ச்சியையும் வடிவமைக்கும் குடும்பக் கருத்துக்கள் பற்றிய முறையை விவரிக்க பயன்படும் ஒரு கருவியாகும். நோஸ்ராட் பெசெஷ்கியான் கூற்றின்படி, தொடக்க வளர்ப்பு முறைகளும் சுற்றியுள்ள சூழலும், அன்பு மற்றும் அறிவு ஆகிய அடிப்படை திறன்களின் தனிப்பட்ட வெளிப்பாடு மற்றும் வளர்ச்சியை பாதிக்கும். அறிந்துகொள்ளும் திறனின் வழிகளை சமநிலை மாதிரி விளக்கும், அதேபோல் அன்பு செலுத்தும் திறனின் வழிகளை நான்கு மாதிரி பரிமாணங்கள் விளக்குகின்றன.

நேர்மறை உளவியல் சிகிச்சையின் நான்கு மாதிரி பரிமாணங்கள்

நேர்மறை உளசிகிச்சையில், இந்த நான்கு மாதிரி பரிமாணங்களின் பயன்பாடு, கோஹட் மற்றும் கென்பெர்க் ஆகியோரின் சுயம் மற்றும் பொருள் கோட்பாடுகளை மேம்படுத்துகிறது. இதில் "நான்" என்ற பரிமாணம் மட்டுமல்லாமல், "நீ", "நாம்", மற்றும் "முதன்மை நாம்" என்ற பரிமாணங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. "நீ" பரிமாணம் என்பது, நோயாளியின் பெற்றோர் அல்லது முதன்மை பராமரிப்பாளர்கள் ஒருவருக்கொருவர் கொண்டிருந்த உறவை குறிக்கிறது. "நாம்" பரிமாணம் என்பது, பெற்றோர் அல்லது பராமரிப்பாளர்கள் மற்றவர்களுடன் கொண்ட அனுபவங்களை உள்ளடக்குகிறது. "முதன்மை நாம்" பரிமாணம் என்பது PPTக்கு தனிச்சிறப்பானது. இது குழந்தை மற்றும் பெற்றோர்/பராமரிப்பாளர்களுக்கிடையிலான உறவுகளை விவரிக்கிறது. மற்றும் அவர்களின் வாழ்க்கை தத்துவம் அல்லது மத நம்பிக்கைகள். இந்த நான்கு அக உறவுகளை உள்ளடக்குவதன் மூலம், நேர்மறை உளசிகிச்சையில் சுய-பொருள் கோட்பாடுகளை விரிவுபடுத்துகிறது மற்றும் இது உள இயக்கவியல் சிகிச்சையின் எதிர்காலத்தில் சாத்தியமான தாக்கத்தை தனித்துவமான அணுகுமுறையாக நிறுவுகிறது.

  1. "நான்"(I) என்ற பரிமாணம் என்பது ஒரு தனி மனிதரின் தன்னுடனான உறவுமுறையும், அவருடைய வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் உள்நோக்கிய போராட்டங்களையும் குறிக்கும் மாதிரி பரிமாணமாகும். இதில் தன்னம்பிக்கை, சுய மதிப்பு, சுயப்பிம்பம், அடிப்படை நம்பிக்கை மற்றும் அதற்கெதிரான அடிப்படை நம்பிக்கை போன்ற அம்சங்கள் அடங்கும். இந்தப் பிரச்சினை பெரும்பாலும் தனிமனிதரின் குழந்தைப்பருவ அனுபவங்களாலும், பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் அவருடைய உறவுகளாலும் ஆழமாக பாதிக்கப்படுகின்றன. சிறுவயதில், ஒருவருடைய தேவைகள் மற்றும் விருப்பங்கள் எவ்வாறு நிறைவு செய்யப்படுகின்றன என்பதன் அடிப்படையில், அவர்கள் தங்களுடன் உறவு ஏற்படுத்திக் கொள்ளக் கற்றுக்கொள்கிறார்கள்.
  2. "நீ"(You) என்ற பரிமாணம் என்பது ஒரு தனி மனிதரின் பிறருடனான,குறிப்பாக அவரின் காதல் இணையுடன் கொண்டுள்ள உறவைக் குறிக்கிறது. இந்த உறவுக்கான முதன்மையான மாதிரி, அந்த தனி மனிதரின் பெற்றோர் அவர்கள் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள உறவு ஆகியவற்றின் எடுத்துக்காட்டாகும். பெற்றோரின் நடத்தை மற்றும் அவர்களுக்கிடையிலான தொடர்பு, ஒரு கூட்டிணைப்பில் எப்படி நடக்கலாம் என்பதற்கான மாதிரியாக செயல்படுகின்றன. இதன் வழியாக, அந்த மனிதர் தனது காதல் உறவை உருவாக்கும் விதத்தையும் இது பாதிக்கிறது.
  3. "நாம்" (We) பரிமாணம்:  ஒரு தனிநபரின் சமூக சூழலுடனான உறவைப் பற்றியது மற்றும் அவர்களின் பெற்றோரின் சொந்த சமூக சூழலுடனான உறவால் பெருமளவில் பாதிக்கப்படுகிறது . சமூகமயமாக்கல் மூலம், சமூக நடத்தை மற்றும் சாதனை விதிமுறைகள் மீதான அணுகுமுறைகள் பெற்றோரிடமிருந்து அவர்களின் குழந்தைகளுக்கு மாற்றப்படுகிறது . இந்த மனப்பான்மைகளும் எதிர்பார்ப்புகளும் நெருங்கிய குடும்பத்திற்கு அப்பாற்பட்ட சமூக உறவுகளுடன் தொடர்புடையவை, அதாவது உறவினர்கள், சக ஊழியர்கள், சமூக குறிப்புக் குழுக்கள், ஆர்வக் குழுக்கள், தோழர்கள் மற்றும் ஒட்டுமொத்த மனிதகுலத்துடனான உறவுகள் . பெற்றோர்கள் இந்த சமூக உறவுகளுடன் தொடர்பு கொள்ளும் மற்றும் வழிநடத்தும் வழிகள் அவர்களின் குழந்தைகளின் புரிதலையும் சமூகப் பிரச்சினைகளுக்கான அணுகுமுறையையும் வடிவமைக்கின்றன
  4. "தோற்றம்/ஆதி-நாம்"("Origin/Primal-We") பரிமாணம்: ஒரு தனிநபரின் தோற்றம் அல்லது ஆதி சமூகத்துடனான உறவைக் குறிக்கிறது , இது அவர்களின் பெற்றோரின் பொருள், நோக்கம், ஆன்மீகம்/மதம் மற்றும் உலகக் கண்ணோட்டத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இந்த பரிமாணம் ஒரு மத சமூகத்தில் முறையான உறுப்பினர் நிலையை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை, ஆனால் வாழ்க்கையின் பிற்பகுதியில் எழும் வாழ்வின் அர்த்தம் பற்றிய கேள்விக்கு அடிப்படையானது . ஒரு தனிநபர் மதத்தை நிராகரித்தாலும் , அவர்களின் ஆதி சமூகத்துடனான உறவு , அர்த்தத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படும் பிற நோக்குநிலை அமைப்புகளுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.

முரண்பாடு மாதிரி

[தொகு]

பெசெஷ்கியனின் உள இயக்கவியல் முரண்பாடு மாதிரி (படத்தைப் பார்க்கவும்) வாதத்தின் மையப்புள்ளியாக உள்ள உள்ளடக்க வேறுபாடு மற்றும் அதன் உள் மதிப்பீடு ஆகியவற்றை சிறப்பாகக் காண்பிக்கிறது. இந்த மாதிரி, மூன்று வகையான உண்மையான  முரண்பாடுகளுக்கிடையே வேறுபாட்டைக் குறிப்பிடுகிறது:

  • ஒரு கடினமான சூழ்நிலையில் எழும் முரண்பாடு,
  • ஏற்கனவே உள்ள அடிப்படை முரண்பாடு,
  • உடல் மற்றும்/அல்லது மன அழுத்த அறிகுறிகளை ஏற்படுத்தும் தன்ணுணர்வற்ற உள் முரண்பாடு .

"Conflict" என்ற சொல் லத்தீன் மொழியில் உள்ள confligere என்ற சொல்லிலிருந்து வந்தது, அதாவது "முரண்பாடு" அல்லது "சண்டை" என்பதைக் குறிக்கிறது. இது உள்ளார்ந்த மற்றும் வெளிப்புறமான மதிப்புகள் மற்றும் கருத்துகளுக்கிடையேயான பொருந்தாத தன்மையைக் குறிக்கிறது, அல்லது ஒருவருக்குள்ளேயே உள்ள இருமனப்பான்மையாக இருக்கலாம். உணர்வுகள், பாதிப்பான நிலைகள் மற்றும் உடல் எதிர்வினைகள், மதிப்புகளுக்குள் ஏற்படும் உள் முரண்பாட்டின் அறிகுறி மற்றும் மனிதருடைய உண்மையான திறன்களின் பகிர்வைப் பற்றிய தகவல் ஆகியவற்றை சுட்டிக்காட்டும் சைகை அல்லது குறியீடாக புரியப்படுகிறது. எனவே நேர்மறை உளசிகிச்சையில் கேட்கப்படும் முக்கியமான கேள்வி இதுதான்: இந்த உணர்ச்சியை ஏற்படுத்தும் காரணம் அல்லது தூண்டுதல் என்ன?[56]

PPT-யில் உள்ள மூன்று முக்கிய மோதல்களின் கருத்து

பெசெஷ்கியனின் "நுண் அதிர்ச்சி" (microtrauma) என்ற கருத்து, சிறியதும், மீண்டும் மீண்டும் நிகழும் உளவியல் காயங்களின் சேர்க்கையை குறிக்கிறது. இவை நுண் அழுத்தம் அல்லது “அற்பமானவை”, “தூசியானவை” ([4] பக்கம் 80) என அழைக்கப்படும் மன அழுத்தங்களை உருவாக்கக்கூடும், மேலும் இவை உள் முரண்பாடுகளைத் தூண்டக்கூடும். இந்த நுண் அதிர்ச்சிகள், பெரிய வாழ்க்கைச் நிகழ்வுகள் அல்லது பெரும் அதிர்ச்சிகளுக்கு (macrotrauma) மாறானவை. இவை முரண்பாட்டு உள்ளடக்கமாக கருதப்படுகின்றன மற்றும் மனிதர்களுக்குள்ள உண்மையான திறன்களுடன் தொடர்புடையவை. அந்த திறன்கள் உறவுகளை உருவாக்கச் செய்யும், ஆனால் சில நேரங்களில் அதுவே ஒரு மோதலின் மூல காரணமாக மாறக்கூடும். ஒரு நடைமுறை முரண்பாட்டின் போது, சமாளிக்கும் வழிமுறைகள் அதிகமாக சுமையாகும் நிலையில், பழைய, தன்ணுணர்வற்ற அடிப்படை முரண்பாடுகள் மேல் எழலாம். இதில், நம்பிக்கை, எதிர்பார்ப்பு சார்ந்த நம்பிக்கை மற்றும் கனிவு போன்ற முதன்மை உணர்ச்சித் தேவைகள், ஒழுங்கு, நேர்த்தி, நீதிமுறை போன்ற இரண்டாம் நிலை திறன்கள் அல்லது சமூக விதிகளுடன் முரண்படும் நிலை உருவாகிறது. அடிப்படை முரண்பாடுகளை தீர்க்க உதவிய முந்தைய சமரசம் பயனளிக்காதபோது, ஒரு உள் முரண்பாடு எழுகிறது. இதன் விளைவாக, தீர்வுக்கான முயற்சிகளைப் போல பார்க்கப்படும் சில அறிகுறிகளுக்கு வழிவகுக்கின்றன. இவ்வாறு உண்டாகும் முரண்பாட்டு எதிர்வினைகள், தீர்வை அளிக்க முடியாவிட்டாலும், அவை சமநிலை மாதிரியை (Balance Model) பயன்படுத்தி குறிக்கப்பட முடியும் மற்றும் இவை தொடர்ந்தும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

சில உறுதியான திறன்கள், நெறிமுறைகள், சிந்தனைகள் அல்லது கொள்கைகள் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றப்படாமல் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படும்போது, அது குறைபாடுகளுக்கு வழி வகுக்கலாம். இது உளவியல், உளஉடல் அல்லது உடல் சம்பந்தமான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். இந்த அறிகுறிகள், நோயாளி தன்ணுணர்வின்றி ஏதோ ஒன்றை வெளிப்படுத்தும் வழியாக செயல்படுகின்றன மற்றும் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. நேர்மறை உளசிகிச்சையின்  நோக்கம், சிகிச்சை உறவிலும் தினசரி வாழ்விலும் புறக்கணிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் குறைந்தளவில் வளர்ந்துள்ள திறன்களை வலுப்படுத்துவது ஆகும். இதன் மூலம் நோயாளிகள் முரண்பாடுகளை பயனுள்ள முறையில் தீர்த்து, உட்புற மற்றும் வெளிப்புற சமநிலையை அடைய முடியும்.

கதைகள் மற்றும் ஞானத்தை பயன்படுத்தும் விவரிக்கும் அணுகுமுறை

[தொகு]

நேர்மறை உளசிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பு நுட்பம் என்பது, கதைகள், நகைச்சுவைகள் மற்றும் பழமொழிகளை சிகிச்சைக்கருவியாகப் பயன்படுத்துவது ஆகும். இதை முதன்முதலில் நோஸ்ராட் பெசெஷ்கியான் 1979-ல் வெளியிட்ட தனது நூல் "Oriental Stories as Tools in Psychotherapy – The Merchant and the Parrot" என்ற படைப்பில் அறிமுகப்படுத்தினார். மனோவாசியசிகிச்சை (மில்டன் எரிக்சன் ) இதைப் பயன்படுத்தியிருந்தபொழுதிலும், இது உள இயக்கவியல் சிகிச்சையில் பெசெஷ்கியனின் படைப்பு  வரும் வரை பொதுவானதாக இல்லை. விசித்திரக்கதைகளில் கவனம் செலுத்திய கார்ல் குஸ்டாவ் யூங் போலல்லாமல், பெசெஷ்கியனின் முறை விவரிக்கும் சிகிச்சை  மற்றும் தொடர்பு கருவிகள் ஆகியவற்றின் பரந்த எல்லையை உள்ளடக்கியது. கிழக்கு நாடு மற்றும் பிற கலாசாரங்களின் கதைகள்  மற்றும் உவமைகள் பயன்படுத்தப்பட்டு, ஒருவருடைய சுய உதவி திறனை அடையாளம் காணவும் மேலும் வளர்க்கவும் முயற்சி செய்யப்படுகிறது. பல கலாசாரங்களில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட பழமொழிகள் மற்றும் பழைய ஞானவார்த்தைகளின் குறியீட்டு அர்த்தங்களை மையமாகக் கொண்டு, அவை யாருக்குப் கூறப்படுகிறதோ அந்த மனிதர் உள சிகிச்சையின் போது தன்னைப் பற்றி மேலும் நேர்மறையான பார்வையை பெற வழிநடத்தப்படுகிறார்.[57]

தொடக்கத்தில் ஐரோப்பிய கலாசாரத்தில் பழக்கமில்லாததாகத் தோன்றக்கூடிய கிழக்குப் பகுதிகளின் கதைகள் பயன்படுத்தப்படுவதால் உருவாகும் எதிர்பாராததொரு விரும்பிய/திட்டமிட்ட சிகிச்சை விளைவு (The intended therapeutic effect of surprise) மட்டும் அல்லாமல், இதுவே பிற கலாசாரங்களிலும் விளைவுகளைக் கொண்டு வந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளது ([55] pp. 24–34). சிகிச்சையில் கதைகள் பல வகையான பணிகளை நிறைவேற்றுகின்றன — எடுத்துக்காட்டாக, தன்மீது ஒப்பீட்டுக்கான புதிய விதிமுறைகளை உருவாக்குவது, ஏற்கனவே நிறுவப்பட்ட விதிமுறைகளைக் கேள்விக்குள்ளாக்கி அவற்றை  தொடர்புடையதாக பார்க்க தூண்டுவது ஆகியவை அடங்கும். சிகிச்சையின் தொடக்கக் கட்டத்தில் இந்தக் கதைகள் பார்வைமாற்றத்திற்கு வழிவகுக்கும்; அந்த மாற்றமே பிறகும் தொடரும் சிகிச்சை கட்டங்களில் பயன்படுத்தப்படும்.

இவ்வகைக் கதைகள் உணர்வுகள் மற்றும் சிந்தனைகளை வெளிப்படுத்துவதற்கு வசதியாக இருக்கக்கூடும்; இது சிகிச்சையில் பெரும்பாலும் முக்கியமான பங்கு வகிக்கிறது. சிகிச்சையில் கதைசொல்லல் ஒரு கண்ணாடிப் போல செயல்படுகிறது — வாசகர்கள் அல்லது கேட்பவர்கள் கதாபாத்திரங்களுடன் மற்றும் அவர்களின் அனுபவங்களுடன் தங்களை அடையாளம் காண உதவுகிறது; இதன் மூலம் அவர்கள் தங்களின் தேவைகள் மற்றும் சூழ்நிலைகளை பிரதிபலிக்க இயல்கிறது. தீர்வுகளைக் கூறுவதன் மூலம், கதைகள் நோயாளிகள் தங்கள் சொந்த அணுகுமுறையுடன் ஒப்பிடக்கூடிய மாதிரிகளாக செயல்பட முடிகின்றன; இது விரிவான விளக்கத்திற்கும் மாற்றத்திற்கான திறனையும் உருவாக்குகிறது. மேலும், பழைய மற்றும் காலாவதியான எண்ணங்களைப் பிடித்துக்கொண்டு மாற்றத்துக்குத் தயாராக இல்லாத நோயாளிகளுக்கு சிகிச்சையில் உதவவும் கதைகள் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.[58][59]

ஐந்து படி கருத்துக்கள்

[தொகு]

தனி மனிதர் மற்றும் குடும்ப சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஐந்து படி கருத்துக்கள், ஒவ்வொரு கைகளின் ஐந்து விரல்களுக்குச் சமமானவை. இவை, ரெய்மண்ட் பட்டிகே விளக்கிய குழு உள சிகிச்சை, மொரேனோவின் உள நாடகம் மற்றும் ஆல்பிரெட் அட்லர் விவரித்த மக்களுக்கான மேலதிக கல்வி ஆகியவையின் இயற்கையான செயல்முறையை ஒத்தவை. இதிலிருந்து பெஸெஷ்கியனின்[4] அணுகுமுறையை வேறுபடுத்துவது, இந்த செயல்முறை மாதிரியை உள சிகிச்சையில் திட்டமிட்டு பயன்படுத்துவதிலேயே இருக்கிறது. இந்த ஐந்து படி செயல்முறை, சிகிச்சையாளர் மற்றும் சிகிச்சை எடுப்பவருக்கான சுய உதவியின் மிகவும் பயனுள்ள வழிமுறையை கண்டறிவதற்கான வழிகாட்டியாக செயல்படுகிறது. சிகிச்சை தொடர்பான ஆய்வுகள், சவாலான சிகிச்சை சூழல்களை சிறப்பாக கையாள்வதும் மற்றும் சிகிச்சை உறவை பிரதிபலிப்பதும் சிகிச்சையின் விளைவு அதிக வெற்றிகரமாக இருக்க வாய்ப்புள்ளது என்பதை காட்டுகிறது.

சிகிச்சைத் தொடர்பிலான மூன்று கட்டங்கள் (இணைப்பு, வேறுபாடு, விலகல்) , ஒவ்வொரு சிகிச்சை அமர்விலும் மற்றும் மொத்த சிகிச்சைக் காலப்பகுதியிலும் பயன்படுத்தப்படும்   ஐந்து நிலை  செயல்முறை தொடர்பை ஈடுபடுத்துகிறது.[60]

  1. 1.முதல் படி என்பது ஏற்கும் நிலை, கவனித்தல், இடைவெளி உருவாக்குதல் ஆகும், இது பார்வைமாற்றத்தை உள்ளடக்கியது.
  2. இரண்டாவது படி என்பது மதிப்பீடு செய்வது; அதாவது முரண்பாட்டின் உள்ளடக்கம் மற்றும் பின்னணி,மற்றும் நோயாளியின் வலிமைகளை வேறுபடுத்தி பார்ப்பது.
  3. மூன்றாவது படி என்பது நிலைமையைக் கருத்தில் கொண்டு ஊக்கமளிப்பது, இதில் சுயஉதவி மற்றும் வளங்களை வளர்த்தெடுக்கின்றனர்.
  4. நான்காவது படி என்பது வாய்மொழி மூலமாக, முரண்பாடு மூலம் வேலைசெய்வதை  உள்ளடக்கியது.
  5. ஐந்தாவது மற்றும் இறுதியான படி, இலக்குகளின் விரிவாக்கம் ஆகும், புதிய கருத்துக்கள், உத்திகள் மற்றும் கண்ணோட்டம் (பார்வை) ஆகியவற்றை எதிர்காலம் நோக்கிய கவனத்துடன் சிந்திக்கவும், சுருக்கமாகக் கூறவும்,  சோதிக்கவும் செய்யப்படுகிறது.

இந்த கட்டமைக்கப்பட்ட தொடர்பு முறை பேசெஷ்கியான் முறைக்கு தனித்துவமானதாகும் மற்றும் இது வெற்றிகரமான சிகிச்சை விளைவுகளுக்கு பங்களிக்கிறது. இந்த சிகிச்சை முறையின் முக்கியக் கண்ணோட்டம் எதிர்காலமும் மாற்றமும் ஆகும்; மேலும், நிகழ்நிலையில் பயனுள்ளதாக இருக்கும் கடந்தகாலக் கருத்துகளை இது பயன்படுத்துகிறது. மேலும், தேவையான நேரங்களில் பிற உளவியல் சிகிச்சை துறைகளிலிருந்தும் கருத்துகள் (ஒருங்கிணைந்த அம்சம்) எடுத்துக்கொள்ளப்படுகின்றன. நோயாளியும் அவரைச் சுற்றியுள்ளவர்களும் நோயின் நிகழ்வுப் போக்கை புரிந்துகொள்வதில் (சுய உதவி) பங்கேற்கின்றனர்.

உள சிகிச்சையின் ஐந்து கட்டங்களும், ஒரு சிகிச்சை அமர்விற்குள்ளோ அல்லது முழு சிகிச்சை செயல்முறையிலோ தொடர்புக்கான ஒரு கட்டமைப்பாக செயல்படுகின்றன; இல்லையெனில், அந்தச் செயல்முறை திசைதவறியதாக இருக்கும்.[61] சரியான புரிதல், வழிநடத்தும் கேள்விகள், கதைகள், தொடர்பை தூண்டும் நிகழ்வுகள், மற்றும் முந்தைய கருப்பொருள்களை மீண்டும் பார்வையிடுதல் ஆகியவற்றின் மூலம்,சிகிச்சையாளர் நோயாளியின் அனுபவக் கதையையும் சிந்தனையையும் ஊக்குவிக்கிறார். இந்த செயல்முறை, சிகிச்சையாளருக்கும் நோயாளிக்கும் ஒரு தொடக்கப் புள்ளி மற்றும் பாதுகாப்பு உணர்வை வழங்குகிறது. இது குறிப்பாக சிகிச்சை முடிந்த பின்பும், நோயாளி முரண்பாடுகளை எதிர்கொள்வதற்கும், சுய உதவியில் ஈடுபடவும் தயார் செய்கிறது.

நேர்மறை உளசிகிச்சை பயன்பாடுகளின் துறைகள்

[தொகு]

முதலில் உளசிகிச்சைக்காக உருவாக்கப்பட்ட நேர்மறை உளசிகிச்சையின் முறை தற்போது அதன் பாரம்பரிய பயன்பாட்டைத் தாண்டி விரிவடைந்துள்ளது மற்றுமல்லாமல்  பல துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது — உதாரணமாக, ஆலோசனை, கற்பிக்கும் கலை, மற்றும் சமூகப்பணி. ஜெர்மனியில், நேர்மறை உளசிகிச்சை 1992 முதல் ஆலோசனையில் பயன்படுத்தப்படுகிறது; அதே ஆண்டிலேயே புல்கேரியாவில் இது கற்பிக்கும் கலையில் பயன்படுத்தப்பட்டது. சீனாவிலும், 2014 முதல்  மனநல குறைபாடுகள், குடும்பத்தை கையாளுதல் மற்றும் மனச்சோர்வைத் தடுத்தல் பற்றி சமூகப்பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க  பயன்படுத்தப்படுகிறது. புல்கேரியாவில் 2006 முதல் நேர்மறை உளசிகிச்சை சிறுவர் மற்றும் இளையோர் சிகிச்சைக்கான சிறப்பு பயிற்சி திட்டங்களின் அடிப்படையாகப் பயன்படுத்தப்பட்டது, பின்னர் இது உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலும் விரிவடைந்தது. ஜெர்மனி, புல்கேரியா, சைப்பிரஸ், துருக்கி, கொசோவோ, சீனா, பொலிவியா, மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளிலுள்ள பல தொழில்நுட்ப நிபுணர்கள் நேர்மறை உளசிகிச்சை  அடிப்படையிலான நேர்மறை குடும்ப   சிகிச்சை மற்றும்  ஆலோசனையில் நிபுணத்துவம் பெற்றுள்ளனர். இதனால் நேர்மறை உளசிகிச்சை, பல்வேறு தொழில்முறை மற்றும் கலாச்சாரத் துறைகளுக்கிடையே உளசிகிச்சைத் திறனையும் அனுபவங்களையும் பகிரும் ஒரு வழியாக உருவெடுத்துள்ளது.[5]

முதலில் நேர்மறை உளசிகிச்சை, மனநலம், உளஉடலியல் மருத்துவம் (psychosomatic medicine)[62], வரும்முன் காத்தல் மற்றும் உளவியல் சிகிச்சைக்கான அடிப்படை நேர்மறை உளவியல் சிகிச்சையாக உருவாக்கப்பட்டது. நேர்மறை உளசிகிச்சை, ஜெர்மனியில் பல மருத்துவர்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அணுகுமுறை, ஜெர்மனியில் உள்ள விஸ்பாடன்  கல்விக்கூடத்தில் உள இயக்கவியல் சிகிச்சைகாகஉளசிகிச்சையின்  அரசால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி திட்டத்திலும், பல்வேறு மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

உள சிகிச்சையைத் தவிர, நேர்மறை உளசிகிச்சை பரந்த அளவிலான அமைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் கல்வி மற்றும் பள்ளிகள்[15], மதம் சார்ந்த உளவியல்[63][64][65], ஆசிரியர்களுக்கான பயிற்சிகள்[15][66], நேர நிர்வாகம்[67], பலவகையான ஆலோசனை சூழல்கள், மேலாளர் பயிற்சி, திருமணத்திற்கான தயாரிப்பு மற்றும் துணையாளர் கருத்தரங்குகள், ஆட்கள் தேர்வு, நீதியியல் நிபுணர்கள் மற்றும் நடுவர்களுக்கான பயிற்சிகள், ராணுவம், சமூகம், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள்[68], கலாச்சார இடைமுக பயிற்சிகள், இயற்கை மருத்துவம் மற்றும் ஒழுங்கு சிகிச்சை (மன-உடல் மருத்துவம் எனவும் அழைக்கப்படுகிறது)[69], மனச்சோர்வு தடுப்பு மற்றும் மேற்பார்வை ஆகியவை அடங்கும்[70][71]. மேலும், நேர்மறை உளசிகிச்சை பயிற்சி, குடும்ப ஆலோசனை மற்றும் பொது ஆலோசனையிலும் பயன்படுத்தப்படுகிறது.[72][73]

சிகிச்சை

[தொகு]

நடைமுறை

[தொகு]

நேர்மறை உளசிகிச்சை பல்வேறு மனநலக் நிலைகளுக்கான சிகிச்சையாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் மனநிலை கோளாறுகள் (mood/affective disorders), நரம்பியல் கோளாறுகள் (neurotic disorders), மன அழுத்தம் சார்ந்த கோளாறுகள் (stress-related disorders), உடல் குறைபாடுகளைப் போன்று தோன்றும் சிந்தனைக் கோளாறுகள் (somatoform disorders), மற்றும் சில நடத்தை நோய்க்குறிகள் (ICD-10 இன் F3–F5 அத்தியாயங்களின் படி வகைப்படுத்தப்பட்டவை) ஆகியவை அடங்கும். மேலும், இது சில அளவிற்கு தனித்துவக் குணக்கோளாறுகளை (personality disorders – F6 அத்தியாயம்) கண்டறிவதற்கு உறுதியளிக்கிறது.

நேர்மறை உளசிகிச்சை பாரம்பரிய தனிப்பட்ட சிகிச்சைகளுடன் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்படுகிறது. இது தம்பதி சிகிச்சை மற்றும் குழு சிகிச்சை அமைப்புகளிலும் பயனுள்ளதாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது[74]. மேலும், நேர்மறை உளசிகிச்சை மனநல மருத்துவ துறையில் பயன்பட்டு வருகிறது, குறிப்பாக (முன்/பின்) பிந்தைய நோயாளிகளுடன் (post-psychotic) வேலை செய்வதில் மற்றும் மனநல மருத்துவமனைகளில் உள்ள குழு அமைப்புகளில் இது பயனுள்ளதாக இருப்பது நிறுவப்பட்டுள்ளது. இங்கு கதைகள் மற்றும் நிகழ்வுகளின் (anecdotes) பயன்பாடு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சுய உதவி

[தொகு]

பெசெஷ்கியானின் புத்தகங்கள் சுயஉதவியை தேடும் சாதாரண மக்களுக்கான சிறப்பான நோக்கம் கொண்டவை. அவரது வேலைகள், எடுத்துக்காட்டாக "The Psychotherapy of Everyday Life" (1977 ஜெர்மனில், 1986 இங்கிலீசில்), தவறான புரிதல்களை கையாள்வதில் தனிமனிதர்களுக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேபோல, "In Search of Meaning" (1983 ஜெர்மனில், 1985 இங்கிலீசில்) போன்ற புத்தகங்கள் வாழ்க்கை நெருக்கடிகளைச் சமாளிக்க வழிகாட்டுகின்றன.

மேலும், "If You Want Something You Never Had, Then Do Something You Never Did" (2011) போன்ற நூல்கள், தனிப்பட்ட முரண்பாடுகளை தீர்ப்பதில் கவனம் செலுத்துகின்றன. மேலும்,நேர்மறை உளசிகிச்சையில் சான்றளிக்கப்பட்ட ஆலோசகராக தங்களை உருவாக்க, தனி மனிதர்கள் சிறப்பு  பயிற்சிகளைத் தொடர முடியும். இது அவர்களுக்கு சவாலான சூழ்நிலைகளில் முரண்பாடுகளைத் தணிக்கவும், சுயஉதவியை ஊக்குவிக்கவும் உதவும்.

பயிற்சிகள்

[தொகு]

நேர்மறை உளசிகிச்சைப் பயிற்சிகள்

[தொகு]

WAPP (World Association for Positive and Transcultural Psychotherapy) வழங்கும் முக்கிய முதுநிலை (postgraduate) பயிற்சி திட்டம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகள் தொடர்ச்சியான வரிசையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, அதாவது கீழ்நிலை பாடநெறியிலிருந்து தொடங்கி அடுத்தடுத்து முடிக்க வேண்டும்.[75]

  1. அடிப்படை நேர்மறை உளசிகிச்சை ஆலோசகர் (200 மணி நேரம்—கோட்பாடுகள் மற்றும் சுய அறிந்துகொள்ளலை உள்ளடக்கியது).
  2. வேட்பாளர் சான்றிதழ் பெறுவோர் நிலை நேர்மறை உள சிகிச்சையாளர் (710 மணி நேரம்–இது கோட்பாடு, மேற்பார்வை, மற்றும் சுய அறிந்துகொள்ளலை உள்ளடக்கியது).
  3. யூரோப்பிய சான்றளிக்கப்பட்ட நேர்மறை உள சிகிச்சையாளர்  (1400 மணி நேரம்– இது கோட்பாடு, நடைமுறை, மேற்பார்வை மற்றும் சுய அறிந்துகொள்ளல் ஆகியவற்றை உள்ளடக்கியது).

இந்த பாடநெறிகள் ஒவ்வொன்றும் 3 முதல் 4 நாட்கள் வரை நீளமுடைய தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, பாடநெறியின் வகையைப் பொறுத்து பல மாதங்களில் பரவியிருக்கும். நேர்மறை மற்றும் பன்முக கலாச்சார உளசிகிச்சை பயிற்சிகள் மூன்று முக்கியமான உள்ளடக்கப் பகுதிகளை கொண்டுள்ளன:

  • கோட்பாடு – நேர்மறை மற்றும் பன்முக கலாச்சார உளசிகிச்சையின் அடிப்படை கருத்துகள் மற்றும் கருவிகளைப் பயில்வது.
  • சுய கண்டுபிடிப்பு/ சுய அனுபவம்: முதன்மையாக, கல்வியியல் சார்ந்த சுய அனுபவம் மாணவர்களுக்கு (வேட்பாளர்கள், குடியிருப்போர்கள், பயிற்சி பெற்றவர்கள்) ஒரு  உள இயக்கவியல் உள சிகிச்சை அடையாளத்தை வளர்ப்பதில் உதவ வேண்டும். மாணவரின் சுய பிரதிபலிப்பு வலுப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட வேண்டும். அவர்கள் தங்களின் சொந்த மைய உள்ளார்ந்த முரண்பாடுக்கும் மற்றும் தங்களுடைய சொந்த ஆளுமை அமைப்பையும் நேரடியாக சந்திக்க வேண்டும். உள சிகிச்சை எப்படி செயல்படுகிறது, எவ்வளவு சவாலானது என்பதையும் அவர்கள் நேரடியாக அனுபவிக்க வேண்டும். தன்னுணர்வற்ற மனதின் தனிப்பட்ட அனுபவமே உள இயக்கவியல் சுய கண்டுபிடிப்பின் மைய அம்சமாகும். கல்வி சுய கண்டுபிடிப்பு என்பது தனிப்பட்ட பிரச்சனைகளை தொடுவதாலும், இது ஒரு தனிப்பட்ட சிகிச்சை அல்ல. மாணவர் ஒரு நோயாளி அல்ல, ஆனால் வருங்கால சக உளவியலாளர் மற்றும் உளசிகிச்சையாளர். கல்வி சுய கண்டுபிடிப்பின் போது, மாணவரும் அல்லது பயிற்றுவிப்பாளரும் மிக அதிகமான தீர்க்கப்படாத தனிப்பட்ட பிரச்சனைகள் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டால், மாணவர் தனிப்பட்ட சிகிச்சையை பெற வேண்டும். இதன் அர்த்தம், தனிப்பட்ட சிகிச்சையை கல்வி சுய அனுபவமாக கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது.[76]
  • மேற்பார்வை: மேற்பார்வை என்பது நேர்மறை உளசிகிச்சையின்  ஒரு முக்கிய கூறாகும். இது தனிப்பட்ட மற்றும் குழு வடிவங்களை உள்ளடக்கியது.நேர்மறை உளசிகிச்சையில் மேற்பார்வை என்பது சிகிச்சை சூழ்நிலையை புரிந்து கொள்வதைவிட மேலானது. இது மேற்பார்வை செய்யும் மனிதரின் திறமைகள் மற்றும் குணங்களை, அவர்களுக்கும், அவர்களுடைய தேவைக்கும் நோயாளிகளுக்கும் ஏற்ப, மேம்படுத்துவதே இலக்காகும். நேர்மறை உளசிகிச்சையில் குழு மேற்பார்வை பொதுவாக இடம் பெறுகிறது, ஏனெனில் அதன் கட்டமைக்கப்பட்ட செய்முறை, நடைமுறை பயன்பாடுகளுக்கும், கற்பித்தல் தாக்கத்திற்கும் ஏற்றது. சாதாரணமாக ஒரு அணுகுமுறையில், ஒரு நோயாளியை மையமாகக் கொண்டு ஒரு மேற்பார்வை பெறும் மனிதருடன் ஒரு அமர்வு நடைபெறும்போது மற்ற உறுப்பினர்கள் (மேற்பார்வையாளர் உட்பட) பங்கேற்பாளர்களாக இருப்பார்கள். இதனால் மேற்பார்வையாளர் மற்ற பங்கேற்பாளர்களை இணை மேற்பார்வையாளர்களாக ஈடுபடுத்த அனுமதிக்கிறது. இது மேற்பார்வை பெறும் நபரின் வழக்கைக் குறித்து அவருடைய பார்வையை குழுவிலுள்ள அனைவரிடமிருந்தும் கிடைக்கும் கூடுதல் பார்வைகள் மற்றும் பல்வேறு வகை கருத்துகளால் மேலும் வளப்படுத்துகிறது.[77][78]

PPT சான்றிதழ்

[தொகு]

ஒவ்வொரு PPT பயிற்சி பாடத்தையும் வெற்றிகரமாக முடித்த பின்பு, பங்கேற்பாளருக்கு  நேர்மறை மற்றும் பன்முக கலாச்சார உள சிகிச்சைக்கான உலக சங்கம் (WAPP) வழங்கும் ஒரு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழில் அந்த பாடத்தின் முக்கிய பயிற்றுவிப்பாளர் மற்றும் சங்கத்தின் தலைவரின் கையொப்பம் இருக்கும். WAPP, நேர்மறை உளவியலின் பயிற்றுவிப்பாளர்களுக்கு சான்றளிக்கிறது. WAPP-இன் அங்கீகாரம் பெற்ற பயிற்றுவிப்பாளர்களே அதிகாரப்பூர்வமான WAPP சான்றிதழ்களை கையெழுத்திட்டு வழங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.[79]

பயிற்சி தரநிலைகள்

[தொகு]

நேர்மறை உள சிகிச்சையில் பட்டமேற்படி பயிற்சிக்காக, உலக நேர்மறை மற்றும் பன்முக கலாச்சார உள சிகிச்சை சங்கம் (WAPP) ஒரு பொதுவான பயிற்சி தரநிலைகளை வளர்த்துள்ளது. இந்த தரநிலைகள் அனைவருக்கும் கட்டாயமானவை. சில நாடுகளில் இத்தரநிலைகள் வேறுபடலாம். எனினும், WAPP அமைத்த தரநிலைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டிய குறைந்தபட்ச தேவைகளாகக் கருதப்படுகின்றன.[80]

பயிற்றுவிப்பாளர் கல்வி

[தொகு]

WAPP, அடிப்படை மற்றும் மேம்பட்ட நிலை பயிற்றுவிப்பாளர்களை பயிற்சி அளித்து சான்றளிக்கிறது (Basic மற்றும் Master Courses):

  • நேர்மறை உள சிகிச்சைக்கான அடிப்படை பாட பயிற்றுவிப்பாளர்
  • நேர்மறை உள சிகிச்சைக்கான மேம்பட்ட பாட பயிற்றுவிப்பாளர்

சான்றளிக்கப்பட்ட நேர்மறை உளசிகிச்சையாளர்கள் தாங்களே PPT பயிற்றுவிப்பாளர்களாக மாற விரும்பினால், அவர்கள் ஒரு தேர்வும் மற்றும் "பயிற்சி வேட்பாளர்" என்ற முழுமையான  பாடத்திட்டத்தின் துணையும் அடங்கிய பயிற்றுவிப்பாளர் பயிற்சி திட்டத்தில் பங்கேற்க முடியும்.[79]

சர்வதேச கூட்டங்கள் மற்றும் பயிற்சி திட்டங்கள்

[தொகு]

நேர்மறை உள சிகிச்சைக்கான உலக சங்கம்  தேசிய மற்றும் சர்வதேச அளவில் வழக்கமான கூட்டங்களை நடத்துகிறது, எடுத்துக்காட்டாக மாநாடுகள், பயிற்சியாளர் கருத்தரங்குகள் மற்றும் உலக மாநாடுகள் ஆகியவை உள்ளடங்கும். 2000ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் சர்வதேச பயிற்சி கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன, மேலும் 1997ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ஏழு உலக மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன.[81]

வளர்ச்சி மற்றும் உலகளாவிய வலைப்பின்னல்

[தொகு]

கடந்த 40 ஆண்டுகளில், நேர்மறை உளவியல் சிகிச்சையின் முக்கிய வலியுறுத்தலாக சிகிச்சை, பயிற்சி மற்றும் வெளியீடு ஆகியவை இருந்தது.

1979ஆம் ஆண்டில், ஜெர்மனியின் வீஸ்பாடனில், மருத்துவர்களுக்கான மேல்நிலை பயிற்சியாக உள சிகிச்சை மற்றும் குடும்ப சிகிச்சைக்காக வீஸ்பாடன் மேல்நிலை பயிற்சி நிறுவனம் (Wiesbaden Postgraduate Training Institute for Psychotherapy and Family Therapy) நிறுவப்பட்டது. 1999ஆம் ஆண்டு, உள சிகிச்சைக்கான வீஸ்பாடன்  கல்விக்கூடம் (WIAP), ஒரு மாநில அனுமதி பெற்ற, பெரிய அளவிலான வெளிநோயாளர் மருத்துவமனையுடன் கூடிய மேல்நிலை உள சிகிச்சை கல்விக்கூடமாக உள்ளது. இது உளவியலாளர்களுக்கும் கல்வியியல் விஞ்ஞானிகளுக்கும் பயிற்சி அளிப்பதற்காக நிறுவப்பட்டதாகும்.[82]

சர்வதேச தலைமை அலுவலகம் ஜெர்மனியின் வீஸ்பேடன் நகரத்தில் அமைந்துள்ளது. நேர்மறை உள சிகிச்சை  உலகளாவிய அளவில் ‘நேர்மறை மற்றும் பன்முக கலாச்சார உள சிகிச்சை உலக சங்கம்’ (World Association of Positive and Transcultural Psychotherapy – WAPP) மூலம் பிரதிநிதித்துவம் செய்கிறது.[83] இதன் சர்வதேச நிர்வாகக் குழு இயக்குநர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சுமார் பத்து நாடுகளில் தேசிய மற்றும் பிராந்திய சங்கங்கள் உள்ளன.

நேர்மறை உள சிகிச்சை மற்றும் அதன் உளவியல் சிகிச்சையாளர்கள் உளவியல் சிகிச்சையின்  சர்வதேச அளவு வளர்ச்சியில்  ஈடுபட்டு வருகின்றனர்; மேலும், இவர்கள் சர்வதேச மற்றும் கண்டாந்தர சங்கங்களின் செயலில் உள்ள உறுப்பினர்களாக உள்ளனர்.[84]

ஆராய்ச்சி

[தொகு]

ஆராய்ச்சி முன்னேற்றங்கள் மற்றும் பயன்பாடுகள்

[தொகு]

நேர்மறை உள சிகிச்சை குறித்த முதல் வெளியீடுகள் 1974 ஆம் ஆண்டை சேர்ந்தவை. அதன் பின்னர், இந்த முறையைப் பற்றிய விவரங்கள் பல நூல்கள், அறிவியல் ஆய்வுகள் மற்றும் பிற வெளியீடுகளில் இடம் பெற்றுள்ளன. உள சிகிச்சையின் செயல்திறனைப் பற்றிய கிராவே[85] முன்வைத்த நான்கு கொள்கைகளையும் நேர்மறை உள சிகிச்சை நிறைவு செய்கிறது.

  • வளங்களைச் செயல்படுத்தல்,
  • நடைமுறைப்படுத்தல்,
  • பிரச்சினைகளின் மேலாண்மை,
  • சிகிச்சைத் தெளிவுபடுத்தல்.

1994 முதல் 1997 வரை, உள சிகிச்சைக்கான ஜெர்மன் சங்கத்தின் 32 உறுப்பினர்களால், நொஸ்ராட் பெசெஷ்கியன், காரின் ட்ரிட், மற்றும் பிர்கிட் வெர்னர் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ்,நேர்மறை உள சிகிச்சையின் செயல்திறன் மற்றும் தர உறுதி குறித்த ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் நோக்கம், நேர்மறை உள சிகிச்சை என்பது கிராவே மாதிரியை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரியமான, ஒருங்கிணைந்த சிகிச்சை வடிவமாகும் ([29] பக். 9) என்ற கூற்றை உறுதிபடுத்துவதாகும்.இது கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளில் நடத்தப்பட்டது மற்றும் இவ்வகையில் நடைபெற்ற முதல் ஆய்வாகும்[86]. ஆய்வின் முடிவுகள், நேர்மறை உள சிகிச்சை குறுகிய கால சிகிச்சை முறையாக பயனுள்ளதாக இருப்பதை காட்டின.

நேர்மறை உள சிகிச்சைக்கான ஜெர்மன் சங்கம்  நடத்திய நீளவியல் (longitudinal) செயல்திறன் ஆய்வு, நேர்மறை உள சிகிச்சையின் தினசரி மருத்துவப் பயன்பாட்டிலான விளைவுகளை ஆய்வு செய்தது. மொத்தம் 402 மனநலக் கோளாறுகள் கொண்ட நோயாளிகள், மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட நேர்மறை உள சிகிச்சை  பயிற்சி பெற்ற 22 சிகிச்சையாளர்களால் சிகிச்சை பெற்றனர்.

நோயாளிகள், உடல் சார்ந்த நோய்களுக்கு சிகிச்சைக்காக காத்திருக்கும் 771 பேரைக் கொண்ட கட்டுப்பாட்டு குழுவுடன் ஒப்பிடப்பட்டனர். சதவீதங்கள், வேவ்வேறு வகையான கோளாறுகளுடன் இருந்த நோயாளிகளின் விகிதத்தை குறிக்கின்றன: 23.6% பேருக்கு மனச்சோர்வு கோளாறுகள் இருந்தன, 19.8% பேருக்கு பதட்டம் மற்றும் பயம் சார்ந்த கோளாறுகள், 21.2% பேருக்கு உடலில் வெளிப்படும் மனநல கோளாறுகள் , 20.5% பேருக்கு ஒழுங்கு செய்தல் (Adjustment) கோளாறுகள், 8.2% பேருக்கு தனித்தன்மைக் கோளாறுகள், 3.4% பேருக்கு அடிமைத்தன பிரச்சினைகள், மேலும் 3.4% பேர் புதிதாக உடல் சார்ந்த நோய்களுடன் கண்டறியப்பட்டவர்கள். நேர்மறை உள சிகிச்சையின் விளைவுத் திறனை அளவிட, இந்த ஆய்வில் SCL-90R, VEV, கீசன்-டெஸ்ட் (Giesen-Test), WIPPF, IPC, IIP-D, GAS, மற்றும் BIKEB ஆகிய உளவியல்-அளவீட்டு பரிசோதனைகளின் தொகுப்பு பயன்படுத்தப்பட்டது.

இந்த ஆய்வில், நேர்மறை உள சிகிச்சை முடிவடைந்த பின் 3 மாதங்களிலிருந்து 5 ஆண்டுகள் வரை, முறையே 84, 91 மற்றும் 46 நோயாளிகள் கொண்ட மூன்று குழுக்களில், நோயாளிகளிடம் பின்னோக்கி விசாரிக்கும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. PPT பல்வேறு மனநலக் குறைகளைக் குணப்படுத்துவதில் பயனுள்ளதாக இருந்தது என்பதையும், சிகிச்சை முடிந்தபிறகும் அதன் நல்ல விளைவுகள் நீண்டகாலம் தொடர்ந்திருந்தன என்பதையும் இந்த ஆய்வு கண்டறிந்தது. மேலும், PPT சிகிச்சை பெற்ற நோயாளிகள் தங்களின் வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்ததை Gießen-Test மூலம் அளவிடப்பட்டது (p ≤ 0.005) மற்றும் தங்களின் தனிப்பட்ட உறவுகளில் முன்னேற்றம் அடைந்ததை  Interpersonal Check List (IPC) மற்றும் Inventory of Interpersonal Problems (IIP-D) மூலம் அளவிடப்பட்டது ( p ≤ 0.005)  என்று ஆய்வு வெளிப்படுத்தியது.

மேலும், PPT மூலம் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் சமாளிக்கும் திறன் (Coping Capacity) குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்தது, இது Coping Capacity Scale (BIKEB) மூலம் அளக்கப்பட்டது (p ≤ 0.005). மொத்தத்தில், இந்த ஆய்வு PPT பல்வேறு மனநலக் குறைபாடுகளுக்கான ஒரு பயனுள்ள சிகிச்சை முறையாக இருப்பதையும், அதன் நேர்மறை விளைவுகள் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கக்கூடியவையாக இருப்பதையும் காட்டியது (p ≥ 0.05; VEV: F = 1179; SCL-90-R: F = 2473).[86]

விவாதத்தின் போது, ஆராய்ச்சியாளர்கள் உள்(அக) செல்லுபடியாகும் தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பரிசோதனை வடிவமைப்புக்கும், அதிக புறச் செல்லுபடியாகும் தன்மையை அடைய கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் நடத்தப்படும் ஆய்வுக்கும் இடையில் தேர்வு செய்யும் குழப்பத்தை ஆராய்ந்தனர். அவர்கள், செயல்திறன் குறித்த ஆய்வுகள் குறைவாக இருப்பது என்ற துரதிர்ஷ்டமான நிலையை ஒப்புக்கொண்டு, இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்ட பரிசோதனை வடிவமைப்பு ஒரு முக்கிய பலமாகக் கருதப்படலாம் என்பதை முன்னிறுத்தினர். நேர்மறை உள சிகிச்சை குறித்த கணினி உதவியுடன் செய்யப்பட்ட தர உறுதி ஆய்வு, 1997 ஆம் ஆண்டு ரிச்சார்ட் மெர்டன் பரிசை[86] பெற்றது. இது ஐரோப்பாவில் சுகாதாரத் துறையில் வழங்கப்படும் மிக உயர்ந்த மரியாதைக்குரிய விருதுகளில் ஒன்றாகும். 1992 ஆம் ஆண்டிலிருந்து, மருத்துவம், மருந்தியல் அல்லது செவிலியச் சிகிச்சையின் மேம்பாட்டிற்கு பங்களிக்கும் சிறப்பான பணிகளை அங்கீகரிக்கும் நோக்கத்துடன், மேலும் சுகாதாரத் துறையில் மருத்துவ, சமூக, சமூகஅரசியல் அல்லது பொருளாதார முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பணிகளை கவுரவிக்கும் வகையில், இந்தப் பரிசு அறங்காவலர்களால் வழங்கப்பட்டு வருகிறது.

கல்விக்கூட வேலைகள்

[தொகு]

நேர்மறை உள சிகிச்சையின் பரவலான பயன்பாடு மற்றும் கலாச்சார பொருத்தம்,அறிவியல் ஆராய்ச்சியை நடத்துவதற்கு ஊக்கமளிக்கப்பட்ட  மற்றும் ஆதரிக்கப்பட்ட பல சக பணியாளர்களுக்கு காரணமாக அமைகிறது. மேலும் நேர்மறை உள சிகிச்சை பற்றி அறிந்த பல நடைமுறையாளர்கள், ஒரு குறிப்பிட்ட பள்ளியின் கட்டுப்பாடுகள் மற்றும் தேவைகளால்  கட்டுப்படாததால், மீண்டும் பதிப்பிப்பதில் (தூண்டுவதில்) ஆர்வம் பெற்று வருகின்றனர். இதற்கு சான்றாக,நேர்மறை உள சிகிச்சையில் சுமார் 5 முதுநிலை  ஆய்வுகள் மற்றும் (postdoctoral dissertations) கிட்டத்தட்ட 20 முனைவர் பட்ட ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ளன—முக்கியமாக ஜெர்மனி, ரஷ்யா, புல்கேரியா, உக்ரைன் போன்ற நாடுகள். கூடுதலாக, தோராயமாக 50 இளங்கலை மற்றும் முதுகலை ஆய்வறிக்கைகள் இத்துறையில் எழுதப்பட்டுள்ளன.[87]

நேர்மறை உள சிகிச்சை குறித்த ஆய்வுகள் பெரும்பாலும் அது உளஉடல் (psychosomatic), மருத்துவ, உளவியல் மருத்துவ (psychiatric), உளவியல் (psychological) மற்றும் கல்வியியல் (pedagogical) துறைகளில் உள்ள பயன்பாடுகளைச் சுற்றியே மையமாகின்றன. இந்தக் கவனம், எதிர்கால அறிவியல் ஆய்வுகளுக்கான சாத்தியமான பகுதிகளில் ஒரு பார்வையை வழங்குகிறது. இந்தக் கல்வி நூல்களில் உள்ள தலைப்புகளைப் பரிசீலிக்கும் போது, நேர்மறை உள சிகிச்சை பல்வேறு மருத்துவ மற்றும் மருத்துவமற்ற பயன்பாடுகளைக் கொண்டுள்ளது என்பதை காட்டுகிறது, குறிப்பாக சில மாதிரிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு உறுப்பு மண்டலங்களில் உள்ள மன-உடல் (psychosomatic) தொடர்பான ஆய்வுகளுக்கு கூடுதலாக, ஒப்பீட்டு மற்றும் பன்முக கலாச்சார (transcultural) ஆய்வுகளும் உள்ளன. இந்த ஆய்வுகள் சிகிச்சை தொடர்பின் தனிப்பட்ட அம்சங்கள் மற்றும் அவை கல்வி சூழலில் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதில் கவனம் செலுத்தியுள்ளன. சில ஆய்வுகள் சமூகத் துறையின் உட்பிரிவில் நடத்தப்பட்டுள்ளன.[15]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Cope, Theo A. (2010-06). "The inherently integrative approach of positive psychotherapy.". Journal of Psychotherapy Integration 20 (2): 203–250. doi:10.1037/a0019769. பன்னாட்டுத் தர தொடர் எண்:1573-3696. https://doi.org/10.1037/a0019769.
  2. Peseschkian N. Schatten auf der Sonnenuhr: Erziehung, Selbsthilfe, Psychotherapie. Wiesbaden: Verlag Medical Tribune; 1974.
  3. Peseschkian N. Positive Psychotherapie. Theorie und Praxis einer neuen Methode. Frankfurt: Fischer; 1977.
  4. 1 2 3 4 5 Peseschkian N. Positive Psychotherapy. Theory and practice of a new method. Berlin, Heidelberg: Springer-Verlag; 1987. (first German edition in 1977)
  5. 1 2 Henrichs, C., Hum, G. (2020). Positive Psychotherapy and other psychotherapeutic methods. In: Messias E., Peseschkian H., Cagande C. (Editors) Positive Psychiatry, Psychotherapy and Psychology, (pp. 401–408), Springer, Cham (Switzerland).
  6. 1 2 Remmers, A. (2020). Theoretical Foundations and Roots of Positive Psychotherapy. In: Messias E., Peseschkian H., Cagande C. (Editors) Positive Psychiatry, Psychotherapy and Psychology, (pp. 297–308), Springer, Cham (Switzerland).
  7. 1 2 3 4 Kornbichler T, Peseschkian M. Nossrat Peseschkian: Morgenland – Abendland; Positive Psychotherapie im Dialog der Kulturen. Frankfurt am Main: Fischer Taschenbuch Verlag; 2003.
  8. Baha’u’llah. Gleanings from the Writings of Baha’u’llah. Wilmette: US Baha’i Publishing Trust; 1990 (pocket-size edition, pp. 259–260).
  9. In recent years, some North American authors have published the clinical applications of positive psychology and named it Positive Psychotherapy (Martin E. P. Seligman, Tayyab Rashid, Acacia C. Parks, Positive Psychotherapy. November 2006, American Psychologist, 774–788) [Seligman M, Rashid T, Parks T. Positive psychotherapy. Am Psychol. 2006;61(8):774–88.]
  10. "PPT centers" (https://www.positum.org/ppt-centers/).
  11. Grawe K, Donati R, Bernauer F. Psychotherapie im Wandel: Von der Konfession zur Profession. Göttingen: Hogrefe; 1994.
  12. Tritt, K., Loew, T. H., Meyer, M., Werner, B., & Peseschkian, N. (1999). Positive psychotherapy: Effectiveness of an interdisciplinary approach. The European Journal of Psychiatry, 13(4), 231–242 https://psycnet.apa.org/record/2000-13704-005
  13. https://www.wiap.de/ueber-wiap/geschichte-der-wiap/
  14. 1 2 Peseschkian H. Die Anwendung der Positiven Psychotherapie im Managementtraining. In: Graf J, (ed). Seminare 2002 – Das Jahrbuch der Management-Weiterbildung (ManagerSeminare). Bonn: Gerhard May Verlags GmbH; 2001.
  15. 1 2 3 4 Remmers A. An integrated model for salutogenesis and prevention in education, organisation, therapy, self-help and family consultation, based on positive family psychotherapy [Realized projects and experiences in Bulgaria 1992–1994]. 1995.
  16. "WAPP members" (https://www.positum.org/wapp-members-list/).
  17. "Training standards" (https://www.positum.org/training-standards/).
  18. https://tmsearch.uspto.gov/bin/showfield?f=doc&state=4809:2znph.2.1
  19. https://yavuzpsikoloji.com/ankara-psikolog-fiyatlari/
  20. "PPT centers" (https://www.positum.org/ppt-centers/)./
  21. https://forsale.godaddy.com/forsale/zeropsikoloji.com?utm_source=TDFS_BINNS2&utm_medium=parkedpages&utm_campaign=x_corp_tdfs-binns2_base&traffic_type=TDFS_BINNS2&traffic_id=binns2&oref=https%3A%2F%2Fuk.wikipedia.org%2F
  22. N. Peseschkian & K. Tritt (1998) Positive psychotherapy effectiveness study and quality assurance, European Journal of Psychotherapy & Counselling, 1:1, 93–104, DOI: 10.1080/13642539808400508
  23. 1 2 Peseschkian, H. (2023). Positive psychotherapy: Core principles. Current Psychiatry, 22(1). https://doi.org/10.12788/cp.0317)
  24. Frank JD. Persuasion and healing: a comparative study of psychotherapy. 3rd ed. Baltimore: Hopkins Univ. Press; 1991.
  25. Lapworth P, Sills C. Integration in counselling & psychotherapy. Los Angeles: SAGE; 2010.
  26. Norcross JC, Goldfried MR. Handbook of psychotherapy integration. New York: Oxford University Press; 2003.
  27. Maslow AH. Motivation and personality. New York: Harper & Row; 1954.
  28. Nossrat Peseschkian mentions the term ‘positive psychology’ in his book on Positive Psychotherapy in 1987, p. 389, but not going further.
  29. 1 2 Jork K, Peseschkian N. Salutogenese und Positive Psychotherapie. Bern, Stuttgart: Hans Huber Verlag; 2003/2006.
  30. Kirillov, I. (2020). Positive Psychosomatics. In: Messias E., Peseschkian H., Cagande C. (Editors) Positive Psychiatry, Psychotherapy and Psychology, (pp. 165–176), Springer, Cham (Switzerland). .
  31. In German language, there is a very exact word for worldview, philosophy of life, or image or conception of human beings: Menschenbild. This concept plays a very important role in philosophy, medicine and psychotherapy.
  32. Peseschkian H, Peseschkian N. Der Mensch ist seinem Wesen nach gut. Die Notwendigkeit eines positiven Menschenbildes für Priester und Ärzte im Zeitalter multikultureller Gesellschaften. In: Paris W, Ausserer O (eds.). Glaube und Medizin. Meran: Alfred und Söhne; 1993.
  33. Kirillov, I. (2020). Positive Psychosomatics. In: Messias E., Peseschkian H., Cagande C. (Editors) Positive Psychiatry, Psychotherapy and Psychology, (pp. 165–176), Springer, Cham (Switzerland).
  34. Abebe, S. W. (2020). Positive Interpretation as a Tool in Psychotherapy. In: Messias E., Peseschkian H., Cagande C. (Editors) Positive Psychiatry, Psychotherapy and Psychology, (pp. 417–422), Springer, Cham (Switzerland).
  35. Peseschkian H. Osnovy pozitivnoj psichoterapii (Basics of positive psychotherapy). Archangelsk: Publications of the Medical School; 1993. (in Russian).
  36. Peseschkian H, Remmers A (2013): Positive Psychotherapie. In der Buchreihe „Wege der Psychotherapie“. Reinhardt Verlag München.
  37. Kirillov, I., Efremova, P., Dobiala, E., & Pleshakov, I. (2023). Primary Capacities as a Predictor of Perceived Stress, Anxiety, and Depression in the Pandemic Crisis of Covid-19. The Global Psychotherapist, 3(2), 19–29. https://doi.org/10.52982/lkj195
  38. Peseschkian, N. (1974): Schatten auf der Sonnenuhr. Wiesbaden: Medical Tribune.
  39. Peseschkian H, Remmers A (2013): Positive Psychotherapie. In der Buchreihe „Wege der Psychotherapie“. Reinhardt Verlag München
  40. Chykhantsova, O., & Kuprieieva, O. (2021). Possibilities of Positive Psychotherapy in the Formation of Hardiness. The Global Psychotherapist, 1(2), 22–26. https://doi.org/10.52982/lkj147
  41. Henrichs, C. (2012). Psychodynamic Positive Psychotherapy Emphasizes the Impact of Culture in the Time of Globalization. Psychology, 3(12A), 1148–1152.
  42. Moghaddam FM, Harre R. But is it science? Traditional and alternative approaches to the study of social behavior. World Psychology. 1995;1(4):47–78.
  43. Badecka, P. (2023). The Possibilities OF Transcultural Positive Psychotherapy in Supporting the Development of Post-Traumatic Growth (PTG). The Global Psychotherapist, 3(1), 98– 103. https://doi.org/10.52982/lkj187.
  44. Cesko, E., Sinici, E. (2020). Positive Psychotherapy in Different Cultures. In: Messias E., Peseschkian H., Cagande C. (Editors) Positive Psychiatry, Psychotherapy and Psychology, (pp. 201–210), Springer, Cham (Switzerland).
  45. Peseschkian H. (1987). Psycho-soziale Aspekte beim lumbalen Bandscheibenvorfall – Eine orthopädisch-psychosomatische Untersuchung von 100 Patienten. Medizinische Dissertation. Universität Mainz.
  46. Robinson DJ. The psychiatric interview. 2nd edition. Port Huron, MI, USA, Rapid Psychler Press: 2005
  47. Reimer C, Eckert J, Hautzinger M, Wilke E. Psychotherapie: Ein Lehrbuch für Ärzte und Psychologen. Heidelberg: Springer; 2000.
  48. Lambert NJ. Psychotherapy outcome research: implications for integrative and eclectic therapists. In: Goldfried M, Norcross JC, editors. Handbook of psychotherapy integration. New York: Basic Books; 1992.
  49. Snyder C. R. Handbook of hope: theory, measures & applications. San Diego: Academic Press; 2000.
  50. Frank J. D. Persuasion and healing: a comparative study of psychotherapy. 3rd ed. Baltimore: Hopkins Univ. Press; 1991.
  51. Peseschkian H. Psycho-soziale Aspekte beim lumbalen Bandscheibenvorfall (Psycho- social aspects of lumbar disc herniation). Doctoral medical dissertation. University of Mainz, Medical Faculty; 1988.
  52. Remmers, A., Peseschkian, H. (2020). The First Interview in Positive Psychotherapy. In: Messias E., Peseschkian H., Cagande C. (Editors) Positive Psychiatry, Psychotherapy and Psychology, (pp. 309–330), Springer, Cham (Switzerland).
  53. Peseschkian, H., Remmers, A. (2020). Life Balance in Positive Psychotherapy. In: Messias E., Peseschkian H., Cagande C. (Editors) Positive Psychiatry, Psychotherapy and Psychology, (pp. 91–102), Springer, Cham (Switzerland).
  54. Cesco, E. (2023). Four Aspects of the Quality of Life, the Balance Model and Sexual Disorders. The Global Psychotherapist, 3(1), 104–114. https://doi.org/10.52982/lkj188
  55. 1 2 Peseschkian, N. Positive psychotherapy of everyday life: A practical guide. Bloomington, USA: AuthorHouse; 2016. (first German edition in 1974)
  56. Goncharov, M. (2020). Conflict model of Positive Psychotherapy. In: Messias E., Peseschkian H., Cagande C. (Editors) Positive Psychiatry, Psychotherapy and Psychology, (pp. 331–348), Springer, Cham (Switzerland).
  57. Battegay R. In: Jork K, Peseschkian N, editors. Salutogenese und Positive Psychotherapie. Bern: Huber; 2006.
  58. Lytvynenko, O., Zlatova, L., Karikash, V., Zhumatii, T. (2020). Using stories, anecdotes and humor in Positive Psychotherapy. In: Messias E., Peseschkian H., Cagande C. (Editors) Positive Psychiatry, Psychotherapy and Psychology, (pp. 349–358), Springer, Cham (Switzerland).
  59. Remmers, A. (2022). How Do Traditional Stories Work in the Process of Solving Unconscious, Interpersonal and Cultural Conflict? A Contribution to Narrative Ethics. The Global Psychotherapist, 2(2), 77–85. https://doi.org/10.52982/lkj175
  60. Eryilmaz, A. (2023). The Method of Resolving Actual Conflict in Five Stages and with Five Capabilities Based on Positive Psychotherapy: The Trust-PHAL Method. The Global Psychotherapist, 3(1), 15–24. https://doi.org/10.52982/lkj177
  61. Remmers, A. (2023). Transference and Countertransference. The Global Psychotherapist, 3(1), 75–79. https://doi.org/10.52982/lkj183
  62. Kirillov, I. (2023). Evaluation Criteria for Psychosomatic Practice. The Global Psychotherapist, 3(2), 57–69. https://doi.org/10.52982/lkj199)
  63. Cope TA. Positive Psychotherapy’s theory of the capacity to know as explication of unconscious contents. J Relig Health. 2007;48(1):79–89.
  64. Peseschkian H. Osnovy pozitivnoj psichoterapii (Basics of positive psychotherapy). Archangelsk: Publications of the Medical School; 1993. [in Russian].
  65. Syrous S. Positive and crosscultural psychotherapy. Nossrat Peseschkian—his life and work. In: Leeming DA, editor. Encyclopedia of psychology and religion. 2nd ed. New York: Springer; 2014.
  66. Peseschkian N, Peseschkian N, Peseschkian H. Lebensfreude statt Stress. 2nd ed. Stuttgart: TRIAS; 2009
  67. Seiwert L. Balance your life. Die Kunst, sich selbst zu führen. München: Piper; 2010.
  68. Пеев И. [Peev, I.]. Позитивната психотерапия в модерната армия и общество. Военно издателство, София (Positive Psychotherapy in army and society). Sofia: Voenno Izdatelstvo; 2002. [in Bulgarian]
  69. Boessmann U, Peseschkian N. Positive Ordnungstherapie. Stuttgart: Hippokrates; 1995.
  70. Hübner G. Burnout. Lenzkirch: Lenzkircher Verlagsbuchhandel; 2009.
  71. Kirillov I.O. Supervision in positive psychotherapy (Unpublished doctoral dissertation). St. Petersburg: Bekhterev Federal Neuropsychiatric Research Institute; 2002. [In Russian].
  72. Kravchenko, Y. (2020). Positive Psychotherapy in Organizational and Leadership Coaching. In: Messias E., Peseschkian H., Cagande C. (Editors) Positive Psychiatry, Psychotherapy and Psychology, (pp. 253–276), Springer, Cham (Switzerland).
  73. Sinici, E. (2020). Positive Family and Marital Therapy. In: Messias E., Peseschkian H., Cagande C. (Editors) Positive Psychiatry, Psychotherapy and Psychology, (pp. 218–228), Springer, Cham (Switzerland).
  74. Peseschkian N. Positive family therapy. The family as therapist. Berlin, Heidelberg: Springer; 1986. (first German edition in 1980, latest English edition in 2016 by AuthorHouse UK) )
  75. https://www.positum.org/wp-content/uploads/2022/06/WAPP-Training-Standards-and- Curricula_-as-of-June-2022.pdf
  76. https://www.positum.org/wp-content/uploads/2021/04/guidelines_self- discovery_24.01.2021.pdf
  77. Ciesielski, R. (2023). The Integrative Model of Reflective Team Supervision in Positive Psychotherapy. The Global Psychotherapist, 3(1), 80–86. https://doi.org/10.52982/lkj184
  78. Frolov, P. (2020). Supervision in Positive Psychotherapy. In: Messias E., Peseschkian H., Cagande C. (Editors) Positive Psychiatry, Psychotherapy and Psychology, (pp. 359–370), Springer, Cham (Switzerland).
  79. 1 2 https://web.archive.org/web/20230323082723/https://www.positum.org/wp-content/uploads/2023/03/Handbook-for-Trainers-and-Organizers.pdf
  80. https://www.positum.org/wp-content/uploads/2022/06/WAPP-Training-Standards-and-Curricula_-as-of-June-2022.pdf
  81. "World Congress" (https://www.positum.org/world-congress/).
  82. "Wiesbadener Akademie für Psychotherapie (WIAP)" (http://www.wiap.de) (in German).
  83. "Positive Psychotherapy" (http://www.positum.org).
  84. https://web.archive.org/web/20160307042204/http://europsyche.org/contents/13148/positive-psychotherapy-peseschkian-since-1968- European Association of psychotherapy. Archived from the original on 2016-03-07.
  85. Grawe K, Donati R, Bernauer F. Psychotherapie im Wandel: Von der Konfession zur Profession. Göttingen: Hogrefe Verlag für Psychologie; 1994.
  86. 1 2 3 Tritt J, Loew TH, Meyer M, Werner B, Peseschkian N. Positive psychotherapy: effectiveness of an interdisciplinary approach. Eur J Psychiatry. 1999;13(4):231–41.
  87. "Library | Publications on Positive Psychotherapy" (https://www.positum.org/positive-psychot herapy-publications/).

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேர்மறை_உளச்சிகிச்சை&oldid=4582161" இலிருந்து மீள்விக்கப்பட்டது