நேரிசைச் சிந்தியல் வெண்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நேரிசைச் சிந்தியல் வெண்பா என்பது வெண்பாவின் பொது இலக்கணத்தோடு நேரிசை வெண்பாவைப் போல இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்ற ஒரே வகை எதுகை கொண்டு (ஒரு விகற்பத்தானும்) அல்லது இரண்டு வகை எதுகைகள் கொண்டு (இரு விகற்பத்தானும்) மூன்று அடிகள் கொண்டு வருவது ஆகும்.

எ.கா:

அறிந்தானை ஏத்தி யறிவாங் கறிந்து
சிறந்தார்க்குச் செவ்வ னுரைப்ப - சிறந்தார்
சிறந்தமை யாராய்ந்து கொண்டு

இது இரண்டாவது அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று இரு விகற்பத்தான் வந்த நேரிசைச் சிந்தியல் வெண்பா ஆகும்.