நேபாள வானியலில் பெண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நேபாள வானியலில் பெண்கள் (Women In Astronomy Nepal) 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேதியன்று நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும்.[1] வானியல் மீதும் நேபாள நாட்டின் மீதும் ஆர்வமுள்ள அனைத்து பெண்களுக்கும் ஒரு பொதுவான தளத்தை வழங்குவதற்காக இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. நேபாள வானியல் சங்கத்தின் ஒரு துணை நிறுவனமாக இந்நிறுவனம் செயல்படுகிறது.[2] நேபாள நாட்டின் இளம் பெண்கள் அறிவியல், தொழினுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் தங்கள் தொழிலைத் தொடர்வதற்கு நேபாள வானியல் பெண்கள் நிறுவனம் உதவுகிறது.

திட்டங்கள்[தொகு]

புறக்களத்தில் பெண்கள்[தொகு]

நேபாளத்தில் பெண்கள் / சிறுமிகளின் புறக்கள அறிவியல் நடவடிக்கைகளுக்கு அதிக அணுகலை இந்த திட்டம் வழங்குகிறது.[3]

அறிவியல் விருதுகளில் பெண்கள்[தொகு]

நேபாள மாணவிகள் மற்றும் அறிவியல், தொழினுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) துறையில் பணிபுரியும் இளம் நிபுணர்களுக்கு அவர்களின் திறன்களை வெளிக்கொணரும் வாய்ப்பை இந்த திட்டம் வழங்குகிறது. இந்த விருது மாணவர் பிரிவு மற்றும் தொழில்முறை பிரிவு என இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது.[4][5][6][7][8]

வெளியீடுகள்[தொகு]

நேபாளத்திலும் வெளிநாட்டிலும் உள்ள பெண்களின் பங்களிப்பை உலகளாவிய சமூகத்திற்கு எடுத்துக்காட்டும் சுவரொட்டி / புத்தகம் வெளியிட்டு வழிநடத்துகிறது.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Women In Astronomy Nepal-WIAN ⋆ Nepal Astronomical Society - NASO" (in en-US). Nepal Astronomical Society - NASO. http://nepalastronomicalsociety.org/wian. 
  2. "Home ⋆ Nepal Astronomical Society - NASO". Nepal Astronomical Society - NASO (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-27.
  3. "Nepal Solar Observation: Volunteers Reach Out With Astronomy | UNAWE". www.unawe.org. பார்க்கப்பட்ட நாள் 2018-04-27.
  4. "UN conference inspires Nepal award for women in science" (in en). UN News. 2017-12-04. https://news.un.org/en/audio/2017/12/638292. 
  5. (naso), Nepal Astronomical Society (2017-02-21). "Nepal Astronomical Society (NASO): 1st NASO Women In Science Award 2017!". Nepal Astronomical Society (NASO). பார்க்கப்பட்ட நாள் 2018-04-27.
  6. "NASO Women In Science Award 2018 – SUKONNA". www.sukonna.org (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-04-30. பார்க்கப்பட்ட நாள் 2018-04-27.
  7. "NASO calls in applications for Women in Science Award 2018" (in en-US). The Himalayan Times. 2018-03-03. https://thehimalayantimes.com/kathmandu/naso-calls-in-applications-for-women-in-science-award-2018/. 
  8. "Call for Application: Second NASO Women In Science Award 2018 | Glocal Khabar" (in en-US). Glocal Khabar. 2018-02-15. https://glocalkhabar.com/youth/call-for-application-second-naso-women-in-science-award-2018/. [தொடர்பிழந்த இணைப்பு]
  9. "Nepal Astronomical Society (NASO)". astronomy-nepal.blogspot.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-27.

புற இணைப்புகள்[தொகு]

  • Women in Astronomy Nepal's Facebook page
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாள_வானியலில்_பெண்கள்&oldid=3924271" இலிருந்து மீள்விக்கப்பட்டது