நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்
வகைமாநிலம்
அமைவிடம்நேபாளம்
உருவாக்கப்பட்டது20 செப்டம்பர் 2015
எண்ணிக்கை7
அரசு7 நேபாள சட்டமன்றங்கள்
உட்பிரிவுகள் மாவட்டம்

நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017, நேபாளம், ஓரவையுடன் கூடிய ஏழு மாநில சட்டமன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஏழு மாநிலங்களின் 550 சட்டமன்ற உறுப்பினர்களில், 330 உறுப்பினர்கள் நேரடியாகவும், 220 உறுப்பினர்கள் விகிதாசாரப்படியும் தேர்தலில் தேர்ந்தெடுக்கும் பொருட்டு, நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து, 26 நவம்பர் 2017 மற்றும் 7 டிசம்பர் 2017 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக, ஏழு மாநில சட்டமன்றங்களின் தேர்தல் நடைபெற்றது.[1]

நேபாள சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்தாண்டுகள் ஆகும். மாநிலங்களின் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மாநில முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவார்.

முதல் கட்ட வாக்குப் பதிவு[தொகு]

நேபாளத்தின் மலைப்பாங்கான 32 மாவட்டங்களின் முதல் கட்ட வாக்குப்பதிவு, 26 நவம்பர் 2017 அன்று நடைபெற்றது. முதல் கட்ட வாக்கு பதிவில் 65% வாக்காளர்கள் வாக்களித்தனர். 3.19 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்தனர்.[2]

இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு[தொகு]

இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு 7 டிசம்பர் 2017 அன்று நடைபெற்றது. இத்தேர்தல் காத்மாண்டு சமவெளி மற்றும் நேபாளத்தின் தெற்கு பகுதியில் உள்ள 45 நேபாள மாவட்டங்களில் நடைபெற்றது. இத்தேர்தலில் 2,35,993 வாக்காளர்கள் வாக்களித்தனர். [3]

வாக்கு எண்ணிக்கை[தொகு]

மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 7 டிசம்பர் 2017ல் தொடங்கியது. முழு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் டிசம்பர், 2017க்குள் வெளிவரும். தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, ஆளும் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் மற்றும் மாவோயிஸ்ட் மைய கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர். இரண்டாவதாக நேபாளி காங்கிரஸ் கூட்டணி உள்ளது. [4]

மாநிலங்கள் வாரியான முடிவுகள்[தொகு]

மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் - மாவோயிஸ்ட் மையம் தலைமையிலான இடதுசாரி முன்னணி கட்சிகள், ஏழு நேபாள மாநிலங்களின் சட்டமன்ற நேரடித் தேர்தல் முறையிலும், விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் பெருவாரியாக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. நேபாளி காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயகக் கூட்டணி இரண்டாவது இடத்தில் உள்ளது.[5][6]

தேர்தல் முடிவுகள்[தொகு]

ஒட்டு மொத்த தேர்தல் முடிவுகள்[தொகு]

ஏழு நேபாள மாநில சட்டமன்றத் தேர்த்ல் முடிவுகள்
அரசியல் கட்சி நேரடித் தேர்தல் முறையில் விகிசாத்சாரத் தேர்தல் முறையில் மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் 168 2,938,584 32.58 75 243
நேபாளி காங்கிரஸ் 41 2,869,418 31.81 72 113
மாவோயிஸ்ட் 73 1,325,048 14.69 35 108
பெடரல் சோசலிஸ்ட் கட்சி 24 447,787 4.96 13 37
இராஷ்டிரிய ஜனதா கட்சி 16 432,591 4.80 12 28
ராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி 0 203,586 2.26 3 3
விவேக்சீல சகஜா கட்சி 0 198,649 2.20 3 3
ராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி (ஜனநாயகம்) 0 92,601 1.03 1 1
நவ சக்தி கட்சி 2 88,199 0.98 1 3
ராஷ்டிரிய ஜனமோர்ச்சா 2 64,424 0.71 2 4
நேபாள மஸ்தூர் கிசான் கட்சி 1 57,185 0.63 1 2
நேபாள சாங்கிய சமாஜ்வாடி கட்சி 0 37,179 0.41 1 1
சாங்கிய லோக்தாந்திரிக் ராஷ்டிரிய மஞ்ச் 0 26,282 0.29 1 1
Others 0 237,764 2.64 0 0
சுயேட்சைகள் 3 3
மொத்தம் 330 9,019,297 100 220 550
Source: Election Commission of Nepal

மாநில எண் 1[தொகு]

அரசியல் கட்சி நேரடி தேர்தலில் விகிசாத்சாரத் தேர்தல் முறையில் மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் 36 673,709 38.79 15 51
நேபாளி காங்கிரஸ் 8 586,246 33.76 13 21
மாவோயிஸ்ட் 10 206,781 11.91 5 15
பெடரல் சோசலிஸ்ட் கட்சி 1 70,476 4.06 2 3
ராஷ்டிரிய பிரஜா தந்திரக் கட்சி 0 57,342 3.30 1 1
சாங்கிய லோக்தாந்திரிக் ராஷ்டிரிய மஞ்ச் 0 26,123 1.50 1 1
பிறர் 0 115,945 6.68 0 0
சுயேட்சைகள் 1 1
மொத்தம் 56 1,736,622 100 37 93
Source: Election Commission of Nepal

மாநில எண் 2[தொகு]

அரசியல் கட்சி நேரடித் தேர்தலில் விகிசாத்சாரத் தேர்தல் முறையில் மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
நேபாளி காங்கிரஸ் 8 370,550 24.11 11 19
இராஷ்டிரிய ஜனதா கட்சி 15 318,524 20.72 10 25
பெடரல் சோசலிஸ்ட் கட்சி 20 284,072 18.48 9 29
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் 14 249,734 16.25 7 21
மாவோயிஸ்ட் 6 182,619 11.88 5 11
நேபாள சாங்கியா சமாஜ்வாடி கட்சி 0 32,864 2.14 1 1
பிறர் 0 98,808 6.42 0 0
சுயேட்சைகள் 1 1
மொத்தம் 64 1,537,171 100 43 107
Source: Election Commission of Nepal

மாநில எண் 3[தொகு]

அரசியல் கட்சி நேரடித் தேர்தலில் விகிதாசாரத்தில் மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் 42 677,317 35.81 16 58
நேபாளி காங்கிரஸ் 7 559,249 29.57 14 21
மாவோயிஸ்ட் மையம் 15 316,876 16.75 8 23
விவேகசீல சஜா கட்சி 0 124,442 6.58 3 3
ராஷ்டிரிய பிரஜாதந்திரக் கட்சி 0 59,268 3.13 1 1
நேபாள உழைக்கும் விவசாயிகளின் கட்சி 1 41,610 2.20 1 2
ராஷ்டிரிய பிரஜா தந்திர கட்சி (ஜனநாயகம்) 0 28,855 1.53 1 1
நயா சக்தி சக்தி 1 23,958 1.27 0 1
பிறர் 0 59,731 3.16 0 0
மொத்தம் 66 1,891,306 44 110

மாநில எண் 4[தொகு]

அரசியல் கட்சி நேரடித் தேர்தலில் விகிசாத்சார முறையில் மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் 17 373,501 39.04 10 27
நேபாளி காங்கிரஸ் 6 364,797 38.13 9 15
align="left" மாவோயிஸ்ட் 9 119,528 12.49 3 12
நவ சக்தி கட்சி 1 24,625 2.57 1 2
ராஷ்டிரிய ஜனமோர்ச்சா 2 19,376 2.03 1 3
பிறர் 0 54,992 5.75 0 0
சுயேட்சைகள் 1 1
மொத்தம் 36 956,819 100 24 60
Source: Election Commission of Nepal

மாநில எண் 5[தொகு]

அரசியல் கட்சி நேரடித் தேர்தலில் விகிசாத்சாரத் தேர்தல் முறையில் மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் 28 533,613 33.10 13 41
நேபாளி காங்கிரஸ் 7 530,844 32.93 12 19
மாவோயிஸ்ட் 14 239,281 14.84 6 20
பெடரல் சோசலிஸ்ட் கட்சி 3 78,567 4.87 2 5
இராஷ்டிரிய ஜனதா கட்சி 0 54,110 3.36 1 1
ராஷ்டிரிய ஜனமோச்சா 0 32,546 2.02 1 1
பிறர் 0 143,219 8.88 0 0
மொத்தம் 52 1,612,180 100 35 87
Source: Election Commission of Nepal

மாநில எண் 6[தொகு]

அரசியல் கட்சி நேரடித் தேர்தலில் விகிதாசாரத்தில் மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகுகள் % இடங்கள்
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் 14 169,755 34.35 6 20
மாவோயிஸ்ட் மையம் 9 162,003 32.78 5 14
நேபாளி காங்கிரஸ் 1 117,298 23.74 4 5
ராஷ்டிரிய பிரஜா தந்திரக் கட்சி 0 15,629 3.16 1 1
பிறர் 0 29,477 5.97 0 0
மொத்தம் 24 494,162 100 16 40
Source: Election Commission of Nepal

மாநில எண் 7[தொகு]

அரசியல் கட்சி நேரடித் தேர்தலில் விகிசாத்சாரத் தேர்தல் முறையில் மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் 17 295,729 37.38 8 25
நேபாளி காங்கிரஸ் 4 260,955 32.99 8 12
மாவோயிஸ்ட் 10 142,702 18.04 4 14
இராஷ்டிரிய ஜனதா கட்சி 1 36,902 4.66 1 2
பிறர் 0 54,784 6.93 0 0
மொத்தம் 32 791,072 100 21 53
Source: Election Commission of Nepal

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Nepal Elections 2017
  2. More than 65% vote in first phase of Nepal’s historic elections
  3. Voting Ends For Second Phase of Nepal Federal Parliament & Provincial Elections
  4. Election Updates
  5. Federal Parliament and Provincial Assembly Election Updatess[தொடர்பிழந்த இணைப்பு]
  6. EC makes public name list of PR winners for provincial assemblies