நேமிநாத உரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பன்னிரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய நேமிநாதம் என்னும் நூலுக்கு 15 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட உரைநூல் நேமிநாத உரை. [1] இந்த உரையில் 14 ஆம் நூற்றாண்டு நூல் திருநூற்றந்தாதியிலிருந்து மேற்கோள் பாடல் ஒன்றைத் தந்துள்ளது. [2] எனவே இந்த நூல் 15 ஆம் நூற்றாண்டினது எனக் கொள்ளப்பட்டுள்ளது. வைரமோக விருத்தி எனத் தக்கயாகப் பரணித் தாழிசையில் குறிப்பிடப்படும் நூல் இந்த நேமிநாத உரையே என்பது மு. அருணாசலம் கருத்து. மு. இராகவையங்கார் இக் கருத்தைச் சான்று காட்டி நிறுவியுள்ளார்.

உரையின் சிறப்புகள்[தொகு]
  • இறந்துபோன நூலாகிய அவிநயம் நூலிலிருந்து மேற்கோள் பாடல்கள் தரப்பட்டுள்ளன.
  • "ஆசை அல்குற் பெரியாரை" என்னும் நாரத சரிதை நூலின் தொடரை எடுத்தாள்கிறது.
  • சங்கப் பாடல்கள், பதினெண்கீழ்க்கணக்கு, முத்தொள்ளாயிரம், வச்சணந்தி மாலை முதலான நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன.
  • இந்த உரை பொழிப்புரையாகவும், கருத்துரையாகவும் உள்ளது. சில இடங்களில் வினா-விடைகளைக் கொண்டதாய் விருத்தியுரை போலவும் உள்ளது.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 90. 
  2. "முத்தன் என்கோ, முதல் மூர்த்தி என்கோ" என்னும் இந்த மேற்கோள் நேமிநாதம் 74 ஆம் பாடல் உரையாக உள்ளது
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேமிநாத_உரை&oldid=1881364" இருந்து மீள்விக்கப்பட்டது