நேரியல் மூலக்கூற்று வடிவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நேர்கோட்டு மூலக்கூறு வடிவம் கொண்டுள்ள சேர்மத்தின் நல்லியல் அமைப்பு
நேர்கோட்டு மூலக்கூறு வாடிவம் கொண்ட பெரிலியம் புளோரைடு,சேர்மத்தின் அமைப்பு

வேதியியலில் நேரியல் மூலக்கூற்று வடிவியல் (linear molecular geometry) என்பது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் எதிர்பார்க்கும் 180 பாகை பிணைப்பு கோணத்தில் வைக்கப்படும் ஏற்பாட்டை விவரிக்கிறது. இரண்டு அடுத்தடுத்த பிணைப்புகளுக்கு இடையே உள்ள வடிவியல் கோணமே பிணைப்புக் கோணம் எனப்படுகிறது. இந்த வரையறையின்படி அமையும் ஒரு நேர்கோட்டு மாதிரியில் அணுக்கள் ஒரே நேர்கோட்டில் இணைக்கப்பட்டிருக்கும். அசெட்டிலீன், கார்பனீராக்சைடு, நைட்ரிக் ஆக்சைடு போன்ற வேதிப்பொருட்கள் நேரியல் மூலக்கூறுகளுக்கு உதாரணமாகும். பெரும்பாலும் நேர்கோட்டு வடிவத்தை விளக்க அசெட்டிலீனின் மூலக்கூறு வடிவமே எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஏனெனில் இம்மூலக்கூறில் உள்ள கார்பன் மையங்கள் sp சுற்றுப்பாதையின் ஒழுக்குக் கலப்பினை நாடுகின்றன. நேர்கோட்டு வடிவில் பல மூலக்கூறுகள் காணப்பட்டாலும் முக்கியமான உதாரணங்களாக CO2, HCN, மற்றும் செனான் இருபுளோரைடு ஆகியன கருதப்படுகின்றன. நேர்கோட்டு அயனிகளுக்கு உதாரணங்களாக எதிர்மின் அயனிகள் N3 மற்றும் SCN என்பனவும் NO2+ என்ற நேர்மின் அயனியும் உள்ளன[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Greenwood, N. N.; & Earnshaw, A. (1997). Chemistry of the Elements (2nd Edn.), Oxford:Butterworth-Heinemann. ISBN 0-7506-3365-4.

இவற்றையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]